ஆதி சங்கரர்   அற்புதமாக  ஒரு ஆறு குட்டி ஸ்லோகங்களை  மஹா விஷ்ணு மேல் எழுதி இருக்கிறார். அதற்கு ஆறு  கால்  ஸ்தோத்ரம் என்று பெயர்.  ஆறு பதங்களை  கொண்டதால்  ஷட்பதி என்றும் பொருள்.  வண்டுக்கு ஆறு கால்.  'ம்ம்ம்ம்'  என்று  ரீங்காரம் செய்துகொண்டே  புஷ்பத்தில் இருக்கும் பூந்தேனை நாடி செல்லும்.  வேறே  எதன்மீதும் அதற்கு கவனம் இல்லை .  அது போல் மஹாவிஷ்ணுவை  சுற்றி சுற்றி வந்து  ஸ்தோத்ரம் பண்ணும் வண்டாக தன்னையும் உருவகித்துக்கொண்டு இயற்றிய ஸ்தோத்ரம். 

अविनयमपनय विष्णो दमय मनः शमय विषयमृगतृष्णाम् । भूतदयां विस्तारय तारय संसारसागरतः ॥ १॥

Avinayamapanaya vishno, damaya mana ,samaya vishaya mruga thrushnam, Bhootha dayaam vistharaya, tharaya samasara sagaratha. 1

அவினயமபனய விஷ்ணோ தமய மன ஸமய விஷய ம்ருகத்ருஷ்ணாம் | பூத தயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: 1

ஹே,  மஹா விஷ்ணு,   அந்த  ஆறு கால்  வண்டு  போல் உன்னை ரீங்காரமாக  போற்றி ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டே  நமஸ்கரித்து வழிபடுகிறேன். நான் கர்வம் கொண்டவன், அகம்பாவம் ரொம்ப ஆஸ்தி.  எதிரே எவரும் எனக்கு சமம் இல்லை என்ற  ஆணவத்தைப் போக்கு.   மனஸு  அமைதி பெறட்டும்,  பேராசையையும்  என்னிடமிருந்து விலக்கிவிடு என் மனம்  சகல   ஜீவன்கள் மேலும்  கருணை, இரக்கம் கொள்ளட்டும்.   முதலில்  என்னை இந்த ஸம்ஸாரக் கடலிலில் மூழ்காமல் அக்கரைக்கு (மோக்ஷம்)  கொண்டு சேர்த்து விடு..

दिव्यधुनीमकरन्दे परिमलपरिभोगसच्चिदानन्दे । श्रीपतिपदारविन्दे भवभयखेदच्छिदे वन्दे ॥ २॥

Divya dhooni makarande parimala pari bhoga sachidanande,Sripathi padaaravinde bhava bhaya khedha chidhe vande.    2

திவ்யதுனீ  மகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே  ஶ்ரீபதி பதாரவிந்தே பவபய கேதச்சிதே வந்தே  || (2)

I bow at the lotus-feet of vishïu (the Lord of Lakshmi) of which the celestial Gañgá is the pollen (or honey), which afford the enjoyment of their fragrance and stand out as 'Sat', 'Cit' and 'Ánanda' (as the true Brahman) and which cut off the terror and pain of birth in this world. (2)

மஹா விஷ்ணுவே  நீயே  ஒரு வண்டு தான்.  கங்கை  தான் உன்னிடமுள்ள மகரந்தம். ஸத்-சித்-ஆனந்தம்  தான் உன்னிடமிருந்து பெறுகிற   நறுமணம்.  உன் திருவடிகள் தான்  இந்த உலகில்  ஸம்ஸார  பந்த  துக்கத்தைப்  போக்கும் சாதனம்.  அவற்றை வணங்குகிறேன். 

सत्यपि भेदापगमे नाथ तवाहं न मामकीनस्त्वम् ।सामुद्रो हि तरङ्गः क्वचन समुद्रो न तारङ्गः ॥ ३॥

Sathyapi bhedhapagame  nadha thwaham na mamakeenasthwam,Saamudhro hi tharanga kwachana samudhro na tharanga.     3

ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் ந மாமகீநஸ்த்வம் | ஸாமுத்ரோ ஹி தரங்க:  க்வசன ஸமுத்ரோ ந தாரங்க:  || (3)

பகவானே,   லோக ரக்ஷகனே, நான்  ஜீவாத்மா, நீ  பரமாத்மா.  நம்மிருவருக்கும் இடையே எந்த வேற்றுமையும்  இல்லை ஏனென்றால் நானே  நீ தான். என்னில்  நீ இருக்கிறாயே.  நான் உன் அடிமை. நீ எனது உடைமை அல்ல, நான் தான்  உன் உடை மை.  அலை கடலாகாது. அமைதியான   ஸமுத்ரத்தின் அங்கமாகதானே  அலைகள்  ஆர்ப்பரிக்கிறது? 

