கருட புராணம் - 21

21. கர்மங்களை செய்ய கடமைப்பட்டவன் புத்திரன்.

“புள்ளரசே! ஒருவன் தனக்கே தனது இல்லாள் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தைத் தன் கண்ணால் பார்த்து விட்டானென்றால் புத் என்ற நரகத்தை அந்த ஜென்மத்தின் இறுதியில் காணமாட்டான். மணம் புரிந்து கொண்ட ஒருவனுக்கும் ஒருத்திக்குமே புத்திரன் பிறந்தால், அவள் குலத்துப் பிதிர்த் தேவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஒருவனுக்கு முதல் மகனே அதாவது தலைச்சவனே தன் தந்தை மரித்தால் அவனது ஈமக் கிரியைகளையும் கர்மங்களையும் செய்ய கடமைப்பட்டவன். மற்ற புத்திரர்கள் இருந்தால் இவர்கள் இறந்த தகப்பனைக் குறித்து சிறிது கர்மங்களும் சிரார்த்தாதிகளையுமே செய்யக் கூடும்.

“ஒருவன் தனக்கு பௌத்திரன் பிறந்து அவனை எடுத்தப் பார்த்த பிறகே மரிப்பானாகில், இறுதிக் காலத்தில் அவன் நல்லுலகையடைவான்.

“கொள்ளுப் பேரனைப் பார்த்த பிறகு மாண்டவன், அதைவிட நல்லுலகை அடைவான்.

“பெண்ணைப் பெற்றவனுக்கு வாய்க்கும் மணமகன், அந்தப் பெண்ணுக்கு விலைகொடுக்காமல் திருத்துழாயோடு அவன் கன்னிகாதானம் செய்து கொடுக்க, அவளை மணம் புரிந்து கொண்டு அவளோடு வாழ்ந்து புத்திரனைப் பெறுவானேல், அந்தப் புத்திரன் தன் குலத்து இருபத்தோரு தலைமுறையினரையும் கரையேற்றுவான்.

“அவ்வாறு பிறந்த புத்திரனே தாய்தந்தையர்க்கு கர்மஞ் செய்யத்தக்க உரிமையுடையவன். ஒருவன் மரித்தால் அவனுடய காதற் கிழத்தியின் மகன் சிறிது கர்மம் மட்டுமே செய்யலாம்.

“அவன் தான் செய்யத் தகுந்த சிறிதளவு கர்மத்தைச் செய்வதோடு நிற்காமல் முற்றும் செய்வானாயின், செய்தவனும் மரித்தவனும் நரகம் சேர்வார்கள். ஆனால் காமக் கிழத்தியின் மகன் தன்னைப் பெற்றவளைக் குறித்து ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்யலாம். பெற்றவனைக் குறித்தன்று.

“அவன் தலைமுறையில் உள்ளோரைக் குறித்து ஒன்றும் செய்யலாகாது. காமக் கிழத்தியின் புத்திரராயினும், அவர்களைப் பெற்றவன் இறந்தால் அவனைக் குறித்துத் தானங்களைச் செய்யலாம்.

“ஆனால் அந்தணருக்குப் போஜனம் செய்யலாகாது. வேசிப்புத்திரன் அன்ன சிரார்த்தம் செய்வானாயின் அவனும் சாப்பிட்டவனும் பிதுர்த்தேவரும் மீளா நரகம் எய்துவார்கள்.

“நல்ல குடும்பத்தின் மூலம் பெறுகின்ற புத்திரனே சிரேஷ்டமானவன். ஆகையால், மக்கள் அனைவரும் சற்புதிரனையே பெறுதல் வேண்டும்.” என்றார் திருமால்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!