ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த - ஸ்ரீ அம்ருத பலா வளி

ஸ்ரீ எறும்பியப்பாவின் தனியன் :

ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

இவர் சர்வலோக சரண்யரின் திருக்குமாரர் -தேவராஜன் இயல் பெயர் 

ஆராதன பெருமாள் சக்ரவர்த்தி திரு மகன்

இப்பொழுது நம் கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருமாளிகையில் சேவிக்கலாம்

திருநக்ஷத்ரம்: ஐப்பசி ரேவதி

அவதார ஸ்தலம்: எறும்பி

ஆசார்யன்: அழகிய மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: (திருமகனார்) பெரிய அப்பா, சேனாபதி ஆழ்வான்

நூல்கள்: பூர்வ தினசர்யா, உத்தர தின சர்யா, வரவரமுநி சதகம், விலக்ஷண  மோக்ஷ அதிகாரி நிர்ணயம், உபதேச ரத்ன மாலையில் கடைசிப் பாசுரம்

கனு அன்று இன்றும் பக்தலோசனன் எறும்பி க்ராமத்துக்கு எழுந்து அருளி சேவை சாதிக்கிறார்
மா முனிகள் இங்கே எழுந்து அருளி இருந்து கால ஷேபம்செய்து அருளினார்
எறும்பி க்ராமத்தையே வட திருவரங்கம் என்றும் இங்கு உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களை -அழகிய மணவாள தாசர்கள் என்றும் திரு நாமம் சாத்தி அருளினார்

————

ஸ்ரீ அம்ருத பலா வளி என்னும் ஸ்ரீ கடிகாசல ந்ருஸிம்ம ஸ்தோத்ரம்-

ஸ்ரீ வேங்கடேச சரணவ் சிரஸீ கரோமி ஸ்மிதாப்ஜ ஸூஹ்ருதவ் தவ்
ப்ருது தரம் அபி பவ ஜலதிம் பிப்தி தராம் யத் ப்ராக ப்ரமாணு–1-

மங்கள ஸ்லோகத்துடன் உபக்ரமிக்கிறார்

ஸ்மிதாப்ஜ ஸூஹ்ருதவ் தவ்– அப்போது அலர்ந்த தாமரையை ஒத்த திருவடித் தாமரைகளை

ஸ்ரீ வேங்கடேச சரணவ் சிரஸீ கரோமி –என் சென்னிக்கு அணிவனே என்கிறார்-

ம முனிகள் திரு உள்ள உகப்புக்காக அவர் கைங்கர்யம் செய்த திரு வேங்கடத்தானையே –
இவர் தான் மா முனிகள் திரு நாமம் கேட்டுக்கொண்டே திருக்கண் விழித்து அருளுகிறார் நித்யமாகவே –
ப்ருது தரம் அபி பவ ஜலதிம் பிப்தி தராம்—மிகப் பெரிய சம்சார ஆர்ணவத்தை
யத் ப்ராக ப்ரமாணு-சிறிய ஸ்ரீ பாத தூளியாலேயே போக்கி அருளுகிறார் அன்றோ

—–

ஸ்ரீத கடிகாசல ஸ்ருங்கம் ஸ்ரீ தல கருணா தரங்கித அபாங்கம்
மனஸி மம உல்லஸ தங்கம் வஸதி மஹ கிமபி வாஸஸா பிங்கம்–2-

ஸ்ரீ தல கருணா தரங்கித அபாங்கம்-குளிர்ந்த கருணை அலைகள் வீசிக்கொண்டே கடாக்ஷித்து அருளுகிறான்

வாஸஸா பிங்கம்-பொன்னிற மேனி மரகதமாய்
மனஸி மம உல்லஸ தங்கம் வஸதி-உவந்த உள்ளத்தனாய் அடியேன் மனத்துள்ளான்-என்பதை உணர வைத்து அருளுகிறார்

—————-

வ்யத்யஸ்த சரண கமலாம் விநிஹித புஜ யுகல மித்ர ஜாநு யுகாம்
விலஸித ரதாங்க சங்காம் வ்யக்திம் உபாஸே விருத்தி ஜாதி மதீம்–3-

வ்யத்யஸ்த சரண கமலாம் -யோக நிலையில் அமர்ந்த திருக்கோலம்
விநிஹித புஜ யுகல மித்ர ஜாநு யுகாம் -திருக்கரங்கள் முழங்கால் பர்யந்தம் நீண்டு -மித்ர பாவத்துடன் இரண்டும்
விலஸித ரதாங்க சங்காம் -திருவாழி பாஞ்ச ஜன்ய ஆழ்வார்களுடன் விளங்கி -ஆழி யம் காய் பிரான் அச்சோ ஒரு அழிகிய வா
வ்யக்திம் உபாஸே விருத்தி ஜாதி மதீம்–அழகியான தானே அரி உருவான தானே -அவனையே உபாஸிப்போம்

——————–

கலித தநு தநய பங்கம் கர கமலா ப்ரண வாரிஜ ரதாங்கம்
க்ருத கடிகாசல சங்கம் கிமபி மஹோ ஜயதி கேதந விஹங்கம் –4-

தனு-தானவர்கள் திதி-தைத்யர்கள் அதிதி -தேவர்கள் -கஸ்யபர் மனைவிகள் மூவரும்
தனு தனயன் -ஹிரண்ய கசிபு
வாரிஜ ரதாங்கம் -திரு சங்கு ஆழி ஆழ்வார்கள்
ஜய கோஷம் -கை வண்ணம் தாமரை -வடிவார் சோதி வலத்துறையும் ஆழியும் பல்லாண்டு
தேஜஸ் நிறைந்த திவ்ய தேசம்
விநதா ஸூதனுக்கும் பல்லாண்டு பாடுகிறார்

——————-

ஸர்வ ரஸ கந்த பரிதம் சங்க தமே கமபி ஸகல ஸாகா ஸூ
அம்ருத பலம் அகில பும்ஸாம் ஆஸ் வாத்யம் சித்ர மஸ்தி கடிகாத்ரவ் –5-

ஸர்வ ரஸ கந்த பரிதம்-ஸர்வ கந்த ஸர்வ ரஸ  -குழந்தைகளுக்கு ஏற்ற தம்மை அமைத்து அனுபவிக்குமவன் அன்றோ
ஏகமபி -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் ஏக மேவ அத்விதீயம்
சங்க தம் ஸகல ஸாகா ஸூ-ஸகல உபநிஷத்துக்கள் சாகைகளும் இவ்வாறே கோஷிக்குமே
அம்ருத பலம் -அக்கார கனி என்றவாறு -ஸ்வயம் ப்ரயோஜன பக்தர்களுக்கு இருக்கும் இருப்பு
கறந்த பால் நெய்யே- நெய்யின் இன் சுவையே -கடலினுள் அமுதமே -அமுதினில் பிறந்த இன் சுவையே – பேர் ஆயன்
ஸ்ரீ ருக்மிணி பிராட்டியும் காலே ஸ்ரீ நரஸிம்ஹா -நர லோக மநோபிராமம் என்றாளே
அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றியவனையே முதலில் கூப்பிடுகிறார்கள்
அகில பும்ஸாம் ஆஸ் வாத்யம் சித்ர மஸ்தி –நல்லை நெஞ்சே –நாம் தொழும் நம் பெருமான் அன்றோ இவன்

கறந்தபால் நெய்யே! நெய்யின் சுவையே. கடலினுள் அமுதமே, அமுதில்

பிறந்தவின் சுவையே! சுவையது பயனே! பின்னைதோள் மணந்தபே ராயா!–8-1-7-

கறந்தபால்! என்பது தனிப்பட்ட விளி. கறந்தபோதே இயற்கையான ரஸத்தையுடைத்தான பால்போல் பரமபோக்யனே! என்றபடி.

பாலின் ஸாரமான நெய்யே! நெய்யினுடைய இனி சுவைதானே வடிவெடுத்த தென்னலாம்படி. யுள்ளவனே!,

கடலிடைத் தோன்றிய அமுதமே! அவ்வமுதத்தின் இனிமைதானே வடிவெடுத்ததென்னலாம்படியள்ளவனே! என்று இத்தனை சொல்லியம் த்ருப்தி பிறவாமையாலே பின்னைதோள் மணந்த பேராயா! என்று அவன் தன்னையே சொல்லித் தலைக்கட்டுகிறார்.

நப்பின்னைப் பிராட்டியும் நீயுமான சேர்த்திதானே ஸ்வயம் போக்யமன்றோ? இந்த போக்ய வமையிட்டுக் கூறவேணுமோ? என்றவாறு.

நப்பின்னையை மணந்ததுபோல என்னையும் மணக்க ப்ராப்தியில்லையோ வுனக்கு என்ற கருத்துக் கொள்ளலாம்.

——————-

ஆரண்யக அவாப்த வாக்யைர் அவகம்யோ க்ராம்ய ஜன த்ருஸாமப்தம்
ஸ்புரிதி கடிகாசல அக்ரே புருஷ ம்ருக கோபி புண்ய க்ருது உபேய –6-

ஆரண்யக அவாப்த வாக்யைர் அவகம்யோ க்ராம்ய ஜன த்ருஸாமப்தம் -வேடர்கள் க்ராம மக்களைப் பார்த்து சொன்னதாகவும்
பாமர மக்களுக்கு வேத புருஷன் காட்டிக் கொடுத்ததாகவும் கொள்ளலாம்
ஸ்புரிதி கடிகாசல அக்ரே புருஷ ம்ருக -ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாள் ஒளி விஞ்சி உள்ளாரே
கோபி புண்ய க்ருது உபேய –புண்யம் யாம் உடையோம் என்று ஆய்ச்சிகள் மகிழ்வார்கள் அன்றோ

———–

மஹதி கடிகாத்ரி விஷயே மஹதா ஸ்நேஹேந நிர்மல தஸாயாம்
தே தீப்யதே ஸ்திரோ அயம் திவ்யைர் முனிபி ப்ரவர்த்தித்தோ தீப –7-

மஹதி கடிகாத்ரி விஷயே -கடிகைத்தடம் குன்றமே அகலாக
மஹதா ஸ்நேஹேந நிர்மல தஸாயாம் –ஆர்வமே நெய்யாக -பக்தி -நீராய் அலைந்து உடலையும் உருக்குமே –
ஸூத்தமான மனஸே த்ரியாகவும்
திவ்யைர் முனிபி -ஆழ்வார்கள் தானே திவ்ய முனிகள்
தே தீப்யதே ஸ்திரோ அயம் -ஏற்றி வைத்த தீபத்தாலே
ப்ரவர்த்தித்தோ அயம் தீப–ஸ்ரீ அக்காரக்கனியே ஒளி விஞ்சி காட்சி தந்து அருளுகிறார்