उद्धृतनग नगभिदनुज दनुजकुलामित्र मित्रशशिदृष्टे । दृष्टे भवति प्रभवति न भवति किं भवतिरस्कारः ॥ ४॥

Udhruthanaga nagabhidanuja dhanukalaa mithra mithra sasi drushte,  Drushte bhavathi  prabhavathi  na bhavathi kim bhava thiraskara.  4

உத்ருதநக நகபிதநுஜ தநுஜ குலாமித்ர மித்ரசசித்ருஷ்டே  | த்ருஷ்டே பவதி ப்ரபவதி நபவதி கிம்பவதி ரஸ்கார: || (4)

ஹே , மஹா விஷ்ணு, நீ தான்  கிருஷ்ணனாக  அவதரித்து  சிறுவனாக இருந்தாலும் கோவர்தன மலையை  இடது சுண்டுவிரலில் தூக்கி  உயர்த்தியவன்.  இந்திரனின்  கர்வத்தை அடக்கியவன். அசுரக் கூட்டத்தை அழித்தவன்.  சூர்ய சந்திரர்களை  நேத்ரங்களாக கொண்டவன். உன்  கருணைக் கடைக்கண் பார்வை ஒருவனுக்கு கிடைக்குமானால் அவனை 
 இந்த ஸம்ஸார  ஈர்ப்புகள் , பந்தம், பிடிப்பு ,இச்சை  நெருங்குமா ?

मत्स्यादिभिरवतारैरवतारवताऽवता सदा वसुधाम् । परमेश्वर परिपाल्यो भवता भवतापभीतोऽहम् ॥ ५॥

Mathsyadhi biravathaarai  ravatharavatha avatha sadha vasudham, Parameshwara paripalyo bhavatha bhava thapa bheethoham.      5

மத்ஸ்யாதிபி  ரவதாரைரவதாரவதா(அ)வதா ஸதாவஸுதாம் பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாபீதோஹம் (5)

என் தெய்வமே, நீ பல அவதாரங்கள் எடுத்தாலும் முக்கியமான தசாதாரங்களில்  மீன், ஆமை  முதலான  உருவங்கள் எடுத்து லோக சம்ரக்ஷணத்துக்காக  பூமியில் தோன்றி  காத்தருள் புரிந்தவன்.  உன்னால் இந்த  எளிய ஸம்ஸார தாபத்தால் மருண்ட நானும்  மீட்கப்பட வேண்டியவன் அல்லவா? என்மீதும்  கருணை கொள்வாய். 

दामोदर गुणमन्दिर सुन्दरवदनारविन्द गोविन्द ।भवजलधिमथनमन्दर परमं दरमपनय त्वं मे ॥ ६॥

Dhamodhara guna mandira Sundara vadanara vinda govinda,Bhava jaladhi madhana mandhara paramam dharamapanaya thwam mey  6

தாமோதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த  பவ ஜலதி மதனமந்தர பரமம் தரமபனயத்வம் மே (6)

நீ  தாமோதரன். தாயான  யசோதையை மதித்து அன்புக்கு  கட்டுண்ட மாயன்.  குணங்கள்  நிறைந்த கோயில். அழகிய தாமரை மலர் போன்ற மலர்ந்த  இனிய முகம் கொண்ட கோவிந்தன். நீ தான் இந்த  ஸம்ஸாரக்கடலை கடையும் மந்தர மலை.  என் மேல் கருணை கொண்டு என்னை உலக  வாழ்க்கைத்  துன்பத்த்திலிருந்து மீட்பாய்.

नारायण करुणामय शरणं करवाणि तावकौ चरणौ । इति षट्पदी मदीये वदनसरोजे सदा वसतु ॥ ७॥

Narayana karunamaya saranam karavani thawakou charanou, Ithi shadpadhee madheeye vadhana saroje sada vasathu. 7

நாராயண கருணாய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ இதி ஷட்பதீ மதீயே வதனஸரோஜே ஸாதாவஸது (7)

ஹே, நாராயண கருணாகர ப்ரபோ.உனது திருவடிகளைச்  சரணம் அடையவேண்டும்  என்று தொழும் என்  இந்த ஆறு பதங்கள்  என்றும் என்  வாயால்  உன்னை துதித்துக் கொண்டே இருக்கவேண்டும். 

இந்த  சின்ன ஸ்தோத்ரத்தை குழந்தைகளுக்கு  கற்றுக்கொடுத்து  அர்த்தம் சொல்லி அவர்களை  மனப்பாடம் செய்ய வையுங்கள்.  
பாராயணம் செய்து  பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்‌ஷம், ஞானம் உண்டாகி மனக்கவலைகள்  க்ரஹ தோஷம் சகலமும்  நாமும்   நீங்கப்  பெறுவோம்.