நான்  ஆராய்ச்சியாளன் இல்லை.  ரசிகன். மஹான்கள் ரிஷிகள் சரித்திரங்களை பிடித்து படிப்பவன்.  அப்படித்தான் அற்புத மனிதர்  ஸ்ரீ ராமானுஜர்  வாழ்க்கையை வரிசைப்படுத்தினேன். சில விஷயங்கள், வருஷ சம்பவங்கள்  இடம் பெறாமல் இருந்தால் அது என் குறைபாடு. முதல் பதிவு  அவர் பிறந்ததிலிருந்து  33வது வயது வரை நிகழ்ந்த சில சம்பவங்கள் இனி தொடர்வது இரண்டாவது பதிவு. 

31. 1050  - ராமானுஜருக்கு  அப்போது  33 வயது.   அவர்  நிகழ்த்தியவை:
ஸ்ரீரங்கத்தில் மடம் ஸ்தாபித்தல். (திருவிக்ரமன் ப்ரஹாரம் வடக்கு வீதி) சேரன் மடம் (கோயில் ஒழுகு)  முதலியாண்டானை  ரங்கநாதர் கைங்கர்யத்துக்கு நியமித்தல். தர்சன  நிர்வாஹத்துக்கு  கூரேசனை முக்யஸ்தராக நியமனம்.

32.  ஐந்து ஆசார்யர்களில் ஒருவரான  திருவரங்க பெருமாள் அரையரிடம்  திருவாய் மொழியை  ராகம் சந்தமாக பாடக் கற்றது.

33.  பெரிய நம்பியிடம் த்வய மந்த்ரம் இரண்டாவது உபதேசம் பெறுதல். அவர் சொல்லி முதல்                முறையாக  திருக்கோஷ்டியூர்  நம்பியிடம் திருமந்திர மந்த்ரார்த்த உபதேசம் பெற சென்றது.

34. 1051  -   34 வயது.   உறங்காவில்லி ராமானுஜரை  சந்தித்து  சரணடைந்து உறங்காவில்லி தாசரானது.

35.  1052  -   35 வயது.  ஸ்ரீரங்கம் கோவில் வழிபாடு  விதி முறைகளுக்குக்கு  எதிர்ப்பினால் ஏமாற்றம். ஸ்ரீரங்கத்தை விட்டு  திருவெள்ளறை  செல்கிறார்.

36- 1053-  36 வயது.   ஸ்ரீ ரங்கம் திரும்பினார். பஞ்ச (5)  அங்கமாக இருந்த கைங்கர்யத்தை தச (10) அங்கமாக்கினார். 18 வது  முறையாக  திருக்கோஷ்டியூர் நம்பியிடம் உபதேசம் பெற சென்றார். நம்பி அவரை ஒரு  மாத காலம் உபவாசம் இருக்கச் செய்து  திருமந்த்ரார்த்த உபதேசம் செய்தார்  

37.   36 வயது   பெரிய கோயில் நம்பியை ஏற்று  திருவரங்கத்து அமுதனாராக்கினார்.  கோவில் நிர்வாகம்  முற்றிலும் ஸ்ரீ ராமானுஜர் வசம் இப்போது.

38. கிடாம்பி ஆச்சான்,  பிள்ளான்  சிஷ்யர்களானார்கள்.

39. நித்ய க்ரந்தம் உருவாகியது.

40.  திருக்கோஷ்டியூருக்கு  சரம ஸ்லோக உபதேசம் பெற  திரும்பியது.

41.  கூரேசர்  ஒரு மாத காலம் உபவாசம் இருந்து  சரம ஸ்லோக உபதேசம் பெறுகிறார்.

42.  கூரேசருக்கு  முதல்  பெண் குழந்தை பிறக்கிறது.

43. முதலியாண்டான் திருக்கோஷ்டியூர் நம்பிக்கு கைங்கர்யம் செய்து ஸ்ரீ ராமனுஜரிடம்                          உபதேசம் பெற அனுமதி பெறுகிறார்.

44. கத்ய த்ரயம், பங்குனி உத்திர சரணாகதி மந்த்ரம்  உருவாகியது.

45. உத்தம நம்பி  ராமானுஜருக்கு விஷம் கொடுக்க முயற்சி.  ராமானுஜர்  3 நாள் உபவாசம்.        அதிர்ச்சி அடைந்த திருக்கோஷ்டியூர் நம்பி  ஸ்ரீ ரங்கம் வந்து கிடாம்பி ஆச்சானை ராமானுஜருக்கு மடப்பள்ளி கைங்கர்யத்துக்கு நியமித்தல். கிடாம்பி ஆச்சான்  மடப்பள்ளி        ஆச்சான் ஆகிறார். (புரட்டாசி)

46. கூரேசர் திருவரங்கத்து அமுதனார்  அன்னையின்  ஏகாஹோமத்தில் கலந்து கொண்டு                      அவருக்கு கோவில் நிர்வாஹம் ஏற்றுக்கொள்வேன்  என வாக்குறுதி அளிக்கிறார்.  (புரோஹிதம்,
புராண படனம், பிரம்ம ரதம் ஏற்றம் ) - கோவில் சாவிகளை பெற்று  ராமானுஜரிடம் ஒப்படைக்
கிறார்  (ஐப்பசி)

47. 1055 --  37 வயது.  காசிவாசி, தமிழர் அத்வைதி யக்ன மூர்த்தி 18 நாள் வாதம் செய்து தோற்று சிஷ்யராகிறார். தாஸ்ய  அருளாள பெருமாள் எம்பெருமானார் என்று  நாமகரணம் பெறுகிறார்.. அவருக்கென ஒரு தனி  மடம்  அளித்தல்.