———–

முஷ்ணம் ஸ்தமோ ஜநாநாம் மூர்தநி கடிகாலஸ்ய ஸம் பூத
ஆலோகதோ அகிலார்தன் அவகமயதி நித்யம் அச்யுதோ தீப –8-

முஷ்ணம் ஸ்தமோ ஜநாநாம் -அஞ்ஞானம் போக்கி அருளி
மூர்தநி கடிகாலஸ்ய ஸம் பூத -நித்தியமாக எழுந்து அருளிய
ஆலோகதோ -கடாக்ஷ மஹிமையாலே
அகிலார்தன் அவகமயதி -வேண்டிய புருஷார்த்தங்களையும் அருளி
நித்யம் -எப்பொழுதுமாக நிலை நிற்கும் படி
அச்யுதோ தீப –நந்தா விளக்கு

———

ரஸ்யம் ஸக்ருது பஸேவ்யம் லப்யம் அபத்ய ஸஹம் அஸூஹித மமோகம்
த்வரிதம் ஹரதி பவார்த்திம் ஸூத்தம் கடிகாத்ரி மௌலிஜம் மூலம் –9-

ஸூத்தம்-ஸூத்த ஸத்வ மாயம்
கடிகாத்ரி மௌலிஜம் மூலம் ரஸ்யம் -மருத்துவனாய் நின்ற மா மணி -பேஷஜம் பிஜக் –விருந்தாகவும் போக்யமாகவும்
ஸக்ருது பஸேவ்யம் -ஒரே தடவை கிருபா கடாக்ஷம் பட்டாலே போதுமே
லப்யம் -எளிதாகவே லபிக்குமே
அபத்ய ஸஹம் -பாபங்களை பாற்றி உரு மாய்ந்து போக வைக்கும்
அஸூஹித மமோகம் -ஆராவமுதம்
த்வரிதம் ஹரதி பவார்த்திம் -ஸம்ஸாரம் உடனே அறுக்குமே

————-

ஸ்திர சோக ஸல்ய வ்யஹரணம் ஜகதாம் விச்சின்ன குசல சந்தானம்
ஸஞ்ஜீவனம் அபி கடிகாசைல ஜ மூலம் கரோதி ஸாரூப்யம் –10-

விகல்ய கரணி -சாதாரண நோய்களுக்கு மருந்து
சந்தான கரணி -எலும்பு முறிவு போன்றவற்றுக்கு மருந்து
சஞ்ஜீவ கரணி -உயிர் போவதையும் மீட்டுக் கொடுக்கும் மருந்து
சாரூப்ய கரணி -கோர ரூபம் மாற்றி -அழகு ரூபம் கொடுக்கும் மருந்து
ஆயுர் வேதத்தில் லோகத்தில் நான்கு விதங்கள் உண்டு

ஸ்திர சோக ஸல்ய வ்யஹரணம் ஜகதாம் -சோகம் ஆகிய அம்பால் துன்புறும் லோக மக்களின் அனிஷ்டங்களைப் போக்கி அருளும்
விச்சின்ன குசல சந்தானம் -எலும்பு முறிந்த மக்கள் -செல்வம் இழந்த மக்களைக் காத்து அளிக்கும்
ஸஞ்ஜீவனம் அபி -உயர் போகும் நிலையில் நுகர்ந்தால் -ஆத்ம ஸ்வரூபம் நசிந்தாலும் -மீட்டுக் கொடுக்கும்
கடிகாசைலஜ மூலம்
கரோதி ஸாரூப்யம் –ஸாம்யாபத்தி -சாரூப்யம் சாலோக்யம் சாமீப்யம் ஸாயுஜ்யம் அளிக்கும்

————————–

அதி பல பவாஹி தஷ்டான் அபிலாஷ விஷாக்னி மூர்ச்சநா நஷ்டான்
கடிகா சிகரி நரேந்த்ர கடயத்ய ஸூபி கடாக்ஷ மாத்ரேண –11-

அதி பல பவாஹி தஷ்டான் -மிக்க பலமுள்ள ஸம்ஸார சர்ப்பம் கடியில் ஆழ்ந்த நம்மை
அபிலாஷ விஷாக்னி மூர்ச்சநா நஷ்டான் -அதுக்கும் மேல் விஷயாந்தர அபிநிவேச அக்னியாலும் தவிக்கும் நம்மை
காமம் அடிப்படை -க்ரோதம் லோபம் போல் மேல் மாறுமே
கடிகா சிகரி நரேந்த்ர -இங்குள்ள அக்காரக்கனி எம்பெருமான்
கடயத்ய ஸூபி கடாக்ஷ மாத்ரேண -கடாக்ஷ லேசத்தாலேயே போக்கி அருளி நித்யர்களுடன் ஒரு கோவை யாக்கியும் அருளுகிறார் அன்றோ

நஷத்ர மாலிகை ஜீயர் நாயனார் ஆழ்வாரையும் இதே போல் ஸ்துதிக்கிறார் அன்றோ –

நமஜ்ஜனஸ்ய சித்த பித்தி, பக்தி சித்ர தூலிகா
பவார்ஹி வீர்ய பஞ்சநே, நரேந்த்ர மந்த்ர யந்த்ரனா |
ப்ரபன்ன லோக கைரவ, ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா, ஹடாத்கரோதுமே தம: | |–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் கடைசி ஸ்லோகம் 8

தம்மை வணங்குபவர்களுடைய ஹ்ருதயம் ஆகிற சுவரிலே பக்தியாகிற சித்திரத்தை எழுதும் கருவியாகவும் –
காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய வீர்யத்தைத் தணிக்கும்
விஷயத்தில் விஷ வைத்தியனுடைய (நரேந்திர -விஷ வைத்தியன்) மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்.

பிரபன்ன ஜனங்கள் ஆகிற ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல அழகிய நிலாப் போன்றதையும்
இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வாருடைய திருக் கைத்தல முத்ரையானது (உபதேச முத்திரை)
என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து போக்கி அருள வேணும்.

—————-

சோரம் ஸ்வதஸ்ச்யுதம் மாம் ஸ்வாமீ கடிகாத்ரி போ விசின்வான
த்ருஷ்ட்வா குதோ அப்யுபாயாத த்ருபதம் அபத்நாத் தயா குணேந த்ருடம் –12-

சோரம் ஸ்வதஸ்ச்யுதம் மாம் த்ருபதம் -கள்வன் நானே அன்றோ -பிறர் நன் பொருளை அபகரித்தவன்
ஸ்வாமீ கடிகாத்ரி போ விசின்வான -உடையவன் அக்காரக்கனி -ஸர்வஞ்ஞன் அன்றோ
த்ருஷ்ட்வா குதோ அப்யுபாயாத -அப்போது ஒரு சிந்தை செய்து -என்னுள் புகுந்தான் –
ஆச்சார்யர்களைக் காட்டிக்கொடுத்து திருத்திப் பணி கொண்டு அருளினானே
அபத்நாத் தயா குணேந த்ருடம் –தயை என்னும் குணத்தாலே நன்றாக அவன் இடம் விலகாமல் கட்டி வைத்து
கைங்கர்யமும் கொண்டு அருளினானே-

——————

விமல கபி ஸேவ்ய மாநா விலஸித சந்நிஹித சங்கு ஸக்ராப்ஜா
கா அபி கடிகாத்ரி சிகரே கருணா ரஸ பூர நிர்பரா ஸரஸீ –13-

விமல கபி ஸேவ்ய மாநா –ஆச்சார்யர் போன்ற திருவடி யோக ரூப ஆஞ்சநேயர் -ஸேவை –
கிழக்கு புறம் இருந்து நரஸிம்ஹனை மங்களா ஸாஸனம் செய்து கொண்டே ஸேவை ஸாதித்து அருளுகிறார்
விலஸித சந்நிஹித சங்கு ஸக்ராப்ஜா -அதனாலேயே மலர்ந்த ஆழ்வாராதிகள் இவர் திருக்கரங்களில்
கா அபி கடிகாத்ரி சிகரே -அக்காரக்கனி எம்பெருமானே
கருணா ரஸ பூர நிர்பரா ஸரஸீ -கருணை வெள்ளம் தடாகம்-நீர்ப்பண்டமாக வருகிறதே
கபி -ஸூர்யன் என்று கொண்டு
கதிரவன் கிழக்கு திசையில் ஸேவிக்க வர தாமரைகள் மலரும் -சங்கு சக்கர ஆழ்வார்கள் விகசிதம் அடைந்தன என்றுமாம் –

————-

நிர் முக்த போக ஸூத்தான் நித்ய மஹீநாந் வஹந் நிஜா சக்தான்
பாதி கடிகாத்ரி சிகரே பத்ர ஸ்ரீ கோ அபி பரிமலீ ஸாகீ –14-

நிர் முக்த போக ஸூத்தான் -போகி -அநந்தன் -போகீந்த்ர ஸாயி -அவன் -தோலை உரித்த பாம்புகள் -ஆச்சாரம் மிக்கு உள்ளன
ப்ரபன்னர்கள் -ஸம்ஸார போகம் நீங்கினவர்கள் உள்ளார்கள்
நித்ய மஹீநாந் வஹந் -நிறைய பாம்பு இனங்கள் உள்ளன
நிஜா சக்தான் பாதி கடிகாத்ரி சிகரே பத்ர ஸ்ரீ -அக்காரக்கனி மேல் பற்றுதலை வைத்துள்ளார்கள் -இங்கு உள்ளார் அனைவருமே ப்ரபன்னர்கள்
அனைவரையும் வாழ வல்ல தாயார் -பத்ர ஸ்ரீ எழுந்து அருளி ஸேவை சாதிக்கிறாள்
கோ அபி பரிமலீ ஸாகீ –நறுமணம் மிக்க சந்தன மரங்களும் உள்ளன -அனைத்து கலைகளுமே மங்களா ஸாஸனம் பண்ணுமே -என்றவாறு –

—————-

கருண அம்ருத ரஸ வர்ஷைர் கடிகாசல கடித க்ருஷ்ண மேகை நிஜைர்
ஸம் சரணி தரணி தப்தம் ஸஞ்ஜீவய விநதஸஸ்ய ஜால மிதம் –15-

கருண அம்ருத ரஸ வர்ஷைர் -கருணா ரஸ பொய்கை கீழ் இங்கு மழை -கருணை பொங்கிய கண்ணினை வாழியே -இவர் மூலமே மா முனிகளுக்கு
கடிகாசல கடித க்ருஷ்ண மேகை நிஜைர்-அக்காரக்கனி கறுத்த மேகம்
ஸம் சரணி தரணி தப்தம் –தாபத்ரயங்களால் தபிக்கும் –
ஸம்ஸார ஸூர்யன்
ஸஞ்ஜீவய விநதஸஸ்ய ஜால மிதம் –வாடி வதங்கி இருக்கும் பயிர் போல்வாரை இவற்றில் இருந்து காத்து அருளும் –

