(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)
அனுப்பியவர்
சீதாலக்ஷ்மி ஶ்ரீதரன்
குரோம்பேட்டை - சென்னை 44
வணக்கம் 'எனது வாழ்வில் பெருமாள்' இதில் எனது அனுபவத்தை எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி.. நிறைய அதிசயங்கள் நடந்து இருக்கின்றன. அதில் ஒன்றை மட்டும் உங்களுடன் பகிர்கிறேன். இது நடந்து 2,3 வருடங்கள் ஆகிறது எங்கள் நண்பர் திருவல்லிக்கேணியில் நடக்கும் 'தவனோத்ஸவத்திற்கு' அழைப்பார். ஒரு வருடம் எங்களால் போக முடியவில்லை. என்னுடைய மனது பெருமாளை போய் சேவிக்க முடியவில்லையே என்று அடித்துக்கொண்டது. அன்றே பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு போகலாம் என்ற கிளம்பி போனேன். சின்ன திருப்பதி என்று அந்த கோவிலுக்கு பெயர் (ஶ்ரீனிவாசர்) என்னுடைய துக்கம் சந்தோஷம் எல்லாவற்றையும் அவரிடம் தான் கொட்டுவேன். அன்று அலங்காரம் அங்கு 'பார்த்தசாரதி' போல் செய்து இருந்தார். எனக்கு பார்த்த உடன் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. அந்த ஆனந்தத்திற்கு அளவே கிடையாது.
கிருஷ்ணா
நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்.
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173