நாராயண ஸூக்தம் தைத்ரீய ஆரண்யகம்,

1. ஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் |

விஶ்வம்’னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் |

சகஸ்ர சீர்ஷம் - ஆயிரக்கணக்கான (எண்ணற்ற )தலைகளை உடையவரும், 

தேவம் - ஒளிமிகுந்த தலைவனும், 

விச்வாக்ஷம் - அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும், 

விஸ்வ சம்புவம் - அனைத்துலகும் ஏற்படக் காரணமானவரும், மங்கலலத்தைச் செய்பவரும், 

விஸ்வம்-உலகனைத்தும் இருந்து, விரிந்து பரந்தவரும், 

அக்ஷரம் - அழிவற்றவரும், 

பரமம் பதம் - அனைத்திற்கும் மேற்பட்டு மேலான நிலையில் உள்ளவரும், 

நாராயணம் தேவம் - நாராயணன் என்னும் தெய்வத்தை.

எண்ணற்ற தலைகளை உடையவரும், ஒழி மிக்கவரும், அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும்,  உலகைத்தை விளைவித்து, மங்கலத்தைச் செய்பவரும், அணைத்து உலகிலும் நிறைந்து,  விரிந்து பரந்தவரும்,  அழிவற்றவரும், மேலானவருமான நாராயணன் என்னும் தேவனை த்யானிக்கிறேன். 

2. விஶ்வதஃ பர’மான்னித்யம்விஶ்வம் னா’ராயணக்‍ம் ஹ’ரிம் |

விஶ்வ’மேவேதம் புரு’ஷ-ஸ்தத்விஶ்வ-முப’ஜீவதி |

பதிம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’ரக்ம் ஶாஶ்வ’தக்‍ம் ஶிவ-மச்யுதம் |

விஸ்வத - இந்த உலகத்தைவிட, 

பரமான் - இதற்கு அப்பாற்பட்டு, மேலானவரும், 

நித்யம் - என்றும் உள்ளவரும், 

விஸ்வம் - உலகமாய் விளங்குபவரும், 

ஹரிம் - அவரது பெயரை உச்சரித்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவரும், 

நாராயணம் - நாராயணனை 

இந்த உலகிற்கு அப்பாற்பட்டு, இதனை விட மேலானவரும், என்றும் உள்ளவரும், பெயரை உச்சரித்த மாத்திரத்தில் துன்பங்களைக் களைபவரும், ஆகிய நாராயணனை த்யானம் செய்கிறேன் .

3. பதிம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’ரக்ம் ஶாஶ்வ’தக்‍ம் ஶிவ-மச்யுதம்

னாராயணம் ம’ஹாஜ்ஞேயம் விஶ்வாத்மா’னம் பராய’ணம் |

விஶ்வ’ஸ்ய - இவ்வுலகிற்கு, 

பதிம் - தலைவரும், 

ஆத்ம ஈஸ்வரம் - அனைத்து உயிர்களின் தலைவரும், 

சாஸ்வதம் - என்றும் உள்ளவரும்,நிலை பெற்றவரும், 

சிவம் - மங்கள வடிவானவரும், 

அச்யுதம் - அழிவற்றவரும், 

மகாக்யேயம் - சிறந்த அறிவினால் அறியத்தக்கவரும், 

விஸ்வ ஆத்மானம் - அனைத்திற்கும் ஆத்மாவாக இருப்பவரும், 

பராயணம் - சிறந்த புகலிடமாக இருப்பவருமான, நாராயணனை.

அனைத்து உலகிற்கும் தலைவனை, என்றும் நிலையாய் இருப்பவரும், மங்கள வடிவினரும் சிறந்த அறிவால் அறியத்தக்கவரும், எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருப்பவரும், சிறந்த புகலிடமாக இருப்பவருமான நாராயணனை, த்யானிக்கிறேன் .

4.னாராயணப’ரோஜ்யோதிராத்மா னா’ராயணஃ ப’ரஃ |

னாராயணபரம்’ ப்ரஹ்ம தத்த்வம் னா’ராயணஃ ப’ரஃ |

நாராயண பர ஜ்யோதி - நாராயணனே சிறந்த ஒளி, 

நாராயண : பர : ஆத்மா - நாராயணனே அனைத்தையும் கடந்த பரமாத்மா, 

நாராயண : பர ப்ரஹ்ம - நாராயணனே பர ப்ரஹ்மம்.

