நாட்டில் பல புண்ணிய திருத்தலங்கள் இருந்தாலும் அவற்றில் சிறப்புடைய சில திருத்தலங்கள் பக்தியையும் கிருஷ்ண பரமாத்மாவின் மேல் அளவற்ற பற்றும் கொண்ட பக்தர்களை ஆனந்தமடைய செய்கிறது.
கிருஷ்ணனின் அருளுக்காக யாத்திரை செல்ல விரும்புபவர்களுக்கு பயண திட்டத்திற்கான சில முக்கிய திருத்தல குறிப்புகள் கீழே.
மதுரா
கிருஷ்ணபகவான் பிறந்தஇடமாகும். ஸ்ரீ கிருஷ்ணர் கம்சராஜனால் சிறைவைக்கப்பட்ட காலத்தில் அவர் பெற்றோருக்கு சிறையில் பிறந்த தெய்வீக குழந்தை. பிறந்தவுடனே வசுதேவர் ஸ்ரீ கிருஷ்ணரை கோகுலத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்.
ஜென்மாஷ்டமி நாளன்று மதுரா நகர் முழுவதும் வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிப்பட்டிருக்கும். ஜஹாங்கிஸ்மற்றும்தபேலாவாசிப்போர் வாகனங்களில் கிருஷ்ணபகவானின் வாழ்க்கை வரலாற்று கதையை கூறும் விதமாக சித்திர கதைகள் மற்றும் கச்சேரிகள் செய்தபடி செல்வார்கள்.
ஜகுலன் உற்ஸவ எனப்படும் ஊஞ்சலாட்டும்உத்சவம் மதுராவில் கொண்டாடப்படும் ஜென்மாஷ்டமி விழாக்களின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
மதுராவில் ஸ்ரீபாங்கிபிஹாரிஆலயம், துவாரகதிஷ் ஆலயம், ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி, மற்றும் மிக பிரபலமான இஸ்கான் (ISCKON) கோவில் ஆகியவை தரிசிக்க வேண்டிய முக்கிய திருத்தலங்கள் ஆகும்.
பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றில் வரும் சில இடங்களும் முக்கிய யாத்திரை தலங்களாக கருதப்படுகிறது. விக்ரம் காட், பொட்டாரா குண்ட், ஆகியவை நீங்கள் தரிசிக்க வேண்டிய இடங்களாகும்.
பிருந்தாவனம்
மதுராவில் இருந்து 15 கி. மீ தொலைவில் பிருந்தாவனம் எனும் பரிசுத்த திருத்தலம் அமைந்துள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தை பருவத்தின் மற்றும் இளம் பிராயத்தின் லீலைகள் நடந்த இடம் பிருந்தாவனமாகும். பிருந்தாவனத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் பிரபலமான #ராசலீலை நடந்ததாக ஐதீகம் உள்ளது.
மிகப்பழமையான தலமான ஸ்ரீகோவிந்ததேவ்ஆலயம் இங்கு நீங்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய தலம். கிருஷ்ண பகவானின் சிறப்பை கூறும் மற்றொரு தலம் நித்திய வனம் ஆகும். இன்றளவிலும் கிருஷ்ணபகவான் தன் அன்பிற்குரிய ராதை மற்றும் கோபிகை பெண்டிரோடு ராசா லீலா புரிய நித்தியவனத்திற்கு வருவதாக ஒரு ஐதீகம் உள்ளது.
துளசிவனம் நித்தியவனத்தின் இன்னொரு சிறப்பம்சமாகும்.
கோகுலம்
கிருஷ்ணபகவான் தன குழந்தைப்பருவத்தைகழித்த புனிதத்தலமே கோகுலம். இந்த கோகுலத்தைச் சுற்றியுள்ள காடுகளுக்கு தான் ஸ்ரீ கிருஷ்ணர் பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.
கோகுலத்தின் சிறப்பு
என்னவென்றால், கணக்கிடப்பட்ட ஜென்மாஷ்டமிக்குஅடுத்தநாளே, இங்கு ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. ஏனெனில் வசுதேவர் ஸ்ரீ கிருஷ்ணனை அவர் பிறந்த நாளன்று நள்ளிரவில் தான் கோகுலத்திற்கு கொண்டு வந்தார்.
இங்கு ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்களும் தனி துவுமனாவையே. கோகுலத்தில் உள்ள மக்கள் தயிர் மற்றும் மஞ்சள்நீரால் தங்களை நனைத்து விளையாடி ஸ்ரீ கிருஷ்ணர் வந்தருளிய தினத்தை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
கோகுலத்தில் உள்ள ராதா ராமன் ஆலயம், ராதா தாமோதர் ஆலயம், ஆகியவை முக்கியமாக தரிசிக்க வேண்டியவை.