————

விமல தர பக்தி பூரே வ்யபகத பங்கே விகஸ்வராம்புருஹே
மாநஸ ஸரஸி முநீநாம் ரமதே கடிகாத்ரி ராஜ ஹம்ஸ பவாந் –16-

விமல தர பக்தி பூரே -நீராய் அலைந்து கரைய உருக்கும் பக்தி -உடல் எனக்கு உருகுமாலோ –
வ்யபகத பங்கே -காமக்ரோதாதிகள் சேறு நீங்கப்பெற்ற
விகஸ்வராம்புருஹே -மலர்ந்த தாமரை
மாநஸ ஸரஸி முநீநாம் ரமதே –ஹ்ருதய ஸரோவரத்திலே
கடிகாத்ரி ராஜ ஹம்ஸ பவாந் –அக்காரக் கனியே ஹம்ஸ ராஜா -தேவரீர் விளையாடுகிறீர்

—————–

ஸ்தம்போஹி விக்ந காரீ சந்த்ருஷ்டோ ஜகதி ஸர்வ கார்யேஷு
தா நவ விதாரணே தே தஸ்யைவ ஹரே கதம் நு ஸா சிவ்யம் –17-

ஜகதி ஸர்வ கார்யேஷு ஸ்தம்போஹி விக்ந காரீ -உலகில் அனைத்து கார்யங்களையுமே தடைப்படுத்தும் -ஸ்தம்பம் -கம்பம் -என்று ப்ரஸித்தம்
சந்த்ருஷ்டோ–எங்கும் உளன் கண்ணன் -அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -கரந்து எங்கும் பரந்துளன்
-நன்றாகக் கண்டான் ப்ரஹ்லாதாழ்வான்
தாநவ விதாரணே தே -ஹிரண்யனை நிரசிக்கவே நீர் திரு அவதரித்தீர் -ஜய தபாவர பாலகன் அன்றோ –
பக்தனுடைய அனைத்துமே என்னைச் சேர்ந்ததே என்று காட்டி அருளவே உனது மடியில் அவனைப் போட்டுக் கொண்டாய்
அந்தியம் போதில் அழிக்கவே அரி யுருவாய் காத்துக் கொண்டு இருந்தாய் போலும் அந்தத் தூணில்
தஸ்யைவ ஹரே கதம் நு ஸா சிவ்யம் —தடையாகி உள்ள தூணே உனக்கு சஹாயம் பண்ணிற்றே -எவ்வாறு –

—————-

தேவத்வமாக மாத்தே ஸித்தம் திர்யக்த்வம் அபி நரத்வேந
ஸஹ த்ருஷ்டமத்ய கடிகா ஸ்தாவர ஸர்வாத்ம கஸ்ய கிமயுக்தம் –18-

தேவத்வமாக மாத்தே ஸித்தம் -தேவாதி தேவனாக இருப்பது ஸித்தம் -ஆகமம் வேதங்கள் காட்டி அருளும்
திர்யக்த்வம் அபி நரத்வேந -அப்படிப்பட்டவர் திர்யக்க்காகவும் நர ஸிம்ஹமாகவும் உள்ளீர்
ஸஹ த்ருஷ்டமத்ய கடிகா ஸ்தாவர -ஸ்திரமாக இங்கேயே ஸேவை சாதித்து அருளுகிறீர்
ஸர்வாத்ம கஸ்ய கிமயுக்தம் —அனைத்துக்குள்ளும் இருந்து அனைத்துமாகவும் உள்ளீரே -மிகவும் பொருந்துமே

————

பஞ்சாஸ்ய ஏவஹி த்வம் ப்ரதிதோ பகவன் கதம் ஸஹஸ்ராஸ்ய
கடிகாத்ரி பக்ஷ பாதீ க்யாதோ அஸி கதம் ச விஸ்வ சாஷீதி –19-

பஞ்சாஸ்ய ஏவஹி த்வம் ப்ரதிதோ -ஐந்து தலைகளைக் கொண்ட தேவரீர் -விசாலமான திருமுகம் கொண்ட நீர் –
பகவன் கதம் ஸஹஸ்ராஸ்ய -ஆயிரம் தலைகளாகக் கொண்டவராக வேதம் எவ்வாறு சொல்ல முடியும்
ஆயிரம் தலைகள் வேண்டுமோ உமக்கு
கடிகாத்ரி பக்ஷ பாதீ க்யாதோ -இங்கு அக்காரக் கனியாக ஒரு தலைப் பக்ஷ பாதம் செய்து
அஸி கதம் ச விஸ்வ சாஷீதி –லோகங்களுக்கு பதியாக இருப்பது எவ்வாறு -ஜகன் நிர்வாஹம் பண்ணுகிறீர்
ஸங்கல்ப மாத்திரத்திலே அனைத்தும் செய்து அருளி இங்கு பிரியமாக உகந்து அருளி இருக்கிறீர் என்றவாறு –

————-

பஹு தேசம் அல்ப தேசாம் அபி ஸிம்ஹத் வாதத ஸ்திதம் பும்ஸ்த்வம்
மூர்த்தவ் தாவத்ர ந்ரூ ஹரே முக்ய கோவா அவகம்யதே அந்யேந–20-

பும் ஸூக்த பூர்வகைஸ்தை புருஷத்வம் முக்யமேவ தே விதிதம்
கதமியம் அமுக்யதா அஸ்மின் கடிகாத்ரி மனுஜ ம்ருக ராஜ -21-

பஹு தேசம் அல்ப தேசாம் அபி ஸிம்ஹத் வாதத ஸ்திதம் பும்ஸ்த்வம் -ஸிம்ஹ தன்மை ஆல்பம் -மிக பெரிய பகுதி பும்ஸத்வம்
மூர்த்தவ் தாவத்ர -நேராகப் பார்க்கும் திவ்ய மங்கள விக்ரஹம்
ந்ரூ ஹரே முக்ய கோவா அவகம்யதே அந்யேந -முக்கியம் எது என்று யாரால் அறிய முடியும்
பதிலும் இதிலேயே உள்ளதே
ஹிரண்யன் -பயந்தது ஸிம்ஹம் என்பதால் அன்றோ
பும் ஸூக்த பூர்வகைஸ்தை -புருஷ ஸூக்தாதிகள் புகழும்
புருஷத்வம் முக்யமேவ தே விதிதம் -பரத்வம் தானே முக்யம்
கதமியம் அமுக்யதா அஸ்மின் -புருஷத்வம் முக்கியம் அல்ல என்று எப்படி சொல்ல முடியும்
கடிகாத்ரி மனுஜ ம்ருக ராஜ – நீரே அருளிச் செய்ய வேண்டும்
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் -நம்முடைய எம்பெருமான் -ஸர்வமும் முக்கியம் அன்றோ –

—————

விதததி ந பாஹ்ய லஷ்மீ விரஹ விலா ஸாத்த விக்ரியா மநுஜா
ஸ்ரவண அம்ருதேஷு கடிகாஸைல வந ப்ரிய வசஸ்ஸூ தே ஸ்ரத்தாம் –22-

விதததி ந பாஹ்ய லஷ்மீ விரஹ விலாஸ -விசுவாசம் இல்லாமல் ஸந்தான லஷ்மி ஸுபாக்யம் கிட்டாமல் இழந்தே போகிறார்களே
ஆத்த விக்ரியா மநுஜா -அவனைப் பற்றிய த்யானம் இல்லாமல் ப்ரயோஜனாந்தர பரர்களாக
ஸ்ரவண அம்ருதேஷு -செவிக்கு இனிய செஞ்சொல்லாக
கடிகாஸைல வந ப்ரிய -தேவரீரே
வசஸ்ஸூ தே ஸ்ரத்தாம் –தேவரீரே அருளிச் செய்த சரம ஸ்லோகத்தில் நம்பிக்கை கொள்ளாமல்
சத்யம் ப்ரவீத் மனுஷா ஸ்வயம் மூர்த்த பாஹு -திருக்கைகளை மேலே தூக்கி சத்யம் பண்ணினீரே
தே யோ மாம் முகுந்த ஜனார்த்தன அபி -இவ்வாறு திரு நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு
புத்தி சுவாதீனம் இருக்கும் பொழுதே -அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -அனுதினம் யாவதாத்மா பாவி சொல்லிக் கொண்டு இருந்தால்
பாஷாண காஷ்டாம் ஸத்ருசாயா தாதாமி முக்திம் -பிராண பிரயாண சமயம் -கட்டை போல் கிடைக்கும் பொழுது முக்தி அளிக்கிறேன் என்று அருளிச் செய்தீரே-

———–

கார்யம் ஹிரண்ய ஹரணம் கடிகாசல லுப்த கம்ஸ ஹரணம் வா
அஹரஸ்த்வம் ஆஸ்ரிதாநாம் ஹந்த கிம கிலாந்ய நர்த்த ஜாலாநி–23-

கார்யம் ஹிரண்ய ஹரணம் கடிகாசல லுப்த -இங்கே இருக்கவே பேராசை கொண்டு
தங்கம் வெங்கலம் -உயர்ந்த ரிஷிகளுக்கு மட்டும் அனுக்ரஹம் செய்வதற்கா மட்டும் அல்ல
காலே நரஸிம்ஹ -ருக்மிணித் தாயார் ஸந்தேஸம் – இவனே கண்ணன்
ஹரி -அரித்தல் –
கடிகாசல லுப்த -இங்கே இருக்கவே பேராசை கொண்டு கம்ஸ ஹரணம் வா
அஹரஸ்த்வம் ஆஸ்ரிதாநாம் ஹந்த கிம் அகிலாந் யநர்த்த ஜாலாநி -ஆஸ்ரிதர்களுடைய அனைத்து துக்க ஸமூஹங்களையும் போக்கி அருளி
கண்ணுக்கு தெரிந்தே அசுரர்களை போக்கிய மாத்திரம் அல்ல -ஆஸ்ரிதர் ஹிம்ஸை பண்ணும் பிராக்ருதியையும் போக்கி அருளினீர்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் போன்ற அடியேன் போழ்வாரையும் ரக்ஷித்து உனது திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளவே அன்றோ இங்கு நித்ய வாஸம் உக்காந்து செய்து அருளுகிறீர் -என்றவாறு

