1.ஶ்ரீரங்கநாச்சியார் - ஶ்ரீரங்கம்

பன்னிரு திருநாமங்களில் முதல் திருநாமம்  ஆயிற்று. ஜீவர்களுக்கும் பரமனுக்கும் இடையே ஒரு பாலமாக பிராட்டி செய்யும் இவ்வுதவியை விளக்குவதே ஸ்ரீ: என்னும் திருநாமம். வடமொழியில் இப்பெயருக்கு ஆறுபொருள்கள்உண்டு.
 
ஶ்ரீயதே - ஜீவர்கள் அனைவராலும் தஞ்சமாக பற்றப்படுகிறாள்.

ச்ரயதே - தான் நாராயணனை சரணமாகப் பற்றுகிறாள்.

ச்ருணோதி - தன்னை அண்டிய ஜீவர்கள் தங்கள் குறைகளையும் பாபங்களையும் விண்ணப்பிக்கும்போது காது கொடுத்துக் கேட்கிறாள்.

ச்ராவயதி - ஜீவர்களுக்காகப் பரிந்து பேசி அவர்களது வேண்டுகோளை பகவான் காதுகொடுத்துக் கேட்கும்படி செய்கிறாள்.

ச்ருணாதி - பெருமானை அடையத் தடங்கலாக இருக்கும் பக்தர்களின் பாவங்களை தன் அருளால் நீக்குகிறாள்.

ஶ்ரீணாதி - ஜீவர்களைப் பெருமானோடு சேர்த்து வைக்கிறாள்.

2. அம்ருதோத்பவா - ஶ்ரீஅம்ருதவல்லி தாயார் - சோளிங்கர்
இரண்டாவது திருநாமம் ஆன இதற்கு அமுதத்தோடு பாற்கடலில் தோன்றியவள் என்பது பொருள்.

3. கமலா - ஶ்ரீகமலவல்லி தாயார் - உறையூர்.

கமலா என்பதே ஸ்ரீ மகாலட்சுமியின் மூன்றாவது திருநாமம். " க " என்றால் பரம்பொருள்." ம " என்றால் ஜீவன். "லா" என்றால் கொடுத்து வாங்குதல். ஜீவனை பரமாத்மாவுக்கு கொடுத்து பரமனை ஜீவனுக்கு வாங்கிக் கொடுப்பதால் கமலா என்று அவளுக்கு திருநாமம்.

4. சந்த்ரசோபனா ஶ்ரீபரிமளரங்க நாயகி தாயார் - திருஇந்தளூர்

" சந்த்ரஷோபனா " என்பது ஸ்ரீமகாலட்சுமியின் நான்காவது திருநாமம் "நிலவை மிஞ்சும் குளிர்ந்த ஒளியும், பேரெழில் கொஞ்சும் இன்முகமும் கொண்டவள்' அல்லது 'நிலவுக்கே ஒளி ஊட்டுபவள்" என்பது இதன் பொருள்.

5. விஷ்ணுபத்னீ - ஶ்ரீவஞ்சுளவல்லி தாயார் - திருநறையூர்
 
ஸ்ரீ மகாலட்சுமி ஐந்தாவது திருநாமம் 'விஷ்ணு பத்னீ 'என்பது. அதாவது "எங்கும் நிறைந்த இறைவனது அறத்திற்கு உறுதுணையானவள்" என்பது இதன் பொருள்.

6. வைஷ்ணவீ - ஶ்ரீயதுகிரிநாச்சியார் - மேல்கோட்டை

ஸ்ரீ மகாலட்சுமியின் ஆறாவது திருநாமம் "வைஷ்ணவீ ",அதாவது விஷ்ணுவை பின்தொடர்பவள் என்பது பொருள்.