நாராயண : பர தத்வம் - நாராயணனே மேலான உயர்ந்த உண்மை .

நாராயண : பர த்யாதா - நாராயணனே த்யானம் செய்பவர்களுள்,த்யானம் செய்யப் படுபவர்களில் சிறந்தவர் .

நாராயண ; பர த்யானம் - நாராயணனே சிறந்த த்யானம் .

5.யச்ச’கிம்சிஜ்ஜகத்ஸர்வம் த்றுஶ்யதே” ஶ்ரூயதே‌உபி’ வா ||

அம்த’ர்பஹிஶ்ச’ தத்ஸர்வம் வ்யாப்ய னா’ராயணஃ ஸ்தி’தஃ |

ஜகத் சர்வம் - உலகனைத்திலும், 

யத்ய கிஞ்சித் த்ருச்யதே - காணப்படுவது எதுவாயினும், மிகுந்து காணப் படுவத்ஹயினும், 

அபிவா - அல்லது, 

ஸ்ரூயதே - கேட்கப் படுவது எதுவாயினும், 

தத் சர்வம் - அவை அனைத்தையும், 

அந்த - உள்ளும், 

பஹி : ச - புறமும், 

வ்யாப்ய - வியாபித்தபடி, நிறைந்தபடி, ஊடுறிவியபடி, 

நாராயண : ஸ்தித : இருக்கிறார் .

உலகனைத்தும் காணப்படுவது,  கேட்கப்படுவது எதுவாயினும், அவை அனைத்தையும் உள்ளும் புறமும்

வியாபித்தபடி நாராயணன் இருக்கிறார்

6.அனம்தமவ்யயம்’ கவிக்‍ம் ஸ’முத்ரே‌உம்தம்’ விஶ்வஶம்’புவம் |

 பத்மகோஶ-ப்ர’தீகாஶக்ம் ஹ்றுதயம்’ சாப்யதோமு’கம் |

அனந்தம் - எல்லையற்றவரும், முடிவற்றவரும், 

அவ்யயம் - விளக்க முடியாதவரும், விளக்கத்திற்கு அப்பாற்பட்டவரும், 

கவிம் - அனைத்தும் அறிந்தவரும், 

சமுத்ரே - சம்சாரப் பெருங்கடலின், 

அந்தம் - முடிவில், இருப்பவரும், 

விஸ்வ சம்புவம் - உலகம் விளையக் காரணமானவரும், மங்கலம் செய்பவரும், 

ஹ்ருதயம் ச அபி -  இதயம், 

அதோ முகம் - கீழ் நோக்கிய, 

பத்ம கோச ப்ரதீகாசம் - தாமரை மொட்டு போல், 

முடிவற்றவரும், அனைத்தும் உணர்ந்தவரும், அறிந்தவரும், சம்சாரப் பெருங்கடலின் இறுதியில் இருப்பவரும், 

உலகிற்கு நன்மை செய்பவரும், ஆகிய நாராயணனை, கீழ் நோக்கிய தாமரை மொட்டு போல் அமைந்துள்ள

இதயத்தில் த்யானிக்கின்றேன் .

7. அதோ’ னிஷ்ட்யா வி’தஸ்யாம்தேனாப்யாமு’பரி திஷ்ட’தி |

ஜ்வாலமாலாகு’லம் பாதீ விஶ்வஸ்யாய’தனம் ம’ஹத் |

நிஷ்ட்ட்யா - குரல் வளைக்கு, 

அத - கீழே, 

நாப்யாம் - தொப்புளுக்கு, 

உபரி - மேலே, 

விதஸ்யா : அந்தே - ஒரு சாண் தூரத்தில், 

திஷ்டதி -  இருக்கிறது .

விச்வச்ய - அனைத்து உலகிற்கும்,

மகத் - உயர்ந்த,  சிறந்த, 

ஆயதனம் - உறைவிடம்.

ஜ்வாலமால குலம் - சுடர் வரிசையால் சூழப்ப்பட்டார்ப்போல், 

பாதி - ப்ராகசிக்கிறது .

குரல் வளைக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே,  ஒரு சாண் தூரத்தில் இதயம் இருக்கிறது .

உலகிற்கெல்லாம் சிறந்த அந்த உறைவிடம், சுடர் வரிசையால் சூழப்பட்டற்போல் பிரகாசிக்கிறது .