——–

தோஷா ம மாந்த ரஹித ஸ்வாமின் கடிகேந்த்ர தாவகாஸ் ச குணா
ததபி குணைஸ் த்வது பகை ஸ்தாநே ஹீநா ஸ்ரிதா ஜிதா தோஷா –24-

தோஷா மம அந்த ரஹித -எல்லை இல்லா தோஷங்கள் கொண்ட அடியேன்
அந்த ரஹித ஸ்வாமின் கடிகேந்த்ர தாவகாஸ் ச குணா -ஸகல குண பரிபூர்ண ஸம்பன்னன் –

அடியேனின் ஸ்வாமி -சொத்து நான் என்று உணர்ந்து கொண்டேன்
ததபி -இப்படி இருந்தாலும்
குணைஸ் த்வது பகை ஸ்தாநே ஹீநா ஸ்ரிதா ஜிதா தோஷா –குணங்கள் போட்டி போட்டிக் கொண்டு உம்மை அணுகி ஆஸ்ரயம் பண்ண
அனைத்து தோஷங்களும் தன்னடையே போயினவே

———–

பாதாம் புஜேந லஸதா ப்ரஸ்ருமர மதுநா ப்ரார்த்ய கந்தேந
ஸ்ரயதாம் சமயஸி கடிகா ஸைலப விபரீத வாஸநா ஸகலா–25-

பாதாம் புஜேந -திருவடித்தாமரைகளிலே
லஸதா ப்ரஸ்ருமர மதுநா ப்ரார்த்ய கந்தேந -நறு மணம் மிக்க தேன் பிரவஹிக்க
ஸ்ரயதாம் -ஆஸ்ரிதர்களுடைய
சமயஸி கடிகா ஸைலப விபரீத வாஸநா ஸகலா -காம க்ரோதாதிகள் துர்கந்தங்களைப் போக்கி அருளி
தன்னிடமே வைத்து அனுபவிப்பிக்கிறான் அன்றோ-

—————

ப்ரகுண உதயம் ப்ரஸாதம் ப்ராப்தா நிபுணே ந பதவிதா க்ரதிதா
ஸூதராம் த்வயைவ கடிகா நாயக ஸோபேத ஸூக்தி ஹாரலதா –26-

கடிகா நாயக
ப்ரகுண உதயம் ப்ரஸாதம் ப்ராப்தா -மென்மை பொருந்திய பா மாலை -எளிமையாக பொருள் சொல்லும் ஸ்ரீ ஸூக்திகள்
குளிர்த்தி -பள பளத்து -ஸூத்தியையும் அளிக்கும்
மா முனிகள் ஆச்சார்யர் ஆணையால் செய்யப்பட்டதால் தாமே மங்களா ஸாஸனம் பண்ணி அருளுகிறார்
நிபுணேந பதவிதா க்ரதிதா-வியாகரண சாஸ்திரத்தில் நிபுணரான தன்னால் சேர்க்கப்பட்ட முத்து மாலை போல்
கோக்க ஸாமர்த்யம் மிக்கவரால் செய்யப்பட்டதே
ஸூதராம் த்வயைவ -உம்மைப் பற்றிய இது உம்மாலேயே
ஸோபேத ஸூக்தி ஹாரலதா –சோபனம் ஒளி மிக்கு விளங்குகிறதே -அப்படியே விளங்கட்டும்
நாயகனாய் -நடு நாயக எம்பெருமானாரே கடிகா நாயகர் என்றுமாம் –
இவரையே திரு உள்ளத்தில் வைத்து குரு பரம்பரா ஹாரத்துக்கு மங்களா ஸாஸனம் என்றுமாம் –

—————

ஸரஸ ஸூ மநோ அபி ராமோ ஸாது ச ஸம்ஸ்கார ஸம் ப்ருதோல் லாஸூ
ஸமுபைதி ஸூக்தி லதிகா சங்கா தம்ருத பல தவ ஹி ஸாபல்யம் –27-

ஸரஸ ஸூ மநோ அபி ராமோ ஸாது ச –மனங்களை ஈர்க்கும் வண்ணமாயும் -லலிதமான பதங்களைக் கொண்டும் –
ஸம்ஸ்கார ஸம் ப்ருதோல் லாஸூ –அர்த்த கௌரவமும் உல்லாஸமாக ஸ்துதி பண்ணவும்
ஸமுபைதி ஸூக்தி லதிகா -இந்த ஸ்லோகமும்
சங்கா தம்ருத பல தவ ஹி ஸாபல்யம் —-அக்காரக் கனியே -உமது சம்பந்தத்தால் இந்த ஸ்ரீ ஸூக்தியும் அம்ருதமானதே
அனுசந்திப்போர்க்கு உமது திருவடி இணைகளையே கொடுக்கும் என்பது திண்ணம் என்றவாறு

சம்ஸ்காரம் -கொடி போல் படரும் -நீர் உரம் போல்-சேர்த்து
ஆகர்ஷகமாக இருக்கும் -அம்ருத கனிகளையும் கொடுக்கும் அன்றோ -பொதுவான அர்த்தமும் உண்டே

————–

ஸத் பக்ஷ பாத ஸூபகம் ஸந் மாநஸ ஸரஸி ஜாம்பு ஜா ஸக்தம்
புவநாஸ்ரயம் வி ஸூத்தம் புத்யே கடிகா வநவ் ஸம் ஹம்ஸம் –28-

ஸத் பக்ஷ பாத ஸூபகம் -நீர் நிலையைக் கண்டதும் சிறகு அடித்து மகிழ-அத்தைக் கண்டவர் மனம் வழங்குவார்கள் அன்றோ –
ஆஸ்ரிதர் பக்கல் பக்ஷ பாதி எம்பெருமான் -மனத்தைக் கொள்ளை கொள்வான் –
ஸந் மாநஸ ஸரஸி ஜாம்பு ஜா ஸக்தம் -நீர் நிலையில் தாமரை மேல் அபி நிவேசத்துடன் –
நீராய் அலைந்து கரைந்து உருக்கும் மானஸ தாமரையில் மகிழ்ந்து இருப்பான்
புவநாஸ்ரயம் வி ஸூத்தம் புத்யே -நீரையே ஆச்ரயமாகக் கொண்டு வெண்மையாக –
ஸம்ஸார கந்தமே இல்லாமல் -அமலன் ஆதி பிரான் -இச்சா க்ருஹீத திவ்ய மங்கள விக்ரஹம்
கடிகா வநவ் ஸம் ஹம்ஸம் –இந்த ஹம்சத்தையே ப்ரத்யஷிக்கிறோமே இங்கு –

—————

ஸூ மநோ ரஸ க்ருத சங்கம் ஸ்வரண விசேஷண தோஷிதா நந்கம்
கமலாலய யாந்தரங்கம் கலய கடிகாத்ரி கல்ப தரு ப்ருங்கம் –29-

ஸூ மநோ ரஸ க்ருத சங்கம் -ஆஸ்ரித ஹ்ருதயத்தில் பக்தி வெள்ள ரசத்தில் ஆழ்ந்து
வண்டு மதுகரம் -ரீங்காரம் -ஹரி சப்தம் -ஆச்சார்ய புருஷர்கள் –
ஸ்வரண விசேஷண தோஷிதா நந்கம் -இருப்பதையே கேட்டு -சரீரம் கழித்து
மன்மதன் அநங்கன் -உடல் அழிந்து -கரும்பு வில் மலர் பாணம்
அவனுக்கும் ஆனந்தம் கொடுக்கும்
கமலாலய யாந்தரங்கம் கலய -ஸ்ரீ அந்தரங்க பரிகரமாக தியானித்து அடைவோம்
வந்து தாமரையையே இருப்பிடமாக கொள்ளுமே
வண்டை த்யானம் பண்ணுவோம்
இவரே வண்டு -மா முனிகள் திருவடித் தாமரைகளையே பற்றி இருப்பாரே –
கடிகாத்ரி கல்ப தரு ப்ருங்கம்-நம்மை ஆக்கி தன்னையே தரும் கற்பகம்-

——————

துர்கதி துக்கித சித்தா துஷ் கர யோகாந் விமுச்ய ஸூக ஸே வ்யாம்
பிராஜ்ஞா ப்ரயாந்தி நித்யாம் பூதிம் கடிகாத்ரி பூப்ம ஆலம்ப்ய–30-

பிராஜ்ஞா துர்கதி துக்கித சித்தா –நந்தா நரகம் -வெந்நரகம் -ஸம்ஸாரம் வெறுத்து இருக்கும் ஞானிகள்
ஐஸ்வர்யம் இழந்த துக்கம்
துஷ் கர யோகாந் விமுச்ய ஸூக ஸேவ்யாம்–உபயாந்தரங்கள் துஷ்கரம் –அப்ராப்யம் -என்று விட்டு –
ப்ரீதி காரித கைங்கர்யம் செய்ய வழியாக
ப்ரயாந்தி நித்யாம் பூதிம் -நித்ய விபூதி அளிக்கும்
புத்தியாசாலியாக இருந்தவர் செல்லும் வழியான பிரபத்தி மூலம் பெறலாமே
கடிகாத்ரி பூப்ம ஆலம்ப்ய–பூ பாலன் இங்கே நித்ய வாஸம் செய்ய -அவனை ஆஸ்ரயித்து –

—————–

கலயந்தி நைவ சந்தஸ் கா புருக்ஷத்வாரி காரணாத் கத நம்
கடிகாதி ஸிகரி முகுந்தம் கமபி நிதம் ஸூலபம் அநவதிம் லப்தவா –31-

கலயந்தி நைவ சந்தஸ் -நல்ல புத்தி சாலிகள் -அவனே உபாயம் உபேயம் என்று அறிந்தவர்கள்
கா புருக்ஷத்வாரி காரணாத் கத நம் -செல்வத்துக்கு கா புருஷன் வாசலில் நிற்காதவர் -விரும்பாவதவர்
கடிகாதி ஸிகரி முகுந்தம் -இவனே முக்தி தருபவன் -மோக்ஷமும் இஹ லோக பலன்களையும் அளிப்பவன்
கமபி நிதம் ஸூலபம் அநவதிம் லப்தவா -ஆராதனைக்கு எளியவன் –
அள்ள அள்ள குறையா வைத்த மா நிதி இவனே –
இவனே நவ நிதி என்று மேல் ஸ்லோகம்

வர வர முனி சதகம் -68-மறந்தும் அஸேவ்ய ஸேவை செய்யேன் –மானிடம் கவி பாட வந்தேன் அல்லேன் –

காரா காரே வரவரமுநே வர்த்தமானஸ் சரீரே |
தாபைரேஷத்ரிபிரபி சிரம் துஸ்தரைஸ் தப்யமாந: ||
இச்சந் போக்தும் ததபி விஷயானேவ லோக: க்ஷுதார்த்தோ |
ஹித்வைவ த்வாம் விலுடதி பஹிர்த்வாரி ப்ருத்வீ பதீநாம் || 68

ஹே வரவரமுநியே! உடல் என்னும் சிறையில் இருந்து கொண்டு தாண்ட முடியாத மூவகையான தாபங்களால்
வெகு காலமாகத் தடுக்கப்பட்டவனாக இருந்தபோதிலும் இந்த ஜனம் விஷயங்களை அநுபவிப்பதிலே ஆசை கொண்டு
பசியால் பீடிக்கப் பட்டவனாக உம்மை விட்டு அரசர்களுடைய வெளி வாயிற்படிகளில் புரளுகிறான்.