7. வரரோஹா - ஶ்ரீவரமங்கை தாயார் - வானமாமலை

பிராட்டியின் ஏழாவது திருநாமம் "வராரோஹா". இதற்கு "உயர்ந்த இடத்தில் ஏறி அமர்ந்து அருள்பவள், என்று பொருள். பாற்கடலை கடைந்தபோது பெருமாளின் திருமார்பில் ஏறி அமர்ந்தாள் பிராட்டி!. 

8. ஹரிவல்லபா - ஶ்ரீஆண்டாள் - ஶ்ரீவில்லிபுத்தூர்

பெருமானின் பேரன்புக்கு இலக்கானவள். 

9.சார்ங்கிணீ - ஶ்ரீகோமளவல்லி தாயார் - திருக்குடந்தை

ஸ்ரீமகாலஷ்மி ஒன்பதாவது திருநாமம்"ஸார்ங்கிணீ" அதாவது, வில் வீரனின் வீர பத்னி. 

10. தேவதேவிகா - ஸ்ரீ பெருந்தேவி தாயார் - காஞ்சிபுரம்

தேவனான ஸ்ரீராமனின் பெருந்தேவியான சீதை.

11.மஹாலக்ஷ்மி - ஸ்ரீ பத்மாவதி - திருப்பதி

எல்லா நன்மைகளையும் கடாக்ஷிப்பவள்.

12.லோகஸுந்தரீ  -  
ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார் - திருநாகை

உயர் பண்புகள் எனும் தன் அழகால் பெருமானுக்கு பெருமை சேர்த்து உலகினரை உய்விப்பவள்.

மங்களம் தேஹி மஹாலஷ்மி
ஸர்வ சௌபாக்யதாயிணி l

விஷ்ணு பத்னி நமஸ்துப்யம்
மஹாலஷ்மியை ஸுமங்களம் ll

மங்களே மங்களாத்ரே
மாங்கல்யே மங்களப்ரதே |

மங்களார்த்திம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே ஸதா ||

மஹாலக்ஷ்மி தான் விரும்புபவர்களிடத்தில் மட்டும்தான் தங்குவார் மஹாலஷ்மி 

 எப்போதும் உறையும் இடமாக மஞ்சள்,குங்குமம், கண்ணாடி, சீப்பு, பழவகைகள், தேங்காய், வெற்றிலை, பாக்கு ஆகியன விளங்குகின்றன. 

பெண்கள் விரும்பி அணியும் வளையல் கருகமணியிலும் தாலிச் சரடிலும் நீங்காது இருக்கிறாள். 

 அழகு,  

மனோதைரியம்,  

வேலைத் திறன்,  

தரும சிந்தனை மிக்கவர்,  

கோபம் அற்றவர்,  

பெரியவர்களுக்குப் பணிவிடை செய்பவர் ஆகியோரிடையே  

ஆண், பெண் வித்தியாசம் பாராமல் இருக்கின்றாள்.

ஒரு காரியத்தை செய்தே தீரவேண்டும் என்ற வைராக்கியமும் செய்து முடிக்க முடியும் என்ற தைரியமும் உடையவர், 

தெய்வ பக்தி உள்ளவர்,  

நன்றி உள்ளவர்.  

ஐம்புலன்களை அடக்கிய விஷயத்தில் நித்திய வாசம் புரிகிறாள்.

 சுறுசுறுப்பு மிக்கவர்   

பெற்றோரை பேணிக் காப்பாற்றுபவர், 

அடக்கமுடையவர்,  

அடுத்தவர் மனதை அறியும் திறமை உடையவர்  

காலத்தை வீணாக்காதவர் ஆகியோரிடம் திருமகள் மணம் உவந்து வசிக்கின்றாள்.

உடல், மனம் சுத்தம் உள்ளவர், 

தியானம் செய்வதில் ஊக்கம் உள்ளவர், 

பலனை எதிர் பார்க்காது பணிபுரிபவர், 

மனம் சோர்ந்து போகாதவரிடம் லக்ஷ்மி என்றும் தங்குகிறாள்.