8.ஸன்தத’க்‍ம் ஶிலாபி’ஸ்து லம்பத்யாகோஶஸன்னி’பம் |

தஸ்யாம்தே’ ஸுஷிரக்‍ம் ஸூக்ஷ்மம் தஸ்மின்” ஸர்வம் ப்ரதி’ஷ்டிதம் |

ஆகோச சந்நிபம் - தாமரை மொட்டு போன்ற இதயம், 

சந்ததம் - நான்கு புறங்களிலும், 

சிலாபி - நாடிகளால், 

லம்பதி - தொங்குகிறது, 

தஸ்ய - அதன், 

அந்தே - உள்ளே, 

சூக்ஷ்மம் - நுண்ணிய, 

சூக்ஷிரம் - ஆகாசம், 

சர்வம் - அனைத்தும், 

தஸ்மின் - அதில், 

ப்ரதிஷ்டிதம் - நிலை பெற்றுள்ளன .

தாமரை மொட்டு போன்ற இதயம் நாற்புறங்களிலும் நாடிகளால் சூழப்பட்டு தொங்குகிறது .

அதன் உள்ளே ஆகாசம் உள்ளது. அனைத்தும் அதில் நிலை பெற்றுள்ளன.

9. தஸ்ய மத்யே’ மஹான’க்னிர்-விஶ்வார்சி’ர்-விஶ்வதோ’முகஃ |

ஸோ‌உக்ர’புக்விப’ஜம்திஷ்ட-ன்னாஹா’ரமஜரஃ கவிஃ |

தஸ்ய - அதன், 

மத்யே - நடுவில், 

விச்வார்ச்சி - எங்கும் ஒழி வீசுபதாகவும், 

விச்வதோ முக :-எல்லாத் திக்கிலும் செல்வதாகவும், 

மகான் - சிறந்த, 

அக்னி - அக்னி, 

அக்ரபுக்- முதலில் உண்பதாக, 

ஆகாரம் - உணவை, 

விபஜஸ் - பிரித்துக் கொடுப்பதாக, 

திஷ்ட்டன் -  நிலைத்து நிற்பதாக .

அஜர - பழுது படாதததாக .

கவி - அனைத்தையும் காண்பதாக .

எங்கும் ஒளி வீசுபதாகவும், எல்லாத் திசைகளிலும் செல்வதாகவும் உள்ள சிறந்த அக்னி, அந்த ஆகாசத்தின் நடுவில் உள்ளது .  பிராணனாகிய அந்த அக்னி, முதலில் உண்பதாகவும்,  உணவைப் பிரித்துக் கொடுப்பதாகவும், நிலைத்து நிற்பதாகவும், தான் பழுது படததாதாகவும், அனைத்தையும் காண்பதாகவும் உள்ளது.

 

10. திர்யகூர்த்வம’தஶ்ஶாயீ ரஶ்மய’ஸ்தஸ்ய ஸம்த’தா |

ஸம்தாபய’தி ஸ்வம்தேஹமாபா’ததலமஸ்த’கஃ |

தஸ்யமத்யே வஹ்னி’ஶிகா அணீயோ”ர்த்வாவ்யவஸ்தி’தஃ

தஸ்ய - அந்த பிராணனின், 

ரச்மைய - கிரணங்கள், 

த்ரியக் - குறுக்கிலும், 

ஊர்த்வம் - மேலும், 

அத - பரவி, 

சந்ததா - எப்போதும் வியாபித்திருக்கின்றன .

ஆபாத தல மஸ்தக :-உள்ளங்கால் முதல் உச்சந்த்தலை வரை, 

ஸ்வம் தேகம் - தனக்குரிய உடலை, 

சந்தாபயதி - உஷ்ணமுள்ளதாகச் செய்கிறது .

தஸ்ய - அதன், 

மத்யே - மத்தியில், 

அணீய - மெலிதான, 

வஹ்நிசிகா - நெருப்புச்சுடர்,

ஊர்த்வா - மேல் நோக்கி அமைந்துள்ளது

அப்பிராணனின் கிரணங்கள், குறுக்கிலும், நெடுக்கிலும், மேலும் கீழும் பரவி, உடல் எங்கும் நிறைந்துள்ளன .  உச்சி முதல் பாதம் வரை தனது உடலை சூடுள்ளதாகச் செய்கிறது .

இதன் நடுவில் மெலிதான அக்கினிச் சுடர் மேல் நோக்கி அமைந்துள்ளது .