துவாரகை
ஸ்ரீ கிருஷ்ண பகவான் வளர்ந்த பின் வாழ்ந்த இடம் துவாரகை. அசல் துவாரகாபுரித் தீவு குஜராத்தின் அருகே கடற்கரையோரத்தில் அமைந்திருந்தது. ஆனால் அது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் இறுதிகாலத்திற்கு பின் கடலோடு கலந்து விட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.
தற்போதைய துவாரகை கட்ச்சில் உள்ள கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் மேல் அளவற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்கள் தரிசிக்க வேண்டிய மிக முக்கிய திருத்தலமான #துவாரகதிஷ் இங்கு உள்ளது.
துவாரகாவில் உள்ள மற்றொரு சிறப்பு வாய்ந்த ஆலயம், ஸ்ரீ கிருஷ்ண பகவானின் மனைவியான ஸ்ரீருக்மிணி தேவியின் ஆலயமாகும்.
நீங்கள் துவாரகாவின் வெளிப்புறத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஜீவா சாந்தியடைந்ததாக கூறப்படும் இடத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
கண்காட்சிகள், கோலாகலங்கள் மற்றும் விழாத்தோற்றம் கொண்டிருக்கும். ஜென்மாஷ்டமிக்கு முந்தைய நாட்களில் பஜனைகளும் சத்சங்கங்களும் நடைபெறும். இந்த கொண்டாட்டங்கள் இரவு முழுவதும் நடைபெற்று ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்தநாளை மகிழ்ச்சியான அனுபவமாக கழிக்க வைக்கிறது.
பூரி
புகழ் பெற்ற ஜெகந்நாதர்ஆலயம் அமைந்திருக்கும் இடமே பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் அல்லது ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களது சகோதரர்களான பலராமன் மற்றும் சுபத்ரனோடு வாசித்த இடம் பூரி என்று புராணம் கூறுகிறது.
ஒவ்வொரு வருடமும் இந்நகரம் முழுதும் உற்சாகமும் ஆன்மீகமும் நிரம்பி வழிய வீற்றிருக்கிறது. இங்கு ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்கள் ஜென்மாஷ்டமிக்கு 17 நாட்கள்முன்னரே தொடங்கி விடுகிறது.
பூஜைகளும் பஜனைகளும் முன்னிரவில் தொடங்கி நள்ளிரவு வரை நீடிக்கும். ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அவரது சகோதரர் பலராமனின் குழந்தைபுருவ கதைகள் சித்திர கலைஞர்களால் நடித்துக் காட்டப்படும்.
இங்குள்ள நாடக கொட்டகைகளில் கிருஷ்ணபகவான் பிறப்பில் ஆரம்பித்து 17 நாட்களுக்கு அந்த கிருஷ்ண புராண அத்தியாயங்கள் தொடர்ந்து காட்டப்படும்.
இறுதி நாளான ஜென்மாஷ்டமி நாளன்று இந்த கலைஞர்கள் ஸ்ரீ கிருஷ்ணர் கம்சனை வதம் செய்த காட்சியை நடித்துக்காட்டுவர்.
உடுப்பி
நீங்கள் தென்னிந்தியாவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரின் திருத்தலம் ஒன்றிற்கு செல்ல விரும்பினால் நீங்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய புனிதமான இடம் உடுப்பி. இங்குள்ள ஸ்ரீ கிருஷ்ண மடம், நடுவில் ஒரு கோவிலை கொண்டு சுற்றிலும் எட்டுமடாலயங்களை கொண்ட மிகப்பெரிய ஆலயமாகும்.
உடுப்பியில் ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்களை பெரும்பான்மையான இடங்களில் காணலாம். உடுப்பி நகர வீதிகளில் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் பால்ய கதைகள் நாடங்களாக அரங்கேற்றப்படும்.
களிமண்ணாலான ஸ்ரீ கிருஷ்ண பகவான் சிலைகளை கலைஞர்கள் காட்சிக்கு வைப்பார்கள். ஆடல் பாடல் கலாச்சார நிகழ்வுகள் ஜென்மாஷ்டமி நாளன்று இரவு களைகட்டும்.
யக்ஷகானங்களும் புல்லாங்குழல் கச்சேரிகளும் உடுப்பியில் ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்களில் உள்ள மற்ற சிறப்பம்சங்கள்.