ராமர் ஒரு நாள் வசிஷ்டரைக் கேட்க, அவர் பதில் கூறுகிறார்.

"ராமா! நாம் செய்த வினைகளின் பயனாக ஏற்படும்

இன்ப, துன்பங்களைத்தான் விதி என்றும்,

அதிர்ஷ்டம் என்றும் கூறுகிறோம்.

"மனிதனின் மனத்தில் எத்தனையோ வாசனைகள்

உள்ளன. அவைதான் வாக்கினால் செய்யப்படும்

கர்மங்களாகவும், உடலினால் செய்யப்படும்

கர்மங்களாகவும் பரிணமிக்கின்றன. அவன்

வாசனைகள் எப்படியோ, அது மாதிரித்தான்

அவன் செய்யும் கர்மங்களும் இருக்கும்.

எப்படி கிராமத்துக்கு போக விரும்பிகிறவன் கிராமத்துக்கும்,நகரத்திற்குப் போக விரும்புகிறவன் நகரத்திற்கும் போவானோ, அது மாதிரி,

"பூர்வ ஜன்மத்தில், பலன்மீது உள்ள தீவிரமான

ஆசையினால், பெருத்த முயற்சியின் பேரில்

செய்யப்படும் கர்மம்தான் இந்த ஜன்மத்தில்

விதியாக மாறுகிறது.

"மனிதன் தன் முயற்சியினால் இந்த உலகில் எதையும்

அடைய முடியும். விதியைக் கொண்டு முடியாது.

"வாசனைகள் என்னும் நதி, மனிதனை, நல்ல

வழியிலோ, கேட்ட வழியிலோ இழுத்துச்

செல்லுகிறது. ஆனால் மனிதன் முயற்சி

கொண்டு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

"மனிதனுடைய மனது ஓர் குழந்தையைப் போன்று

சஞ்சலமுடையது. அதைக் கெட்ட வழியிலிருந்து

நல்ல வழிக்குத் திருப்பலாம், அதே மாதிரி நல்ல

வழியிலிருந்து கெட்ட வழிக்குத் திருப்பலாம். ஆகவே

மனிதன் தன் முயற்சியினால்தான் அதைக் கெட்ட

வழியிலிருந்து நல்ல வழிக்கு திருப்ப வேண்டும்.

"உலகில் மனிதன் எந்தெந்தக் காரியங்களில்

ஈடுபடுகிறானோ, அதிலேயே தன்யமாகி

விடுகிறான். ஆகவே, ராமா, நீ உன் முயற்சியைக்

கொண்டு, இந்திரியங்களை அடக்கி, துக்கம்

இல்லாத பதவியை அடை. பிறகு, அந்த நல்ல

வாசனையையும் துறந்து, பிரம்மத்தோடு ஐக்கியமாகு!"

வசிஷ்டர் சொன்னதிலிருந்து, நாம் செய்யும் கர்மங்கள் விஷயமாக, நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஆகிறது.

ஏனெனில், அவைதான் பின்னர் விதியாக மாறி, நமக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுக்கப் போகின்றன