11.  னீலதோ’-யத’மத்யஸ்தாத்-வித்யுல்லே’கேவ பாஸ்வ’ரா |

னீவாரஶூக’வத்தன்வீ பீதா பா”ஸ்வத்யணூப’மா |

நீலதோயாத மத்யஸ்தாத் ‘கருத்த மேகங்களின் மத்தியில் இருந்து, 

பாஸ்வரா - ஒளி வீசுகின்ற, 

வித்யுத் லேகா இவ - மின்னர்க் கொடி போல், 

நீவார சூகவத் - நெல் மணியின் சிறு முளை போல், 

தன்வீ - மெல்லியதாக, 

பீதா - பொன்னிறமாக, 

அணு உபமா - நுண்ணியதான அணுவைப் போல், 

பாஸ்வதி - ஒளிர் விட்டுக் கொண்டு இருக்கின்றது .

12. தஸ்யா”ஃ ஶிகாயா ம’த்யேபரமா”த்மா வ்யவஸ்தி’தஃ|

ஸ ப்ரஹ்ம ஸ ஶிவஃ ஸ ஹரிஃ ஸேம்த்ரஃஸோ‌உக்ஷ’ரஃ பரமஃ ஸ்வராட் ||

தஸ்யா - அந்த, 

சிகாயா - சுடரின்

மத்யே - மத்தியில், 

பரமாத்மா - அனைத்தையும் கடந்த இறைவன் வீற்றிக்கிறார் .

ஸ : அவரே, 

பிரம்மா - பிரம்மா,

ஸ - அவரே, 

ஹரி - விஷ்ணு, 

ஸ - அவரே, 

சிவ - சிவன், 

ஸ - அவரே, 

இந்த்ர - இந்திரன், 

ஸ - அவரே, 

அக்ஷரே - கட்டுக்குள் அடங்காதவர்,அழிவற்றவர், 

ஸ்வராட் - தனது ஒளியுடன் பிரகாசிப்பவர் .

பர : அவருக்கு மேல் எவரும் இல்லாதவர் 

அச் சுடரின் நடுவில் இறைவன் வீற்றிக்கிறார் .அவரே பிரம்மா, அவரே சிவன், அவரே ஹரியாகிய விஷ்ணு, அவரே இந்திரன், அவர் அழிவற்றவர் தன் சுய ஒளியுடன் பிரகாசிப்பவர் அவருக்கு மேல் எவரும் இல்லாதவர்.

13.றுதக்‍ம் ஸத்யம் ப’ரம் ப்ரஹ்ம புருஷம்’ க்றுஷ்ணபிம்க’லம் |

ஊர்த்வரே’தம் வி’ரூபா’க்ஷம் விஶ்வரூ’பாய வை னமோ னமஃ’ ||

ரிதகும் - காணும் பொருள்களின் அழகாகவும் சீராகவும், 

சத்யம் - காண் பொருட்களுக்கு ஆதாரமாகவும் உள்ள, 

பரம் ப்ரஹ்ம - பரம் பொருளை, 

புருஷம் - உடலனைத்தும்,உடல் தோறும் உறைபவனை, 

கிருஷ்ண பிங்கலம் - கரு மேனித் திருமாலும், செம்மேனிச் சிவனும், 

இணைந்த வடிவை, 

ஊர்த்வரேதம் - சக்தி கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் இறைவனை, 

விருபாக்ஷனை - முக்கண் உடயோனை, 

விச்வரூபாய வை - அனைத்தையும் தன வடிவாய்க் கொண்டவனை, 

நமோ நம - பன் முறை வணங்குகிறேன் .

காணும் பொருள்களின் ஆதாரமாகவும் அவற்றின் எழிலாகவும் உள்ள பரம் பொருளை, உடல்கள் அனைத்திலும், உறைபவனை, கருமேணித் திருமாலும் செம்மேனிச் சிவனும் ஒருங்கிணைந்த வடிவை தூயவனை, முக்கண்ணனை அனைத்தையும் தன வடிவைக் கொண்டவனை பன் முறை வணங்குகிறேன்

ஓம் னாராயணாய’ வித்மஹே’ வாஸுதேவாய’ தீமஹி | தன்னோ’ விஷ்ணுஃ ப்ரசோதயா”த் ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

நாராயணாய - நாராயணனை, 

வித்மஹே - அறிந்து கொள்வோம் .