————————-

மகரமத கூர்ம ரூபம் வர சங்கம் பத்ம மபி மஹா பத்மம்
குந்தம் அஸிதம் முகுந்தம் கோவா கடிகாத்ரி நவ நிதிம் நப ஜேத் -32–

மகரமத கூர்ம ரூபம் வர சங்கம் -மீன் =மத்ஸ்ய மேல் கூர்மமாகவும் -உயர்ந்த சங்கு ஆக்வானைக் கொண்டவனும்
பத்ம மபி மஹா பத்மம் -தாமரை மலரைக் கொண்டவனும்
திருவையும் திரு மார்பில் கொண்டவனும்
குந்தம் -பாபம் போக்கும் -பரசுராமன்
அஸிதம் -நீல மேக ஸ்யாமளன்
முகுந்தம் -மோக்ஷம் அளிக்கும் -ஸாஷாத் ஸ்ரீ மன் நாராயணன்
கோவா கடிகாத்ரி நவ நிதிம் நப ஜேத் -புதியதாக அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமும்
மஹா பத்ம பத்ம சங்க மகர சத்கப முகுந்த குந்த நீளா கர்வ –நவ நதிகள் புராணங்கள் சொல்லும்
ஒன்றுடன் வேறே நிதியைச் சேர்க்க முடியாது
இந்த தசாவதாரங்களை சேர்த்தாலும் அக்காரக்கனிக்கு ஒப்பு ஆகாதே
இவனே சீரிய நிதி என்றவாறு –

———-

காஞ்சன மயே ஸ்புரந்தம் கஞ்சன கடிகா மஹீ ப்ருத ஸிகரே
கிருஷ்ண மணி மர்க ரஹிதம் கேவா ந விதந்தி க்ருத்ஸ் நதஸ் ஸ்லாக்யம் –33-

காஞ்சன மயே -பொன் வண்ணமாக
ஸ்புரந்தம் -விளங்கும்
கஞ்சன கடிகா மஹீ ப்ருத ஸிகரே -கனக கிரியில் காள மேகம்
கிருஷ்ண மணி மர்க ரஹிதம் -நீல மேக ஸ்யாமள ரத்ன மணி
கேவா ந விதந்தி க்ருத்ஸ் நதஸ் ஸ்லாக்யம் –உயர்ந்த ஒப்பற்ற இந்த செல்வத்தை அறிவாளிகள் யார் தான் அறிய மாட்டார்கள்
கீழ் நவ நிதி -இங்கு ஒப்பார் மிக்கார் இலையாய நீல மணி –

சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் ஆகியனவே நவநிதிகள் ஆகும்.

குபேர சம்பத்துக்களாக அவனருகில் இந்த நவநிதிகளும் திகழ்வதாகச் சொல்கின்றன புராணங்கள்

அரிசி, கோதுமை துவரை, பயறு, கொள்ளு, உளுந்து, எள், காராமணி, கடலை என்பவை நவ தானியங்கள் எனப்படும்.

கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சரயூ, குமாரி, பயோஷ்னி என்பவை நவ நதிகள் எனப்படும்.

சூரியன் சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு கேது என்னும் நவக்கிரகங்களும் முறையே சிவன் உமை முருகன், திருமால், பிரம்மா, குரு, இந்திரன், எமன், பத்திரகாளி சித்திரகுப்தன் ஆகியோரே நவக்கிரகங்களின் நவ சக்தியாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கோமேதகம், நீலம், பவளம், முத்து, புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், வைடூரியும் என்பவை நவ மணிகள் எனப்படும்.

—————-

ஸம் ஸரண ஸரணி பாந்தா தாப த்ரய தரணி கிரண சந்தப்தா
ஆஸ் வாஸிதா கடிகாத்ரவ் ஹரி சந்தந மேத்ய ஸீத லச்சாயம் –34-

ஸம் ஸரண ஸரணி பாந்தா -ஸம்ஸார சாகரம் பாலை வனம் -கொடு வெந்நரகம்
தாப த்ரய தரணி கிரண சந்தப்தா –தாபத்ரயங்களால் -ஆத்யாத்மிகம் -ஆதி பவ்திகம் -ஆதி தெய்விகம் -இவற்றால் நன்றாக தவிக்கும் நமக்கு
ஆஸ் வாஸிதா கடிகாத்ரவ் ஹரி சந்தந மேத்ய ஸீத லச்சாயம் –ஆஸ்வாஸம்-குளிர்ந்த சாயை -இங்கு தானே –
ஹரி சந்தன வ்ருஷம் போல் கடிகாத்ரி அக்காரக்கனி எம்பெருமான்

—————-

முக்தம் நிஜ ஜநப் பத்தம் மூலம் ஜகதாம் பலம் சகடி காத்ரவ்
ஆகலய தாத்புதம் மஹதா கண்டம் மநுஜ மாநநே ஸிம்ஹம்-35-

முக்தம் நிஜ ஜநப் பத்தம் மூலம் ஜகதாம் பலம் –வேர் பழம் முக்தன் பத்தன்
கண்ணி நுண் சிறுதாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
மூலம் காரணமாகவும் -அக்காரக்கனி யாகவும் உள்ளாயே
சகடி காத்ரவ் ஆகலய தாத்புதம் மஹதா கண்டம் மநுஜ மாநநே ஸிம்ஹம் -நர ஸிம்ஹ ரூபம்
அகடி கடநா சமர்த்தன் வழியாகவும் ப்ராப்யமாகவும் உள்ளாயே

——————–

பஸ்யந்தி நயந ஹரிணா ஸ்பஷ்டம் கடிகாத்ரி லுப்த கம் யாவத்
பரி சர சரைஸ்து தாவத் பாதகப்தகை பலாயிதம் க்வாபி –36-

பஸ்யந்தி நயந ஹரிணா -மான்கள் -அடியேன் கண்கள்
ஸ்பஷ்டம் கடிகாத்ரி லுப்த கம் யாவத்-ஸ்பஷ்டமாக கண்டு
பரி சர சரைஸ்து தாவத் பாதகப்தகை பலாயிதம் கவாபி — பாபங்கள் ஆகிய பறவைகள் ஓடியே போயினவே
வேடுவனைப் பார்த்து மான் ஓடாது -பறவைகளோ ஓடுமே –
அதே போல் இங்கு –
ஆனால் இவன் வேடுவன் போல் கொடியவன் அல்லவே என்று அடுத்த ஸ்லோகம்-

————

விமல மணி ஹேம கடகம் விலஸித வந மால யோல்ல சந் மௌலிம்
கடிகாத்ரி ஸூஹ்ருத மீடே காஞ்சந பீதாம் ஸூகா வ்ருதம் ப்ராம் ஸூகம் –37-

விமல மணி ஹேம கடகம் -நிர்மல -தூ மணி பொன் வளையல்கள் அணிந்து
விலஸித வந மால
யோல்ல சந் மௌலிம் -ஜ்வலிக்கும் திரு அபிஷேகம்
காஞ்சந பீதாம் ஸூக ஆவ்ருதம் ப்ராம் ஸூகம் –முடிச் சோதி -கடிச் சோதி -அடிச் சோதி -பரஞ்சோதி மயம்
பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம் -கண்டவர் தம் மனம் வழங்கும் பெருமாள்
கடிகாத்ரி ஸூஹ்ருத மீடே -ஸூஹ்ருத தேவரை சரணம் அடைந்து ஸ்தோத்ரம் பண்ணுவோம்-

—————–

ஸத்பி பரிகதம மலை ஸம் ஸ்ரித ஸர்வம் ஸஹம் ஹிரண்ய க்ருதம்
கடிகாத்ர் யுபரி ஸூ மேரும் கலயே ஸத் வோத்தரம் ஸூ ரைஸ் ஸேவ்யம் –38-

ஸத்பி பரிகதம் அமலை –சாத்விகர் களால் சூழப்பட்ட
ஸம் ஸ்ரித ஸர்வம் ஸஹம் -பூமியை அடைந்து -நன்றாக ஆஸ்ரயம் அடைந்தவர்கள் அகம் பொறுத்து
ஹிரண்ய க்ருதம் -பொன் மயமான -ஹிரண்ய அசுரனைக் பாக்கியவான்
கடிகாத்ர் யுபரி -கடிகாத்ரி மலைக்கு மேல் உள்ள அக்காரக்கனியை –
ஸூ மேரும் கலயே -காண்கின்றேன்
ஸத் வோத்தரம் -ஸாத்விக குணம் மிக்கு
ஸூ ரைஸ் ஸேவ்யம் –தேவர்கள் இருப்பிடம் -ஸாத்விக குணம் உள்ள மலை –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
அடுத்த ஸ்லோகத்தில் திருப் பாற் கடலுடன் ஸாம்யம் அருளிச் செய்கிறார் –

———–

ஸ ரஸம் ஸம் ப்லுத வேலம் சந்த்ருத மணி ராஜ சரசிஜா சங்கம்
கம்பீரம் அமிதம் அமலம் காஹே கடிகாசலேஸ கலஸாப்திம் –39-

ஸ ரஸம் ஸம் ப்லுத வேலம் -பாற் கடல் -ரஸம் மிக்கு -கரை இருக்குமே
ஆனந்த ப்ரஹ்மம் -ஸம்ஸாரிகளுக்கும் ஆஸ்ரயிக்கும் படி
சந்த்ருத மணி ராஜ சரசிஜா சங்கம் -கௌஸ்துப -ஸிந்து கன்யா சங்கங்கள் தரித்து
கௌஸ்துப மணியையும் திருவையும் மார்பில் கொண்டவன் சங்கு ஆழ்வான் அனைத்தையும் தரித்து
கம்பீரம் -தேஜஸ் மிக்கு
அமிதம் -எல்லை அற்ற -கல்யாண குண ஏக ஸ்தானம்
அமலம் -நிர்மலம்
காஹே கடிகாசலேஸ கலஸாப்திம் –குடைந்து நீராடும் படி அக்காரக்கனி பாற் கடல் போல் உள்ளானே –

