அனுப்பியவர் ; கிருஷ்ணமூர்த்தி லலிதா
(திருப்பதி மாமா) - திருநெல்வேலி
(திருப்பதி மாமா) - திருநெல்வேலி
அனைவருக்கும் வணக்கம் கருணை கடல் ஆனந்த நிலையத்தின் அமுதம் திருப்பதி ஏழுமலையான் எனது வாழ்வில் நடத்திய அற்புதம் சொல்ல வார்த்தைகள் கிடைக்காது அனைத்தும் எம்பெருமான் எனக்கு அருளிய அமுதம்
நான் திருப்பதி ஏழுமலையான் ஸ்ரீவாரி சேவைக்கு (உழவாரப்பணி) கடந்த 15 வருடங்களாக மக்களை மாதமாதம் அழைத்துச் செல்வது வழக்கம் இந்த முறை என்னுடன் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து சுமார் 75 பேர் வந்திருந்தார்கள் நான்கு மாதங்களுக்கு முன்னால் ரயிலில் முன்பதிவு தொடங்கும் தேதியில் படுக்கை வசதியுடன் முன்பதிவு செய்து விடுவேன் பின்னர் திருப்பதி சேவை முடித்து வரும் வழியில் அனைவரும் என்னிடம் டிக்கெட் பணம் தருவார்கள் நாங்கள் 11/11/2011 அன்று திருப்பதி சேவைக்கு கிளம்பினோம் சேவை முடிந்து 17/11/2011 அன்று மாலை கிழ்திருப்பதிக்கு வந்து ஸ்ரீனிவாசா காம்ப்ளக்சில் லாக்கர் போட்டு தங்கினோம் மறுநாள் மதியம் 12 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தான் ரயில் எனவே காலையில் T.T.D தேவஸ்தானம் மூலம் காலை 6 மணிக்கு பேக்கேஜ் டூர் பஸ் தினசரி கிளம்பும் காலை 10 மணிக்கு திரும்ப ஸ்ரீனிவாசா காம்ப்ளக்ஸ் வந்து விடும் அதில் பேக்கேஜ் டூர் போவது என தீர்மானம் செய்தோம் அதன்படி கிளம்பினோம்
ஆனால் ஓரிடத்தில் பஸ் பிரேக் டவுன் ஆனது ஒருவழியாக சரிசெய்து அலர்மேல்மங்காபுரம் வரும்போது மணி 10.40 சீக்கிரம் தரிசனம் முடித்து விடலாம் என வரிசையில் நின்றோம் கூட்டம் மிக அதிகமாக இருந்தது மணி 11.20 ஆகிவிட்டது வரிசை நகரவே இல்லை வேறு வழி இல்லாமலும் ரயில் 12 மணிக்கு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நான் எல்லோரையும் வெளியில் வரும்படி அழைத்தேன்
ஒரு வழியாக அனைவரையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீனிவாசா காம்ப்ளக்ஸ் வரும்போது மணி 11.40 வேகமாக லாக்கர் மற்றும் அறைகளை காலி செய்து கிடைத்த ஆட்டோவில் ஏறி ரயில் நிலையத்தில் வந்து இறங்கும் போது மணி 11.55 அனைவரும் எந்த முன்பதிவு பெட்டி கிடைத்தாலும் ஏறிக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டேன் முதலாவது நடைமேடையில் ரயில் புறப்பட தயாராகியிருந்த நேரத்தில் ஒடி சென்று ஏறிவிட்டோம் யார் எந்த பெட்டி என தெரியாமல் அனைவரும் ஏறியதும் ரயில் கிளம்பியது பெருமாள் கிருபை இது நான் ஆட்டோவில் இருந்து இறங்கும் போது என்னுடைய பை ஒன்றை தவற விட்டு விட்டேன் ரயிலில் தேடினால் பையை காணோம் அதில்தான் அனைவரது டிக்கெட் மற்றும் பணம் இருந்தது நிமிடத்தில் ஆடிபோனேன் பெருமாளே...என்ன செய்ய போறேன் என பரிதவித்து இருகரம் கூப்பி கண்ணீர் மல்க ஆபத்பாந்தவனை மனமுருகி பிரார்த்தனை செய்த போது பையைகொண்டு வந்து கொடுத்தார் ஆட்டோ டிரைவர் நீங்கள் தவறவிட்ட பையை ஓடி வந்து கொடுத்ததாக கூறினார்
திருமலையப்பனை கோவிந்தா கோவிந்தா என சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணி கண்ணீருடன் பெற்றுக் கொண்டேன் ரயிலில் என்னுடன் சேவைக்கு வந்த அனைவரும் பெருமாளின் கருனையை நினைத்து போட்ட கோவிந்தா கோஷம் ரயிலை தாண்டி திருமலையை தொட்டது என்னப்பன் கருனையை சொல்ல வார்த்தைகளே இல்லை
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173