ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கையில் நமக்கு தெரிந்ததை விட தெரியாமல் போன விஷயங்கள் எண்ணற்றவை. அவற்றை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எவராவது அறிந்து பிற்காலத்தில் தேடுவார்களே என்று கருதி எழுதி வைத்திருந்தால் தான் நமக்கு கிடைக்கும். காகிதம், அச்சு இல்லாத காலத்தில் வாய் மொழியாகவே அவற்றை சிலர் அறிந்து நமக்கு சொல்ல மறந்து போய் இருக்கலாம். ஆகவே அறிந்தவை தெரிந்தவையை வைத்துக்கொண்டு அவர் வாழ்க்கைப் பாதையில் அடிச்சுவடைப் பின்பற்று கிறோம். இந்த பதிவுடன் அது நிறைவு பெரும்.
71. 1076 -- 58 வயது. - பிள்ளானின் சுவாமி நம்மாழ்வார் திருவாய் மொழி பாசுர ஞானத்தை மெச்சி, ராமானுஜர் பிள்ளானை திருவாய் மொழிக்கு முதன் முறையாக ஒரு வியாக்யானம் எழுத பணிக்கிறார். அது பிள்ளானின் 6000 படி என்று பெயர் பெறுகிறது.
72. பிள்ளானின் 6000 படி நிறைவு பெறுகிறது.
73. 1078- வயது 60. தீவிர சைவனான அரசன் '' சிவாத் பரதரம் நாஸ்தி ' (சிவனை விட பெரிய தெய்வம் இல்லை) என்று ஓலையில் எழுதி அதை ராமானுஜரின் ஒப்புதல் பெற அனுப்புகிறான். நாலூரான் என்கிற கூரேசரின் சிஷ்யன் ஆச்சார்யன் அதில் கையொப்ப மிடுவது நல்லது என சிபாரிசு செய்கிறார். கூரேசருக்கு இதில் ஏதோ சூதும் ஆபத்தும் உள்ளது என்று சந்தேகம் பிறக்கிறது. ''குருநாதா நீங்கள் உடனே இந்த ஊரை விட்டு வெளியேறவேண்டும். ஆபத்திலிருந்து தப்ப வேண்டும்'' என்று நிர்பந்திக்கிறார்.
74. ராமானுஜர் கர்நாடக மாநிலம் (மேல்கோட்டை ) செல்கிறார். .
75. கூரேசர் ராமானுஜருக்கு பதிலாக சோழ மன்னன் அரண்மனை செல்கிறார். அவருடன் பெரிய நம்பி செல்கிறார். இருவருமே அரசனின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்காததால் கண்களை இழக்கின்றனர்.
76. ராமானுஜருடன் சென்ற கோஷ்டி மேல்கோட்டையை அணுகுகிறது. யதுகிரியில் 7 நாள் உபவாசம் இருக்கிறார்.
77. 1078 -- வயது 60. காட்டில் வேட்டையாடும் மக்கள் சிலர் ராமானுஜரையும் அவரது கோஷ்டியினரையும் கண்டு பக்தி உணர்ச்சி கொள்கிறார்கள். வரவேற்கிறார்கள்
78. தனது கோஷ்டியினரையும் ஒரு வேடுவனையும் அனுப்பி மேல்கோட்டை ஆலயத்துக்கு செல்லுங்கள். என் சிஷ்யர்களை அழைத்து வாருங்கள் என்கிறார் .
79. வேடர்களின் முதல் கூட்டத்தினர் ராமானுஜரை 6 மைல் தொலைவில் உள்ள மற்றொரு வேடனிடம் அவரை ஜாக்ரதையாக பாதுகாக்கும்படி ஒப்படைக்கிறார்கள்..
80. அந்த புது வேடன் ராமானுஜரையும் அவர் கோஷ்டியையும் சகல மரியாதைகளுடன் வரவேற்று ஹர்த்தன ஹல்லி மலையடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு அழைத்து செல்கிறான். அங்கு தான் கட்டளைவாரி கொங்கு பிராட்டி தம்பதிகள் வாழ்ந்தனர்.
81. கொங்கு பிராட்டி தம்பதியரோடு 4 நாள் தங்கி பிராட்டியின் கணவருக்கு திருவரங்க தாசன் என தாஸ்ய நாமம் சூட்டுகிறார்.
82. காவிரி வட கரையில் ராமநாத புரம் என்கிற ஊருக்கு சென்று அங்கு 3 நாள் தங்குகிறார். .
83. மிதிலாபுரி என்ற ஊரை அடைந்து அங்கு யோக நரசிம்ம ஆலயத்தில் தனது கோஷ்டியோடு தங்குகிறார்.
84. 1079 --- வயது 61. மிதிலாபுரி (கோவை ) வாழ் ஸ்மார்த்தர்கள் அத்வைதிகள். அவர்கள் ராமா னுஜரை வாதத்திற் கழைத்து தோற்கின்றனர். அந்த கிராமம் இனி சாளக்ராமம் என்ற பெயர் சூட்டப்படுகிறது.
85. வடுக நம்பி சிஷ்யன் ஆகிறார்.