————-

விகத தமோ க்ரஹம் அசலம் வ்ருத்தி க்ஷய ரஹிதம் அநு தயாஸ்த மயம்
விலஸித மாநஸ கமலம் வீஷே கடிகாத்ரி விதும் அஹோ விமலம் -40-

விகத தமோ க்ரஹம் -தமோ குணங்கள் கிட்டாவே
அசலம் -ஸ்திரமாக
வ்ருத்தி க்ஷய ரஹிதம் -வளருதல் தேய்தல் இல்லையே
அநு தயாஸ்த மயம்-பிறப்பு மறைவு இல்லையே
விலஸித மாநஸ கமலம் வீஷே -ஹ்ருதய கமலத்தை விகஸிக்கும்
கடிகாத்ரி விதும் -அக்காரக்கனி சந்திரன் களங்கம் தீர்க்கும் -துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன்
அஹோ விமலம் –

————

நிரவதிக நித்ய மஹஸா நிர்மல முக்த அநு பந்த ஸூப கேந
கடிகாத்ரி மகுட பாஜா மணிநா மம மநஸி வாரிதம் திமிரம்–41-

நிரவதிக நித்ய மஹஸா -எல்லை அற்ற மஹத்வ தேஜஸ் -நித்ய ஸூரிகள் ஸமூஹம்
நிர்மல முக்த அநு பந்த ஸூப கேந -அழகிய முத்துக்கள் -முக்தாத்மாக்கள் சேர்ந்து
கடிகாத்ரி மகுட பாஜா மணிநா -அக்காரக்கனி யான ரத்ன தேஜஸ் ஸூ
மம மநஸி வாரிதம் திமிரம் -அஞ்ஞானம் போக்கி அருளட்டும் -சாஷாத்காரம் பெற்று அனுபவிக்கிறார்
அடுத்த ஸ்லோகம் மரகத அனுபவம் –

————–

அவி ரல விஸ்ரு மர க்ருணிநா ஹரி மணிநா சதத மாஹித ஒவ்ஜ்வல்ய
கநக நக கல்பிதோயம் கடகோ கடிகா மஹீ ப்ருதோ பாதி –42-

அவி ரல விஸ்ரு மர க்ருணிநா -இடைவிடாத ஒளி பரவி
ஹரி மணிநா -மரகத ரத்னம் –
நெருக்கமான ஒளி
சதத மாஹித ஒவ்ஜ்வல்ய –எப்பொழுதும் தேஜஸ் மின்னி
கிருபை கடாக்ஷம் வர்ஷம் பொழிந்து கொண்டே உள்ளான்
கநக நக கல்பிதோயம் கடகோ -தங்க -மயமான கட்டிப் பொன்னால் செய்த வளையல்
தாழ்வரை எங்கும் பரவி மின்னிக்கொண்டு உள்ளதே
கடிகா மஹீ ப்ருதோ பாதி –எம்பருமானது -அக்காரக்கனி யுடைய திருக் கரங்களில் சாத்தி அருளுகிறார்

————–

ஸூ மநோ வ்ருதேந மதுநா ஸூதராம் மதுரேண ஸூத்தி குண பாஜா
மம கடிகாசல ஜநுஷா மாநஸ நாமா ஸமுத் ஸூகோ ப்ருங்க –43-

ஸூ மநோ வ்ருதேந மதுநா –சாத்விகர்களுக்கு- -உபாய உபேயம் இவனே அறிந்தவர்களுக்கு தேன்
ஸூதராம் மதுரேண ஸூத்தி குண பாஜா -மிகவும் இனிமையான -ஸூத்தமான -ஸாத்விக குணம்
கடிகாசல ஜநுஷா -இங்கு தான் உத்பத்தி ஆகிறது
மம மாநஸ நாமா ஸமுத் ஸூகோ ப்ருங்க –மனசாகிய வண்டு மிகவும் அபி நிவேசம் மிக்கு உள்ளதே
நம்மாழ்வார் தீர்க்க சிந்தயந்தி –
எறும்பி அப்பா ஸ்வாமியோ பரம தீர்க்க சிந்தயந்தி -மா முனிகள் விஸ்லேஷத்தில் தரியாமல்
திருவடித் தாமரையில் படியும் ப்ருங்கம் இவர் தானே-

தீனே பூர்ணாம் பவதநுசரே தேஹி த்ருஷ்டிம் தயார்த்ராம் |
பக்த்யுத்கர்ஷம் வரவரமுநே தாத்ருசம் பாவயந்தீம் ||
யேந ஸ்ரீமந் த்ருத மஹமித: ப்ராப்ய யுஷ்மத் பதாப்ஜம் |
த்வத் விஶ்லேஷே தநு விரஹித: தத்ர லீனோ பவேயம் ||–ஸ்ரீ வர வர முனி சதகம் – 75

ஹே வரவரமுநியே உமது கருணை தோய்ந்த கடாக்ஷத்தைப் பூர்ணமாக எளியவனான
உமது பணியாளனான அடியேனிடத்தில் வைப்பீராக. அந்தக் கடாக்ஷமே உம்மிடத்தில் மேலான பக்தியைத் தரவல்லது.
அந்தக் கடாக்ஷத்தாலேயே இங்கிருந்து உமது திருவடித் தாமரையை அடைந்து
உமது பிரிவு ஏற்படும்போது சரீரமற்றவனாக அங்கேயே மறைந்தவனாவேன்.

—————

அணு தரம் அபி ஸ்வம் அந்யாந் அர்ப்பயத சததம் ஆப்து காமேந
கடிகாசல பிரணயிநா விபுலம் விஹிதம் ஹிரண்ய தாநம் அஹோ–44-

அணு தரம் அபி ஸ்வம் அந்யாந் அர்ப்பயத -கிஞ்சித் சமர்ப்பித்தாலும் -பத்ரம் பலம் தோயம்
சததம் ஆப்து காமேந -எப்போதும் எதிர்பார்த்து இருக்கும்
அவாப்த ஸமஸ்த காமனும் நமது ஆபி முக்யம் எதிர்பார்த்து இருப்பானே
கடிகாசல பிரணயிநா -ஆசையுடன் உகந்து
விபுலம் விஹிதம் ஹிரண்ய தாநம் அஹோ –ஸ்வர்ண தானம் -ஸ்லேடை -ஹிரண்யனைப் பிளந்த –
நமது அஹங்காராதிகளைப் போக்கித் தன் தாளிணைக் கீழ் -இசைவித்து -இருத்தும் அம்மான் அன்றோ –

————–

அநநு குண விஷய தீஷாம் அநிதம் ப்ரதமா ஸரஸ்வதீ முக்த்வா
கடிகாசல ப்ரணயிநா கடயதி த்ருஷ்டிம் கந அநுராக மயம் –45-

அநநு குண விஷய தீஷாம் – -யாதானும் பற்றி நீங்கி விரதம் –
அநிதம் ப்ரதமா ஸரஸ்வதீ முக்த்வா -வேத புருஷன் வேத மாதா -திரு உள்ளத்தில் வந்ததும் அநாதி
ஸரஸ்வதி -வேத வாக்கு என்றபடி -முக்த்வா விடுதலை தருகிறாள்
கடிகாசல ப்ரணயிநா -இங்கு உகந்து இருந்து அருளும் அக்காரக்கனியின் மேல்
கடயதி த்ருஷ்டிம் கந அநுராக மயம் –நிறைந்த அபி நிவேசம் -பக்தியை யுண்டாக்க்கும் அன்றோ –

———–

த்ருஸ்யேந தைவ யோகாத் த்ருப்யன் மனஸா ஜராத்யதீ தேந
ஸாதயதி ஸித்திம் அகிலாம் ஸங்கோ கடிகாத்ரி யோகி புருஷேண –46-

த்ருஸ்யேந தைவ யோகாத் த்ருப்யன் மனஸா ஜராத்யதீ தேந -ஜரா கொடியது -கிளர் ஒளி கிளமை கெடுவதன் முன்னம்
இவற்றை அதீதேந -கடந்து -மகிழ்ந்த திரு உள்ளத்துடன் இருக்க
அவன் தர்சனம் பெறுவதற்கும் திரு உள்ளத்தில் ஸங்கல்பிக்க வேண்டுமே
ஸாதயதி ஸித்திம் அகிலாம் ஸங்கோ கடிகாத்ரி யோகி புருஷேண –அவன் உடன் ஸம்ஸ்லேஷித்து
யோக நரஸிம்ஹன் அன்றோ –
ஸகல பல பிரதன் -அந்தமில் பேர் இன்பம் பர்யந்தம் அருளுவான் அன்றோ

———-

பிரபலைர் மம இந்த்ரியாஸ் வை பரிக்ருஷ்டா விஷம விஷய காந்தாரே
பதவீம் மநோ ரத அக்ரயாம் ப்ராப்தோ கடிகாத்ரி பார்த சாரதி நா –47-

பிரபலைர் மம இந்த்ரிய அஸ்வை -நமது பிரபல இந்த்ரியங்களே குதிரை
பரிக்ருஷ்டா விஷம விஷய காந்தாரே -விஷயாந்தரங்களை நோக்கி -காட்டு வழி -நன்று இழுத்துச் செல்ல
பதவீம் மநோ ரத அக்ரயாம் ப்ராப்தோ -அவற்றை அடக்கி தனது பக்கம் இழுத்துச் செல்லும்
அக்ர -உயர்ந்த நிலைக்குக் கூட்டிச் செல்கிறார் -என்றபடி
கடிகாத்ரி பார்த சாரதி நா –அக்காரக்கனியே பார்த்த சாரதி –
நக்ஷத்ர மாலிகை முதல் ஸ்லோகம் -ஞான முத்திரை காட்டி அடக்கி ஆளும் -ஆழ்வார் ஜீயாத் –

————

அதி வேல விலஸிதோர் மே அவகாஹவதாம் அதோ நயந ஹேதோ
ப்ராப்தோ அஸ்மி பவ பயோ தே பாரம் கடிகா நியாமகே நாஹம் –48-

அதி வேல விலஸிதோர் மே -அளவு கடந்த -கடலின் அலைகள் -ஸம்ஸார சாகர அலைகள்
அவகாஹவதாம் அதோ நயந ஹேதோ -மூழ்கினவர்களை
ப்ராப்தோ அஸ்மி பவ பயோ தே பாரம் -அக்கரைப்படுத்தி அடைய வைத்து அருளும்
கடிகா நியாமகே நாஹம் –கடத்தடம் குன்றின் அரசன் என்னும் படகோட்டி -நாவாய் முகுந்தன் அன்றோ -இவனும் –