வாசுதேவாய - வாசு தேவரின் புதல்வனாகிய வாசுதேவனை, 

தீமஹி - த்யானிப்போம் .

தத் விஷ்ணு - அந்த விஷ்ணு, 

ந ;நம்மை, 

ப்ரசோதயாத் - தூண்டட்டும் .

நாரணனை அறிந்து கொள்வோம் .  அந்த வாசுதேவனைத் த்யாநிப்போம் . அந்த விஷ்ணு அவரைத் த்யானிக்க நம்மைத் தூண்டட்டும் .


ஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் |

விஶ்வம்’னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் |

விஶ்வதஃ பர’மான்னித்யம்விஶ்வம் னா’ராயணக்‍ம் ஹ’ரிம் |

விஶ்வ’மேவேதம் புரு’ஷ-ஸ்தத்விஶ்வ-முப’ஜீவதி |

பதிம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’ரக்ம் ஶாஶ்வ’தக்‍ம் ஶிவ-மச்யுதம்

னாராயணம் ம’ஹாஜ்ஞேயம் விஶ்வாத்மா’னம் பராய’ணம் |

 னாராயணப’ரோஜ்யோதிராத்மா னா’ராயணஃ ப’ரஃ |

 னாராயணபரம்’ ப்ரஹ்ம தத்த்வம் னா’ராயணஃ ப’ரஃ |

னாராயணப’ரோ த்யாதா த்யானம் னா’ராயணஃ ப’ரஃ |

யச்ச’கிம்சிஜ்ஜகத்ஸர்வம் த்றுஶ்யதே” ஶ்ரூயதே‌உபி’ வா ||

அம்த’ர்பஹிஶ்ச’ தத்ஸர்வம் வ்யாப்ய னா’ராயணஃ ஸ்தி’தஃ |

அனம்தமவ்யயம்’ கவிக்‍ம் ஸ’முத்ரே‌உம்தம்’ விஶ்வஶம்’புவம் |

 பத்மகோஶ-ப்ர’தீகாஶக்ம் ஹ்றுதயம்’ சாப்யதோமு’கம் |

அதோ’ னிஷ்ட்யா வி’தஸ்யாம்தேனாப்யாமு’பரி திஷ்ட’தி |

ஜ்வாலமாலாகு’லம் பாதீ விஶ்வஸ்யாய’தனம் ம’ஹத் |

ஸன்தத’க்‍ம் ஶிலாபி’ஸ்து லம்பத்யாகோஶஸன்னி’பம் |

தஸ்யாம்தே’ ஸுஷிரக்‍ம் ஸூக்ஷ்மம் தஸ்மின்” ஸர்வம் ப்ரதி’ஷ்டிதம் |

தஸ்ய மத்யே’ மஹான’க்னிர்-விஶ்வார்சி’ர்-விஶ்வதோ’முகஃ |

ஸோ‌உக்ர’புக்விப’ஜம்திஷ்ட-ன்னாஹா’ரமஜரஃ கவிஃ |

திர்யகூர்த்வம’தஶ்ஶாயீ ரஶ்மய’ஸ்தஸ்ய ஸம்த’தா |

ஸம்தாபய’தி ஸ்வம்தேஹமாபா’ததலமஸ்த’கஃ |

தஸ்யமத்யே வஹ்னி’ஶிகா அணீயோ”ர்த்வாவ்யவஸ்தி’தஃ

| னீலதோ’-யத’மத்யஸ்தாத்-வித்யுல்லே’கேவ பாஸ்வ’ரா |

னீவாரஶூக’வத்தன்வீ பீதா பா”ஸ்வத்யணூப’மா |

தஸ்யா”ஃ ஶிகாயா ம’த்யேபரமா”த்மா வ்யவஸ்தி’தஃ

| ஸ ப்ரஹ்ம ஸ ஶிவஃ ஸ ஹரிஃ ஸேம்த்ரஃஸோ‌உக்ஷ’ரஃ பரமஃ ஸ்வராட் ||

றுதக்‍ம் ஸத்யம் ப’ரம் ப்ரஹ்ம புருஷம்’ க்றுஷ்ணபிம்க’லம் |

ஊர்த்வரே’தம் வி’ரூபா’க்ஷம் விஶ்வரூ’பாய வை னமோ னமஃ’ ||

ஓம் னாராயணாய’ வித்மஹே’ வாஸுதேவாய’ தீமஹி | தன்னோ’ விஷ்ணுஃ ப்ரசோதயா”த் ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||