86. சாளக்ராமம் ஊருக்கு தொண்டனூர் நம்பி வருகை. ராமானுஜரையும் கோஷ்டியையும் தொண்டனூர் அழைக்கிறார். உள்ளூர் யோக நரசிம்ஹர் ஆலயத்தில் தங்க ஏற்பாடு செய்கிறார். யதுகிரி (திரு நாராயணபுரம்) வைபவம் பற்றி விவரிக்கிறார்.
87 தொண்டனூரில் ஒரு திரைக்குப் பின்னாலிருந்து கொண்டு எதிர்த்த சில ஜைன சன்னியாசிகளுடன் வாதம் செய்கிறார். அவர்கள் தோற்கிறார்கள். தோற்ற ஜைன சன்யாசிகள் தங்கள் மடத்தை இடித்துவிட்டு அந்த கற்களினால் திருமலாசாகரம் புஷ்கரணியை நிர்மாணிக்கிறார்கள் .
88 கூரேசர் திருமாலிருஞ்சோலைக்கு குடும்பத்தோடு திரும்பி சுந்தர பாஹுஸ்தவம் 87. ராஜா விஷ்ணு வர்த்தனன் (இவனே பிட்டி தேவன் ) மனைவியோடு வந்து தொண்டனூரில் ராமானுஜரின் திருவடிகளில் சரணடைகிறான்.
88. புனித திருநாமம் மண் கிடைக்காததால் வருந்தி ராமானுஜர் 3 நாள் உபவாசம் இருக்கிறார். யதுகிரி சென்று அங்கே கல்யாணி புஷ்கரணியின் தென் மேற்கே நாராயண பெருமாளை தரிசிக்கிறார்.
89. அன்றிரவே, திருநாமம் மண் தேடி வருத்தமுற்ற ராமானுஜர் கனவில் அவர் தேடியதை கல்யாணி தீர்த்தத்தின் வடமேற்கு கரைப் பக்கம் காண்கிறார்.
90. 1080 -- வயது 62. ராமானுஜர் சிதிலமான நாராயணன் ஆலயத்தை புதுப்பித்து திரு நாராயணனை ஸ்தாபித்து கும்பாபிஷேகம் செய்தபின் அந்த கிராமத்துக்கு(துக்க கருடன ஹல்லி) திருநாராயண புரம் என்று பெயர் சூட்டுகிறார்.
91. 1081 -- வயது 63. ராமானுஜர் வடக்கு நோக்கி பிரயாணம். எப்படியாவது ராமப்ரியரை (திருநாராயணபுரம் உத்சவ விக்ரஹம்) மீண்டும் பெற தேடி அதை டில்லியில் கண்டுபிடித்துக் கொண்டு வருகிறார். உத்சவர் செல்லப் பிள்ளை என நாமகரணம் சூட்டப்படுகிறார்.
92 . திருநாராயண புரம் ஆலய விசேஷங்களில் தாழ்ந்த குல மக்களுக்கு விசேஷ உரிமைகள் அளித்து அவர்களை ஹரிஜன் (திருக் குலத்தார்) என அழைக்கிறார்.
93. 1085 -- வயது 67. தொண்டனூரில் லக்ஷ்மி நாராயண அர்ச்சாவதார மூர்த்தி பிரதிஷ்டை செய்கிறார்.
94. 1089 -- வயது 71. திருநாராயணபுரத்தில் செங்காமி மாயா வாதிகளை வாதத்தில் வென்று ராமானுஜ மடம் ஸ்தாபிக்கிறார் . பேலூரில் பஞ்ச நாராயணனை பிரதிஷ்டை செய்கிறார்.
95 -- 1090 - வயது 72. ஸ்ரீரங்கத்திலிருந்து வருகை தந்த சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் ராமானுஜருக்கு அவரது ஆசார்யன் பெரிய நம்பிகள் பரமபதம் அடைந்ததை தெரிவிக்கிறார்கள். ராமானுஜர் அவருக்கு ஸ்ரீ சூர்ண பரிபாலனம் மற்றும் அத்யயன உத்சவம் (இயல் சாற்றுமுறை ) செய்விக்க கோருகிறார். பிறகு மாருதி சிறியாண்டான் எனும் சிஷ்யரை திருமாலிருஞ்சோலைக்குச் சென்று கூரேசர் நலம் விசாரித்து வர அனுப்புகிறார்.
96. சிறியாண்டான் திருமாலிருஞ்சோலையில் கூரேசரை சந்தித்து ராமானுஜரின் வாழ்த்து செய்தி சொல்கிறார். அப்போதைய சோழ மன்னன் ராமானுஜரை ஸ்ரீரங்கம் திரும்பிவர விடுத்த அழைப்பு மடலை எடுத்துக்கொண்டு கல்யாணி தீர்த்த கரையில் ராமனுஜரிடம் அளிக்கிறார்.
97. திருநாராயணபுரம் பெருமாள் கைங்கர்யத்துக்கும், ஆலய நிர்வாஹத்துக்கும் 52 சிஷ்யர்களை நியமிக்கிறார். அவர்களுக்கு ஆசியளித்து தமர் உகந்த மேனி யை அங்கே ரக்ஷையாக பிரதிஷ்டை செய்து விட்டு ஸ்ரீ ரங்கம் திரும்புகிறார்.