48.  இதை அறிந்து  திருக்கோஷ்டியூர் நம்பி, திருமலை ஆண்டான் குடும்பத்தினர்  ராமானுஜர்                சிஷ்யர்களாதல்.

49.  அமுதனாரின்  ''பிரபந்தங்களை'' நிராகரித்து, ''கூரேசர் பற்றி, ஆழ்வார்கள், திவ்ய தேசங்கள் பற்றி  எழுத கூறியது. ராமானுஜரே எப்படி  இயற்றவேண்டும் என்று  கற்பிக்கிறார். .ராமானுஜ                நூற்றந்தாதி உருவாகிறது.

50.  திருவரங்க பெருமாள் அரையரை சந்தித்து, இயற்பா ஒத உரிமை பெற்று  அதை அமுதனாரிடம்  அளித்து  இயற்பாவை ராமானுஜ நூற்றந்தாதியோடு ஓதுவதற்கு ஒப்பம் அளிக்கிறார். (கார்த்திகை மாதம்).

51.  1055-    வயது 37.   அருளாள எம்பெருமானார் ஞான சாரம், பிரமேய சாரம், இயற்றுகிறார். நல்லான் சக்கரவர்த்தி  சிஷ்யராதல்.

52.  ஹோய்சால  மன்னன் பிட்டி தேவன் மனைவி ஸ்ரீரங்கம் வந்து ராமானுஜர் ஆசி பெறுகிறாள். தொண்டனூர்  நம்பியை  சந்திக்கிறாள்.  பேலூர் திரும்பியவள்  ராஜாவை வைஷ்ணவனாக மாற விண்ணப்பிக்கிறாள்.

53.   ஹே விளம்பி வருஷம் (சித்திரை)  ஹொய்சால ராஜா பிட்டி தேவன்  நாராயணனை பிரதிஷ்டை செய்கிறான்.

54. 1056 -  38 வயது.  அனந்தாழ்வான் திருப்பதி சென்று  ''ராமானுஜம்''  என்கிற நந்தவனம் ஸ்தாபிக்கிறார்.  ஏதேனும் அசுத்தம் திருமலையில்  நேர்ந்திருந்தால் அது  நீங்க 3 நாள்  உபவாசம் இருக்கிறார்.

55 .  மாமன்  பெரிய திருமலை நம்பிகளிடமிருந்து  ஸ்ரீ மத் ராமாயண சூக்ஷ்மார்த்தங்களை கற்கிறார்.. இது கீழ் திருப்பதியில் ஒருவருட காலம் தொடர்கிறது.

56.  1058  வயது  40. --   திருமலையில்  ஸ்ரீனிவாச பெருமாள்  முன்னிலையில்  வேதார்த்த  சங்க்ரஹம் துவங்குகிறார். .

57. பெரிய  திருமலை நம்பிகளிடமிருந்து   கோவிந்தரை (எம்பார்) தானமாக பெறுகிறார்.  பிள்ளை திருமலை நம்பி  சிஷ்யராகிறார். (புரட்டாசி)

58. திருமலையிலிருந்து  திரும்பி  காஞ்சியில்  தங்கியிருக்கும்போது,  பெரிய திருமலை நம்பியிடம் திரும்பவும் செல்ல  கோவிந்தர் விருப்பப்படுகிறார்.  ராமானுஜர் அவரை அனுப்பினாலும் பெரிய திருமலை நம்பி  கோவிந்தரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.  ஆகவே  மீண்டும்  கோவிந்தர் காஞ்சிக்கு  வந்து  ராமானுஜரை  தன்னை  மீண்டும் சிஷ்யனாக  ஏற்றுக்கொள்ள  வேண்டுகிறார்.  

59.  கோவிந்தர்  சன்யாசம் பூண்டு  எம்பார் ஆகிறார். .

60. 1059-    41 வயது.  சில  சிஷ்யர்கள்  ராமானுஜருக்கு  ஆழ்வான் மேல்  தனி  பிரேமை இருப்பது கண்டு  அசூயைப் படுகிறார்கள்.  ஒருநாள்  ராமானுஜர்  ஆழ்வானைக்  கூப்பிட்டு   ஒரு வாழை  இல்லை அறுத்துக்கொண்டு வா  என்கிறார்.  மற்ற  சிஷ்யர்களிடம்  ஆழ்வானைக் கவனியுங்கள்  என்கிறார்.  ஆழ்வான்  பச்சை  வாழை மரத்தின் ஒரு  இலையை வெட்டும் போது  ஆழ்வான் கண்களில் கண்ணீர் பொங்குவதை கவனிக்கிறார்கள்.  ழ்வானின் கருணை உள்ளம் புரிகிறது. ஏன்  குரு  ஆழ்வான் மீது அலாதி பிரேமை கொண்டிருக்கிறார் என்பது  தெரிகிறது.