கடிகா யதி குண கடிதா கடிகா சல சக்ரி கல்பிதா நஸ்யு
பவ கூபதோ ஜடா நாம் பவ்ய கோவா ஸமுத்தரண ஹேது -49-

கடிகா யதி குண கடிதா நஸ்யு-கருணாதி குணங்களால் சில நாழிகை காட்டா விடில்
கடிகா சல சக்ரி கல்பிதா -சக்ரம் ஏந்திய அக்காரக்கனி என்றும் குயவன் என்றும்
பவ கூபதோ ஜடா நாம் பவ்ய -அறிவிலிகள் ஸம்ஸார பவக்கடலில் இருந்து
கடா நாம் -என்று கொண்டு குடாதிகள் கொண்டு கிணறு முதலியவற்றில் எடுக்க முடியாதே
கோவா ஸமுத்தரண ஹேது -உஜ்ஜீவனம் ஹேது ஒன்றுமே இல்லையே

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த வன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை யுய்ப்பதா —ஆர்த்தி பிரபந்தம் -9-

———

கலயந்தி யே ஸ்வாத் யாத்ராம் கடிகாசல வைதய கல்பிதேந பதா
பவ ரோகதோ அசிராத் தே முக்தா ஸ்நாநம் சாந்தி விரஜாயாம் -50-

கலயந்தி யே ஸ்வாத் யாத்ராம் கடிகாசல வைதய கல்பிதேந பதா -தேக யாத்ரையை இவன் வழி நடத்தி
உபதேசங்கள் பலவும் அருளிச் செய்தானே
பவ ரோகதோ அசிராத் தே முக்தா -சம்சார ரோகம் அதி சீக்கிரமாகத் தீர பெற்று
ஸ்நாநம் சாந்தி விரஜாயாம் -குள்ளக் குளிர்ந்து விரஜையிலே நீராடலாம்
அமானவன் கர ஸ்பர்சம் கிட்டும்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
கீழே 22 ஸ்லோகம் நரஸிம்ஹ சரம ஸ்லோகம் பார்த்தோம்
மஹா விஸ்வாசமே வேண்டும்
வடிவாய மா மகளும் நில மகளும் நடுவாக வீற்று இருந்த அவனைக் கிட்டி
அனுபவித்து -அனுபவ ஜனித கைங்கர்யமும் செய்யப்பெற்று நித்யர்கள் உடன் ஒரு கோவையாகப் பெறுவோமே –

———–

தததோ ஜகத் யுதாரான் ஸ்வ அபேக்ஷிதம் அர்த்தம் அர்த்திந ப்ரா ஹு
ஆ தத்த புநர் அர்த்தான் உக்தா கடிகாசல அர்த்திந உதாரா –51-

தததோ ஜகத் யுதாரான் -கொடுப்பவர்களை உலகம் உதாரர் என்பர் -கர்ணன் பெற்ற பெயர்
ஸ்வ அபேக்ஷிதம் அர்த்தம் அர்த்திந ப்ராஹு -கேட்டதைக் கொடுப்பவர் களுக்கு முன்பு இவ்வாறு உலக வழக்கு
ஆதத்த புநர் அர்த்தான் உக்தா கடிகாசல அர்த்திந உதாரா –இங்கு அக்காரக்கனியே யாசகன்
தன்னைக் கொடையாளியாக்கும் அனைவருமே உதாரர்
உதார -ஸர்வ கீதையில் அனைவரையும் -கொடையாளி யாக்கியவர்கள் –
அனைத்தையும் அருளி இன்னும் ஒன்றுமே செய்யாதவனாகவே ருணம் ப்ரவர்த்தம் என்று சென்றவன் அன்றோ
அந்தமில் பேர் இன்பம் கேட்டு இருப்பார்களே மம ஆத்மா என்பான் -அன்றோ –

————

தாதே ஹிதாதி கார்த்தான் ஸ்வ வ்யதிரிக்தான் ததாதி நாத்மாநம்
ஸ்வோ அபி ஸ்வ ஸம்ஸ்ரி தேப்யோ தத்தோ கடிகாத்ரி ந்ரு ஹரிணா தாத்ரா –52-

தாதே ஹிதாதி கார்த்தான் -தாதா -கொடையாளி கேட்டதைக் கொடுப்பான்
ஸ்வ வ்யதிரிக்தான் ததாதி நாத்மாநம் –என்னையும் ஆக்கி தன்னையும் தரும் கற்பகம் அன்றோ
ஸ்வோ அபி ஸ்வ ஸம்ஸ்ரி தேப்யோ தத்தோ கடிகாத்ரி ந்ரு ஹரிணா தாத்ரா –நன்றாக ஆஸ்ரயிப்பவர்களுக்கு
தன்னையே தனது பேறாகக் கொடுக்குமவன் அன்றோ

—————-

ஹிம்ஸி த தாநவ கரிணே ஹ்ருதய குஹா விஹித பஹுவிஹாராய
விக்ரமவதே ஸபர்யாம் விததே கடிகாத்ரி வீர ஸிம்ஹாய –53-

ஹிம்ஸித தாநவ கரிணே -ஹிரண்ய கசிபு யாகிய யானையை நிரஸித்து
ஹ்ருதய குஹா விஹித -ஹ்ருதய விசால குஹையில் மன்னி
பஹுவிஹாராய -நிறைய அனுபவம் கொடுத்துக் கொண்டு அருளி
விக்ரமவதே -வீர தீர பராக்ரமங்கையும் காட்டி அருளி பரிவர் இல்லை என்ற அதிசங்கை போக்கி அருளி
ஸபர்யாம் விததே கடிகாத்ரி வீர ஸிம்ஹாய –இந்த அக்காரக் கனிக்கு அனைத்து வித கைங்கர்யங்களும் செய்யப் பெறுவேனாக வேண்டும்

—————

ஸ்ருதி பாரகாய வித்யா ஸூதி க்ருஹாய ஸ்வ தர்ம நிரதாய
ஸ்வம் ஸ்வ உசிதம் ப்ரதாஸ்யே ஸூதீயே கடிகாத்ரி பூமி தேவாய –54-

மஹநீய வ்ருத்த வர்ணா மஹிதான்வய வத்ஸ லங்க்ருதா க்ருதிநா
ஸூக்தி ஸூத அநு ப்ரதேயா ஸூத்தா கடிகாத்ரி பூ ஸூர வராய –55-

ஸ்ருதி பாரகாய –வேதம் வெளியிட்டு அருளி -கரை காண அரிதான வேதக்கடலை அன்னமாய் அங்கு அரு மறை பயந்து அருளி
வித்யா ஸூதி க்ருஹாய -ஸாஸ்த்ர ஞானம் -ப்ரஹ்ம வித்யைகளை அருளிச் செய்து
ஸ்வ தர்ம நிரதாய –சரணாகத வத்ஸலன் -ஆஸ்ரித பரதந்த்ரன் -பக்த உசிதன் -ரக்ஷணத்தில் நிலை நின்று
ஸ்வம் ஸ்வ உசிதம் ப்ரதாஸ்யே ஸூதீயே -தீ -ஞானம் –
கடிகாத்ரி பூமி தேவாய –ப்ரஹ்மணோத்தமனாக -ஸகல மனுஷ நயன விஷய தாங்கனாக
அவனுக்கு கைங்கர்யம் -இந்த ஸ்ரீ ஸூ கத்தியை கன்னிகா தானமாக அருளி
மஹநீய வ்ருத்த வர்ணா -உயர்ந்த சந்தஸ் ஸூக்களைக் கொண்ட -பூஜிக்கப்பட்ட நல்ல நடத்தை யுடைய கன்னிகை போல்
மஹிதான்வய வத்ஸ லங்க்ருதா க்ருதிநா –உயர்ந்த அந்வயங்கள் -ஸப்த அலங்காரங்களைக் கொண்டும்
உயர்ந்த ஆபி ஜாதியம் -அலங்காரம்
ஸூக்தி ஸூத அநு ப்ரதேயா ஸூத்தா -பரிசுத்தம் -தீர்த்தம் -கன்னிகையை
கடிகாத்ரி பூ ஸூர வராய -இந்த அக்காரக்கனி அழகிய மணவாளனுக்கு தகுதியாக
வேதியர் கோன் -விளக்கு – தனது குழந்தையான பா மாலையை சூட்டி -பெரியாழ்வார் போல் மாமனார் ஆகிறார் எறும்பி அப்பா ஸ்வாமியும்

———-

காம்யோ ததாதி ஸார்த்தம் தவல மதி ப்ரேம தாரயா ஸஹிதம்
கடிகாசல பிரணயிநே கடிதே கிம் தஸ்ய காங்ஷிதம் ந பலம் –56-

காம்யோ ததாதி ஸார்த்தம் -பொன் கட்டிய பசு தானம் பண்ணுகிறார் இதில்
அர்த்தங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூ க்திகள் என்றுமாம்
தவல மதி ப்ரேம தாரயா ஸஹிதம் -ஸூத்தமான -வெண்மை -பிரேமை மிக்கு -நீராய் அலைந்து கரைந்து உருகும் திரு உள்ளம்
அனுபவ ஜெனித ப்ரீதி உள் அடங்காமல் வெளிவந்தவை அன்றோ
கடிகாசல பிரணயிநே -உகந்து அருளி நித்ய வாஸம் செய்து அருளும் அக்காரக்கனி எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க
கடிதே கிம் தஸ்ய காங்ஷிதம் ந பலம் –கோ தானம் -வாக்கு -தானம் செய்த பின்பு
அபீஷ்டங்கள் அனைத்துமே அருளுவான் அன்றோ
இந்த ஸ்துதியை நாவினால் நவிலவே நமக்கும் அருளிச் செய்வான் அன்றோ –

————

கலு ஷாதி கடித வாக்யை ஷாலித வைமுக்ய கல் மஷாதிஷ ணா
ப்ருது குண வதீ மதீயா ஸ் ப்ருஹயதி கடிகாசல ப்ரியாய ப்ருசம் –57-

கலு ஷாதி கடித வாக்யை ஷாலித -அஹங்கார மமகாரா தூஷித
வைமுக்ய கல் மஷாதிஷ ணா -பாராமுகமாக அடியேன் திரு உள்ளம்
ப்ருது குண வதீ மதீயா ஸ் ப்ருஹயதி -அவன் மேலே இழுத்துக் கொண்டு
கடிகாசல ப்ரியாய ப்ருசம் -அக்காரக்கனி உகந்து அருளின திவ்ய தேச மஹாத்ம்யத்தாலேயே
நாம் அனுசந்திக்க தாம் நைச்ய அனுசந்தானம் செய்து அருளுகிறார் –