98. கூரேசர் திருமாலிருஞ்சோலை யிலிருந்து திரும்பி ஸ்ரீரங்கத்தில் ஆசார்யன் திருவடிகளில் சரணடைகிறார்.
99. ராமானுஜர் காவேரி ஸ்நானம் அனுஷ்டானம் எல்லாம் முடித்து கூரேசர் இல்லம் வந்து அவரைத் தேற்றுகிறார்.
100. ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாஹத்தை ராமாநுஜரிடம் மீண்டும் சோழ ராஜா அளிக்க, ஆசார்யன் சந்தோஷத்தோடு அதை ஏற்றுக்கொள்கிறார்.
101. 1091-- வயது 73, ஆழ்வார் திருநகரிக்கும் ஸ்ரீரங்கத்துக்கு இடையே பாதையில் கள்வர் பயத்தினால் தடைப்பட்டிருந்த அத்யயன உத்சவத்தை மீண்டும் துவங்குகிறார். சுவாமி நம்மாழ்வாருக்கும் ஆழ்வார்களுக்கும் சிலாரூபம் புதுப்பிக்கப்படுகிறது. பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
102. திருமலையில் பிள்ளை திருமலை நம்பி பரம பதம் அடைந்து அந்திம கிரியைகள் நிறைவேறிய செய்தி அறிந்து திருப்பதி செல்கிறார்
103. திருப்பதியில் கோவிந்தராஜர் நூதன அர்ச்ச மூர்த்தி பிரதிஷ்டையோடு ஆலய புனருத்தா ரணம் நடத்துகிறார்.
104. 1092 - வயது 74. திருக்கச்சி நம்பிகள் பரமபதம் எய்துகிறார்.
105 - 1093 -- வயது 75. கூரேசரை ஸ்ரீ வரதராஜஸ்தவம் இயற்றக் கோருகிறார். கூரேசர் கனவில் வரதராஜர் தோன்றுகிறார். கூரேசர். ராமானுஜர் இருவருமே காஞ்சி செல்கிறார்கள்.
106. ஸ்ரீ பாஷ்யம் விரிவாக்கம்.
107. 1098 - வயது 80. திருமாலிருஞ் சோலைக்கு கூரேசருடன் சென்று, ஆண்டாள் நாச்சியார் திருமொழி, நாறு நறும் பொழில் பாசுரத்தில் வேண்டிக்கொண்டபடி 100 தடா அக்காரவடிசல் 100 தடா வெண்ணையை சுந்தரராஜ பெருமாளுக்கு அளிக்கிறார்.
108 1107 -- வயது 89. கூரேசர் பரம பதம் அடைகிறார்.
109- 1117 வயது 99-100, சதாபிஷேகம். யதிராஜர் என்கிற பிருது பெருகிறார்.
110. 1119 வயது 102. ராமானுஜ தாசன் என்ற ஒரு சிற்பி வடித்த ஸ்ரீ ராமானுஜரின் சிலா வடிவம் தாம் உகந்த திருமேனி என்று அவரது அவதாரஸ்தலமான ஸ்ரீ பெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
111. 1137 வயது 120. ஸ்ரீ ராமானுஜர் பரம பதம் அடையம் முன்பு, பரமாத்மாவுக்கு நித்ய கைங்கர்யம் புரிகிறார். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய வளர்ச்சி இனி உங்களது என்று பிள்ளான், கிடாம்பி ஆச்சான், நடாதூர் ஆழ்வான், எம்பார் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டார்.
மேற்கண்ட 120 குறிப்புகள் ஸ்ரீ ராமானுஜரின் 120 வருட பூலோக யாத்ரையை உணர்த்த உரைக்கப்பட்டவை. சில கால கட்டங்கள் தவறாக குறிப்பிட்டிருநக்கலாம், சில பெயர்கள் தவறாக ச்சொல்லப்பட்டிருக்கலாம் , நிகழ்வுகள் கூட சில முன்னும் பின்னுமாக இருக்கலாம். க்ஷமிக்க வேண்டும்.
எது எப்படியாயினும் சரி, ஸ்ரீ ராமானுஜர் ஒரு யுக புருஷர். என்னதான் சொன்னாலும் அவர் மகிமை உலகறிந்தது. அவரது 120 வருட பூலோக யாத்திரை புனிதமானது மட்டுமல்ல. ஒரு கணமும் வீணாகாமல் லோக க்ஷேமத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பது கல்லில் செதுக்கியது போன்ற மாறாத உண்மை. ஸ்ரீ ராமானுஜர் எனும் திவ்ய புருஷர் வாழ்க்கை ஒரு அழியாத ஓவியம். அவர் ஒரு அபூர்வ பிறவி, அதிசய மனிதர். ஆதிசேஷனை இதற்குமேல் என்ன சொல்ல முடியும்?.
பதிவுகள் இத்துடன் நிறைவு பெறுகிறது.