தெய்வத்திடம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் ?

தெய்வத்திடம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? எதை கேட்க வேண்டும்? ஆதி சங்கரர் நமக்கு வழி காட்டுகிறார். பொதுவாக, நாம் பக்தியோடு எதை கேட்டாலும், பகவான் நமக்கு கேட்டதை தருவார். கேட்பதில் உயர்ந்த விஷயங்கள், மிக சாதாரண விஷயங்கள் என்ற இரண்டு உண்டு. பிரார்த்தனை செய்தேன், நோய் சரியாகி விட்டது பிரார்த்தனை செய்தேன், செல்வம் கிடைத்து விட்டது, வேலை கிடைத்தது, என சந்தோஷப்படுவது எல்லாம், கோடீஸ்வரனிடம் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல. ஆதி சங்கரர் 'இதையெல்லாம் பகவானிடம் கேட்காதே' என்று சொல்லி, "நீ கேட்க வேண்டியது சில உள்ளது, அது என்னவென்றால், உன் முயற்சியால் கூட அடைய முடியாததை பகவானிடம் கேள்" என சொல்லிக் கொடுக்கிறார்.

நம் புராதன வேதம் நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. அதனை ஆதி சங்கரர் விளக்குகிறார்:

1.கர்வம்:- (கர்வத்தை (அஹங்காரம்) என் இடமிருந்து விலக்கி விடுங்கள்)

பகவானே, முதலில் 'நான் செய்கிறேன்' என்ற என் கர்வத்தை (அஹங்காரம்) என் இடமிருந்து விலக்கி விடுங்கள் என்று கேட்கவேண்டும். நமக்கு முக்கிய தேவை - விநயம் (அடக்கம்). இந்த விநயம் நமக்கு வராமல் இருப்பதற்கு காரணம், நம்மிடம் "நான் செய்கிறேன்" என இருக்கும் கர்வமே. அனைத்தையும் படைத்த பகவானிடம், போய் "என் கஷ்டம், என் துக்கம், என் வேலை" என்று "நான்" என்றும் "என்னுடையது" என சொல்வதே நம் கர்வத்தை காட்டுவதாகும். என் கர்வத்தை (அஹங்காரம்) என் இடமிருந்து விலக்கி விடுங்கள் என்று கேட்கவேண்டும்.

2. ஆசை:- (ஆசைகளை வராமல் செய்து விடு)
'பகவானே! என் மனதில் இன்றுவரை நிறைய ஆசைகள் வந்து இருக்கிறது. அந்த ஆசைகளை வராமல் செய்து விடு' என்பது தான். திருப்தி இல்லாததால் துக்கம் உண்டாகும். கர்வத்தை நம்மால் அழிக்க முடியாதது போல, மனத்தில் வந்து கொண்டே இருக்கும் இந்த ஆசையையும் நம் திறமையால் அழிக்கவே முடியாது. பகவான் அனுகிரஹத்தால் மட்டுமே கர்வத்தையும், நம்மிடம் உருவாகும் ஆசையையும் அழிக்க முடியும்.

3. திருப்தி:- (அடையும் குணத்தை கொடு)

பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதைப் பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு" என்பது தான். பகவத்கீதையில், இந்த திருப்தியை பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், 'நானாக போய் யாரிடமும் கையேந்த மாட்டேன். எனக்கு என்று எது கிடைக்கிறதோ அதை நான் கொண்டு சந்தோஷப்படுவேன்' என்கிற திருப்தியில் எவன் இருக்கிறானோ, அவனை சுகம்-துக்கம், வெற்றி - தோல்வி என்ற எந்த இரட்டை நிலை அனுபவமும் மனதளவில் பாதிக்காது"என்கிறார். தெய்வ அனுக்கிரகத்தால் மட்டும் மனதில் த்ருப்தி ஏற்படும். பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, கர்வத்தையும், ஆசையையும் அழித்து, திருப்தி என்கிற பண்பை கொடுக்க முடியும்.

4. இரக்கம் இரக்க சிந்தனை உருவாகும் படி செய்யுங்கள்')

'பகவானே! எனக்கு யாரை பார்த்தாலும் மனதில் இரக்க சிந்தனை உருவாகும் படி செய்யுங்கள்' என்பது தான். நம்மால் கொண்டு வர முடியாத குணம் இரக்கம். பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, இரக்கம் என்ற குணம் நம்மில் இயற்கையாக வெளிப்படும்.

5. மோக்ஷம்:- (மோக்ஷத்தை கொடு’)

ஐந்தாவது பிரார்த்தனை, 'பகவானே! பல யுகங்களாக நானும் இந்த ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி எழுந்து கொண்டு இருக்கிறேன். எவ்வளவு தடவை இப்படியே இருந்து கொண்டிருப்பது? என்னை இந்த ஸம்ஸார ஸாகரத்தில் இருந்து தாண்ட வைத்து விடு. மோக்ஷத்தை கொடு’ என்பது தான். ஆதி சங்கரர், பஜ கோவிந்தம் பாடும் போது,
 
புனரபி ஜனனம், புனரபி மரணம்,
புனரபி ஜனனீ ஜடரே சயனம் I
இஹ ஸம்ஸாரே பகுதுஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே !!"

நம: பரம ரிஷிப்யோ நம: பரம ரிஷிப்ய

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!