எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 4

(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)

அனுப்பியவர் : சாந்தி
அருப்புக்கோட்டை

நான் பெருமாளின் பக்தை என்பதில் எப்போதும் எனக்கு சந்தோஷம் நானும் என் கணவரும் அரசு ஊழியர்கள் ஒரே மகன் அவன் மேல் உயிராய் இருப்பேன் மகனும் மிகுந்த பாசம் கொண்டவன் பெருமாளின் அளவில்லாத அனுக்கிரகத்தால் அவனும் நன்றாகப் படித்து அவனின் குறிக்கோளான அமெரிக்கா மேல்ப்படிப்பு படித்து அங்கேயே நல்ல வேலையில் சேர்ந்தான்

25 வயதிலேயே பெண் கொடுக்கிறோம் என்று வந்தார்கள்.நல்ல குடும்பம்.நல்ல பெண்.இரண்டு வருடம் போகட்டும் என்றோம்.சரி என்றார்கள்.நன்றாக போய்க்கொண்டு இருந்த வாழ்க்கையில் இடி விழுந்ததைப் போல திடீரென்று வேலை இல்லை என்று சொல்லி விட்டார்கள். விசா இருக்கிறது.ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் அங்கே இருக்க முடியாது.நான் அழுதேன் முறையிட்டேன்.

ஏனப்பா இந்த சோதனை என்று அழுதேன். பெருமாள் அமைதியாக இருந்தார்.எனக்கு பெருமாளிடம் முறையிடுவது தவிர ஒன்றும் தெரியவில்லை.

என் மகன் தன் அமெரிக்கா ஆசையை விட்டு விட்டு இந்தியா வந்தான். அதன் பிறகு நடந்தது எல்லாம் அவர் கருணை.என் மகன் இந்தியா வந்தவுடன் பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது.நல்ல மதிப்பு புகழ் கிடைத்தது.அதோடு கனடா போவதற்காக பரீட்சைகள் எழுதினான்.வெற்றி கிடைத்தது.4 மாதங்களில் கனடா நாட்டு PR கிடைத்தது.

இதில் நாங்க ஏற்கனவே பேசி வைத்த பெண் வீட்டாரும் இடையில் மனம் மாறவில்லை. திருமணம் மிக விமரிசையாக ஆண்டாள் ரெங்கமன்னார் சாட்சியில் நடந்தது.மகன் இந்த வேலையை ராஜினாமா பண்ணிவிட்டு கனடா சென்றான். கொரோனா பாதிப்பு இருக்கிறது உடனே வேலை கிடைப்பது சிரமம் என்றான்.ஆனால் என் பெருமாளின் கிருபையால் போன 15 நாட்களில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது.இப்போது எல்லாம் நிம்மதியாக இருக்கிறது.

இது எல்லாமே 2 வருடங்களுக்குள் நடந்து விட்டது. நினைத்துப் பார்த்தால் என் மகன் அமெரிக்காவில் இருந்த இடத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகம். கோரத்தாண்டவம் ஆடுகிறது.இதெல்லாம் என்னால் தாங்க முடியாது என்றுதான் என்னை கொஞ்சம் அழவைத்து விட்டு இப்போது நிம்மதியான வாழ்க்கையை கொடுத்து இருக்கிறார்

இதிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம், நமக்கு ஏன் இப்படி நடக்குறது என்று புலம்பக்கூடாது.எது நடந்தாலும் நம் நன்மைக்கே செய்வார் என்று தெரிந்து கொண்டு நாம் பெருமாளின் திருவடிகளை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

அவனே ஸர்வம்.
ஸர்வமும் அவனுக்கே ஸமர்ப்பணம்.
நன்றி

" ஓம் நமோ நாராயணாய "

நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்

அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண் 9500074173

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!