ராமாநுஜர் காலத்தில் திருவரங்கத்தில் பராங்குசன் என்றொரு வைணவர் வாழ்ந்து வந்தார். அவர் சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட அனைத்து ஆசார அனுஷ்டானங்களையும் முறைப்படிப் பின்பற்றி வந்தார். ஆனால் தந்தைக்கு நேர் மாறாக அவருக்கு ஒரு தனயன். அவன் பெயர் புண்டரீகாட்சன். அவன் சூதாட்டம் போன்ற தீய பழக்க வழக் கங்களில் ஈடுபட்டு வந்தான்.

ஒருநாள் பராங்குசன் புண்டரீகாட்சனிடம், “மகனே! நீ நெற்றியில் திலகம் அணிந்து கொள்வதில்லை. கோவிலுக்குச் செல்வதி ல்லை. இறைவனின் நாமங்களைச் சொல் வதில்லை. ஆழ்வார்களின் பாசுரங்களை ஓதுவதில்லை. இப்படி எந்தநல்ல பழக்கமு ம் இல்லாமல் நீ இருக்கிறாயே! அரங்கனே கதி என்றல்லவோ நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்? சாஸ்திர சம்பிரதாயங்க ளை வழுவாது பின்பற்றியவர்களின் குலத்தில் பிறந்து விட்டு நீ இப்படிச் சூதாடுவது முறையா?” என்று கேட்டார்.

ஆனால் தந்தையின் பேச்சுக்களை மகன் பொருட்படுத்தவே இல்லை. பராங்குசன் தனது நண்பரிடம் தன் மகனி ன் நடவடிக்கைகளைப் பற்றிச் சொல்லி வருந்தினார். அப்போது அந்த நண்பர், “மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணறு ஞானம் தலைக் கொண்டு நாராணற்கு ஆயினரே! என்ற பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீரா?” என்று கேட்டார். “ஆம்! இது ராமாநுஜரைப் பற்றித் திருவர ங்கத்து அமுதனார் இயற்றிய ராமாநுஜ நூற்றந்தாதி பாடலாயிற்றே! இறைவனே பூமியில் வந்து அவதரித்து உபதேசித்த போதும் திருந்தாத மக்கள் எல்லாம், ராமாநுஜரின் உபதேசங்களைக் கேட்டுத் திருந்தினார்கள் என்று கூறும் பாடல் அல்லவா இது?” என்றார் பராங்குசன். “உங்கள்மகனையும் ராமாநுஜரிடம் அனுப் புங்கள்! அவரது உபதேசத்தைக் கேட்டால் அவன் மனம் திருந்தி விடுவான்!” என்றார் அந்த நண்பர். பராங்குசனும் தன் மகனை ராமாநுஜரின் காலட்சேப கோஷ்டிக்கு அனுப்பி வைத்தார். புண்டரீகாட்சனின் நடவடிக்கைகளைப் பற்றி ஏற்கனவே பராங்குசனிடம் இருந்து அறிந்து கொண்ட ராமாநுஜர்,.அவனுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக் கூறினார்.

“நாம் வெளிநாடுகளுக்குச் செல்லும் போ து, அங்கு வாழும் நம்மவர்கள், நமது ஆடை மற்றும் தோற்றத்தைக் கொண்டு, இவர்க ள் நம்மைச் சேர்ந்தவர்கள் என்று அடையா ளம் கண்டு கொள்கிறார்கள் அல்லவா?

அதுபோலத் தான் இறைவனிடம் செல்லும் போது, நெற்றிக்குத் திலகம் அணிந்து, முறைப்படி வேஷ்டி உடுத்திச் சென்றால், இவன் நம்மைச் சேர்ந்தவன் என்று இறை வனும் நம்மை அடையாளம் கண்டுகொள் வான்! நமக்கு நிறைய அருள்புரிவான்! ஆகையால் வெளி அடையாளங்கள் தேவை இல்லை என்று எண்ணாமல், நீ நெற்றிக்குத் திலகம் அணிய வேண்டும்! முறைப்படி வேஷ்டி உடுத்த வேண்டும்!” என்றெல்லாம் அறிவுரை கூறி அவனைத் திருத்தினார் ராமாநுஜர். அன்று முதல் வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றிக்குத் திலகம் இட்டுக் கொண்டு தினமும் ராமாநுஜரின் காலட்சேபத்துக்குச் சென்றான் புண்டரீகாட்சன். ஆனால் அவ னது பழைய நண்பர்கள் திடீரென ஒரு நாள் அவன் மனதை மாற்றி அவனைச் சூதாட அழைத்துச் சென்றார்கள். காலட் சேபம் கூற வந்த ராமாநுஜர், புண்டரீகா ட்சன் வரவில்லை என்பதை உணர்ந்தார். அவன் சூதாடச் சென்றிருந்ததை மற்ற சீடர்கள் மூலம் அறிந்து கொண்டார் அவன் சூதாடிக் கொண்டிருந்த இடத்துக்கே அவனைத் தேடிச் சென்றார் ராமாநுஜர்.

ராமாநுஜர் வருவதைக் கண்ட புண்டரீகா ட்சன், “நான் உங்களை விட்டு விலகிவிட் டேன்! இனி என்னைத் தேடி வராதீர்கள்!” என்று கூறினான். ராமாநுஜரோ, “நீ என்னை விட்டிருக்கலாம் ஆனால் நான் உன்னை விடுவதாக இல் லை! வா! எண்ணில் அடங்காத அனைத்து உயிர்களும் இறைவனின் சொத்து. அச் சொத்துக்களை இறைவனாகிய உடையவ னிடம் சேர்க்க வேண்டியது என் கடமை. அதனால் இறைவனின் சொத்துக்களுள் ஒன்று கூட வீணாவதை நான் அனுமதிக்க மாட்டேன்!” என்று சொல்லி, அவனைக் காலட்சேபத்துக்கு அழைத்து வந்தார்.

தொடர்ந்து ராமாநுஜரின் காலட்சேபங்க ளைக் கேட்டு, புண்டரீகாட்சன் அரங்கனுக்கே அடியவனாகி இறுதியில் முக்தியும் பெற்றான். ராமாநுஜர் கூறியபடிஎண்ணில் அடங்காத அனைத்து உயிர்களையும் தனது சொத்தாகத் திருமால் கொண்டிருப்பதால், அவர் ‘அஸங்க்யேய:’ என்றழைக்கப்படுகிறார்