61.   தனக்கென ஒரு தனி  மடம்  அமைத்துக் கொடுத்திருந்தாலும், தடுப்புச் சுவற்றை இடித்து அருளாள  பெருமானார் ஆசார்யனின்  மடத்தோடு  இணைந்து அவரோடு வாழ முனைகிறார் .

62.  ஸ்ரீரங்கம் கோவில் பாதுகாப்பு   உறங்கா வில்லி  தாசரிடம் ஒப்படைக்கப்படுகிறது. கோவில் நிர்வாஹம் முதளியாண்டானைச் சேர்கிறது.  பரிவார  நிர்வாஹம்  அகளங்க  நாட்டாழ்வானிடம்  அமைகிறது. ராமானுஜர்  திக்விஜயம்  புறப்படுகிறார்.  கூரேசரும் மற்றும் சில சிஷ்யர்களும் அவரைத் தொடர்கிறார்கள்.

63. குறுங்குடியில் சிஷ்யனாக சேர்ந்த  பெருமாள் என்பவருக்கு  ராமானுஜர்  த்வய உபதேசம் செய்கிறார். பெருமாள்  இனி  அவர் பெயர் வைஷ்ணவ நம்பி. .

64.  காஷ்மீர்  போகும்  வழியில்  துவாரகையில் ஒரு அதிசயம்.  அனேக  அத்வைதிகள் வாதத்திற் கழைக்க   சாரதா பீட  சரஸ்வதியின் சந்நிதியில் வாதம் தொடர்ந்து இறுதியில்  அத்வைதிகள் தோல்வியை ஒப்புக்கொள்கிறார்கள். போதாயன  வ்ருத்தி நூல் பெறுகிறார். வழியில் அத்வைதிகள் அவரை மடக்கி  போதாயன  வ்ருத்தியை  கைப்பற்றுகிறார். ராமானுஜர்  வருத்தத்தைக் கண்ட கூரேசர்  ''குருநாதா,  நீங்கள் ஒரு கவலையும் பட  வேண்டாம்.  போதாயன வ்ருத்தி நூலை முழுமையாக   நான்  மனப்பாடம் செய்துவிட்டேன். ஓலைச்சுவடி  போனதற்கு வருந்த வேண்டாம். அது மனப்பாடமாக  என் மனதில் ஜாக்ரதையாக தங்களுக்காக  இருக்கிறது ''என்கிறார்.

65.   1060 --  வயது  42. பூரி  ஜகன்னாத்  யாத்ரை.  ராமானுஜ மடம் ஸ்தாபிதம்.  பாஞ்சராத்ரம் வழிபாட்டு முறை அறிமுகத்திற்கு உள்ளூர் அர்ச்சகர்கள் எதிர்ப்பு.

66   திருவேங்கடத்திற்கு  ராமானுஜர்  வருகை.   சைவர்கள் ஆலயம்  தங்களது தெய்வம் உருவம் கொண்டது,  விஷ்ணு அல்ல என்று  வாதாட அவர்களால்  ஏற்கனவே களையப்பட்ட  சங்கு சக்ரத்தை ஏற்றுக்கொள்ள  பெருமாளிடம் கோரிக்கை. ஸ்ரீ பாஷ்யம்  எழுதத் துவங்குமுன்  மங்கள ஸ்லோகம் இயற்றுகிறார்.

67.   ஸ்ரீ ரங்கம்  திரும்புகிறார் .

68. 1062 --  வயது  44.   கூரேசருக்கு   இரு குழந்தைகள் பிறக்கிறார்கள்.  அவர்களுக்கு  ராமானுஜர் பராசர பட்டர்  மற்றும்  வியாச பட்டர் என்று  பெயர் சூட்டுகிறார்.

69.     ஸ்ரீ பாஷ்யம்  எழுதுவது  பூர்த்தியாகிறது.

70.     1074 --    வயது  56.    ஒரு  மூடிய  அறைக்குள்  ராமானுஜர்  ஒரு  பாசுரத்திற்கு  அபிநயம்  செய்கிறார்.   சாவித்வாரம் வழியாக  பிள்ளான்  இதை பார்த்து விட்டு ஆச்சார்யாரின்  அபிநயம், நம்மாழ்வாரின்  திருவாய் மொழியில்  ஒரு பாசுரத்திற்கு உண்டானது அது  என்று  சரியாக அனுமானம் செய்கிறார்.  ராமானுஜர்  பிறகு  அதை கேள்வியுற்று மகிழ்கிறார்.  பிள்ளான்  நாதமுனிகள் பரம்பரையைச்  சேர்ந்தவர் என்பதால் அவருக்கு  குருகூர்பிரான் பிள்ளான் என்று  பெயர் சூட்டி தனது ஞான புத்ரனாக  ஆச்ரயிக்கிறார்.