சாமார்த்தியத்தை வளர்த்துக் கொள்பவரிடமும்  

சட்டென்று யோசித்து ஒருமுடிவு எடுத்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்பவரிடமும்  

ஆண், பெண் பாரபட்சமின்றி விழைந்து செல்கின்றாள். 

தேவதைகள்,  

பசுக்கள்  

பிரம்மஞானியர்,  

சாதுக்கள் வேதம் தெரிந்தவர் 

எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துபவரிடம் நீங்காது வாழ்கிறாள்.

கணவன், மனைவி அன்புடன் வாழும் குடும்பத்தில் நிரந்தரமாக வசிக்கின்றாள்.  

கணவனை எதிர்த்துப் பேசாத குடும்பமே கோவில். 

கணவனும் பெரியவர்களும் தெய்வம் என்று நினைக்கும் பெண்ணை அவள் விரும்புகிறாள்.  

வீடு வாசல், பாத்திரம் பண்டத்தை நித்தம் சுத்தப்படுத்தி சமைத்து உணவை வீணாக்காத பெண்ணிடம் நிரந்தரமாகத் தங்குகிறாள். 

லக்ஷ்மி தேவியின் வெறுப்புக்குள்ளாவோர் 

சமைக்கப்பட்டதை சாப்பிடாமல் அல்லது விநியோகிக்காமல் வைத்திருந்து வீணாக்குபவரை அடியோடு லக்ஷ்மி வெறுக்கிறாள்.

விடியற் காலையிலும் மாலையிலும் இல்லத்தின் வாயிலில் நீர் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றப்படும் வீட்டிற்கு அவசியம் வருகிறாள். இந்த இரு வேளைகளிலும் தவறாமல் தினமும் திருவிளக்கு ஏற்றி வைத்து மனமுவந்து தன்னை அழைக்கும் பெண்ணை, லக்ஷ்மி ஒரு நாளும் உதாசீனம் செய்யமாட்டார்.

காட்சிக்கினிய பெண்,  

கற்புள்ளவள்,  

ஆசாரம் உள்ளவள், 

எளிமையாக அலங்காரம் செய்துகொள்பவள் ஆகியோர் லக்ஷ்மிக்குப் பிரியமானவர்கள்.

தானியங்கள்,  

தானியக் கிடங்குகள்  

தண்ணீர்க்குடம், 

தயிர்,  

தேன்,  

நெய் போன்ற போருட்களில் திருமகள் வாசம் செய்கிறாள்.

யானை,  

அரசன்,  

சிம்மாசனம்,  

தாமரைத் தடாகம்,  

எக்காலத்திலும் வற்றாத ஏரிகள், நதிகள்,  

வாகனம்,  

கன்னியர்,  

ஆபரணங்கள், 

தாமரை முதலியவைகளில் அலைமகள் வசிக்கிறாள்.

ஸ்ரீஹரியின் நாமம் எந்த இல்லத்தில் ஒலிக்கிறதோ அங்கு அவள் கட்டாயம் செல்வான்.  

விருந்தினரை உபசரிக்கும் குணம், 

மறை உணர்ந்தோரை மதிக்கும் குணம் கொண்டவர்களிடம் நீங்காது நிலைத்து நிற்கிறாள். 

மகாலக்ஷ்மியின் மனம் மகிழச் செய்யுங்கள்,அவள் மங்களங்கள் யாவும் தந்து நித்ய வாசம் செய்து உங்களை மகிழ்விப்பாள்.

"ஆஹா ரத்ரே ஸம்பன்னாம் ஹரவிந்தநிவாஸனீம் ஹஸேஷ  ஜகதீ  ஸித்திம்வந்தே வரத வல்லபாம் !!"

"ஸ்ரீ பெருந்தேவி தாயார் திருவடிகளே சரணம் "
மாங்கல்யம் தேஹிமே ஸதா ||