—————

அந் விஷ்யதாம் ஸ்வம் அதவா தூஷ்ணீ மாத்வம் ஸூரர்ஷி பித்ரு முக்யா
தத் கிங்கரோ அர்ப்பிதோ அஹம் தஜ்ஜஜை கடிகாத்ரி பூபுஜே ச சிவை –58-

உங்கள் சொத்து தொலைந்து போனதே என்கிறார்
ஸூரர்ஷி பித்ரு முக்யா -ஸூரர் ரிஷிகள் பித்ருக்கள் முதலியவர்
அந் விஷ்யதாம் ஸ்வம் -உங்கள் சொத்து தொலைந்து போனதே என்கிறார்
அதவா தூஷ்ணீ மாத்வம் -வெறுமனே உட்க்கார்ந்து இருங்கள்
கடிகாத்ரி பூபுஜே ச சிவை –அக்காரக்கனி -கடிகாத்ரி அரசன் பற்றிய பூர்ண ஞானம் கொண்ட மந்திரிகள் -மாச முனிகளை ஆஸ்ரயித்த பின்பு
தத் கிங்கரோ அர்ப்பிதோ அஹம் தஜ்ஜஜை -கைங்கர்ய பரனாக அடியேன் சமர்ப்பிக்கப் பட்டேன்
ஆச்சார்யர்கள் நம்மை விற்கவும் பெறுவார்கள் அன்றோ

சூடகம் -கங்கணம் -தோள் வளை சங்கு சக்கர லாஞ்சனை தோடே செவிப்பூவே -மந்த்ர உபதேசம் -பாடகம் கால் கட்டு -பஞ்ச ஸம்ஸ்காரம்
சாஷாத் பல ஏக லஷ்யம் -மங்களா ஸாஸனம் -ஆஸாசித்தல் –

———-

ந்ருத்யந்த்ய நர்த்த கம்யே கோப்த்ரே கடிகா மஹீ ப்ருதோ ஹரயே
மன்யே மந்த தீ யஸ்தான் மாதங்கா நேவ மத ஜூஷ் கலுஷான் –59-

ந்ருத்யந்த்ய நர்த்த கம்யே -அநர்த்த நாட்டியம் -ஈஸ்வரோஹம் -அகங்கார மமக தூஷித்தராய் ஆட –
கோப்த்ரே கடிகா மஹீ ப்ருதோ ஹரயே -அக்காரக்கனி அரசே
மன்யே மந்த தீ யஸ்தான் -அஞ்ஞானம் தலை எடுத்து
மாதங்கா நேவ மத ஜூஷ் கலுஷான் –கலங்கிய அறிவால் மதம் பிடித்த யானை போல் –
காட்டில் ஸிம்ஹ அரசன் முன் ஆடும் யானை மாள்வது போல் அன்றோ இவர்கள் –

———

துஷ்டான் நிக்ருஹ்ய தரஸா ஸிஷ்டாந் அகிலாம் ஸ் சிரேண பாலயதே
ஸ்வஸ்தி ஸூஹ்ருதே குணாநாம் பூத்யை கடிகாத்ரி பூ பஜே பூயாத் –60-

துஷ்டான் நிக்ருஹ்ய தரஸா -அனிஷ்டங்களைப் போக்கி அருளி -தரஸா-விரைவில்
ஸிஷ்டாந் அகிலாம் ஸ் சிரேண பாலயதே-
ஸமஸ்த இஷ்ட ஸூஹ்ருதே குணாநாம் பூத்யை -நல்ல குணங்கள் அனைத்துக்கும் இருப்பிடம்
ப்ரதானங்களையும் எப்பொழுதும் அருளி
ஸ்வஸ்தி கடிகாத்ரி பூ பஜே பூயாத் –அக்காரக்கனி தெய்வத்துக்கு அரசுக்கு பல்லாண்டு பாடுவோம்

————

ம்ருதுலம் பவாக்நி பாகாத் வ்யாப்தம் குணதோ வி ஸூத்தம் அஹம் அன்னம்
போஜ்யம் ஸமர்ப்பயே ஸ்வம் போக்த்ரே கடிகாசலஸ்ய ஸஸ் நேஹம் –61-

மருதலம் -வெந்து குழைந்து -நீராய் அலைந்து கரைந்து உருக்குகின்ற
பவாக்நி பாகாத் -அக்னியால் பக்குவப்பட்டு -சம்சார பாவாக்னி
வ்யாப்தம் குணதோ -ருசி மிக்கு சமதமாதி குணங்கள் நிறைந்து
வி ஸூத்தம் -பரி ஸூத்தம் -நெய் சமஸ்க்ருதம் அன்ன ஸூத்தி நிறைந்து
அஹம் அன்னம் போஜ்யம் ஸமர்ப்பயே ஸ்வம் -அடியேனை சமர்ப்பிக்கிறேன் -சொத்து தானே
போக்த்ரே கடிகாசலஸ்ய ஸஸ் நேஹம் –இஷ்டமாக அனுபவித்து -ஸ்வாமி சொத்தை -நெய் -மிகுந்த பக்தி -நிறைந்த அன்னம் -அடியேன்
பல்லாண்டு கீழே அருளி –அம்மம் உண்ண இதில் -பெரியாழ்வார் போல் இவரும் இதில்

————–

நித்ய ஸ்ரீ யே குணா நாம் நிதயே நிஷ்ட யூத நிகில தோஷாய
ப்ரஞ்ஞா அர்ப்பிதா மயைஷா பர்த்ரே கடிகாசலஸ்ய பாக்ய வஸாத் –62-

நித்ய ஸ்ரீ யே –கூடவே பிரியாமல் -ஸ்ரீ யபதி புருஷார்த்தம் இருப்பதால் பயப்படவே வேண்டாமே
காகாசுரன் இவள் சந்நிதியால் உஜ்ஜீவித்தான் -ராவணன் இவள் அஸந்நிதியால் மாண்டான்
குணா நாம் நிதயே-அதுக்கும் மேல் குணக்கடலாகவும்
என்னடியார் அது செய்யார் என்பவனும் ந கச்சின் ந அபராதயதி என்பாளும் உண்டே
நிஷ்ட யூத நிகில தோஷாய-காரி உமிழும் படி தோஷங்கள் அனைத்துக்கும் இருப்பிடமான நம் போல்வாரும்
ப்ரஞ்ஞா அர்ப்பிதா மயைஷா பர்த்ரே -ப்ரஞ்ஞா -தத்வம் ஹிதம் புருஷார்த்தங்கள்
இவற்றை உணர்ந்து -ஸமர்ப்பிக்கப் பட்டாள்
கடிகாசலஸ்ய பாக்ய வஸாத் –அதிர்ஷ்ட வசமாக பெட்ரா மணவாளன் அக்காரக்கனி அன்றோ -திரிபுவன -உபய விபூதி நாயகன் அன்றோ
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -பிரதம மத்யம சரம பர்வதங்கள் -பெருமாள் -ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர் -ஆச்சார்யர் –
கன்னிகையாக உருவகம் –
தாயார் கூடவே இருப்பதால் பெற்ற பலன் அன்றோ –

—————

பாத்ரே ஸமாஸ்ரிதாநாம் சாத்ரே ஸத் புருஷ வித் விஷாம் ஸததம்
தாத்ரே ஸகல பலா நாம் நேத்ரே ஜகதாம் நமோ ந்ருஸிம்ஹாய –63-

பாத்ரே ஸமாஸ்ரிதாநாம் -ஆஸ்ரிதர் அனைவரையும் கை விடாமல் காத்து அருளி
சாத்ரே ஸத் புருஷ வித்விஷாம் ஸததம் –ஸத் புருஷர் -ஸாத்விகர் -ஆக்கி அருளி -தமோ ரஜோ குணம் தலை தூக்க விடாமல் பண்ணி அருளி
தாத்ரே ஸகல பலா நாம் -ஸமஸ்த அபீஷ்டங்களையும் அருளி
நேத்ரே ஜகதாம் –அனைவருக்கும் கண்ணாவான் -நாயகன் ஆவான் –
நமோ ந்ருஸிம்ஹாய-அடியேன் உம்மை நமஸ்கரிக்கிறேன்
மந்த்ர ராஜ -திருமந்திரம் -திரு அஷ்டாக்ஷரம் -அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம் அவனே தத்வம் -அவனே உபாயம் -அவனே உபேயம்
தத்வம் ஹிதம் புருஷார்த்தம்
பர கத ஸ்வீ கார நிஷ்டர் -இசைவித்து தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்
பொருள் அல்லாத அடியேனை பொருளாக்கி அடிமை கொள்வான்
ஓம் நம -ஸ்வரூப விரோதி அஹங்கார மமகாரங்களைப் போக்கி அருளி
நமோ நம -உபாய விரோதி கழித்து அருளி
நாராயணாயா நம -ப்ராப்ய விரோதி கழித்து அருளி
நரஸிம்ஹ -நாராயணா போல் சதுர் அக்ஷரீ தானே –

———–

ஸூ மனஸ் ஸமூஹ பவ்யாத் ஸூக முக ஸேவ்யாத் ஸூ ஸீதலச் சாயாத் –
கடிகாத்ரி தட நிரூடாத் கல்பகத கஸ்யா காங்ஷிதம் ந பலம்–64

ஸூ மனஸ் ஸமூஹ பவ்யாத் -வ்ருக்ஷத்தில் புஷ்ப ஸமூஹம் இருக்குமே-தேவதா ஸமூஹங்களுக்கு
ஸூக முக ஸேவ்யாத் -கிளி போன்றவை தங்கும் இடம்-ஸூக பிரமுகர்கள் பலரால் ஸேவிக்கப் பட்டவர்
ஸூ ஸீதலச் சாயாத் -குளிர்ந்த நிழல் பரவி இருக்குமே00சம்சார தாப த்ரயங்களைப் போக்கி அருளி
கடிகாத்ரி தட நிரூடாத் கல்பகத -தாழ்வரையில் -கற்பக வ்ருக்ஷம்
கஸ்யா காங்ஷிதம் ந பலம் -யாருக்குத் தான் ஆசைப்பட்டவை கிடைக்காமல் போகும்
வியதிரேகத்தில் என்ன பலம் தான் கிட்டாது என்று இதில் திடமாக புத்திக்கு உபதேசம் –
எனக்கே தந்தைத் தந்த கல்பகம் அன்றோ அக்காரக்கனி எம்பெருமான்

————–

அவிரத ஹித ப்ரவ்ருத்தே ஆபதி ஸஹிதாத் அக்ருத்ரிம ஸ்நேஹாத்
மம கடிகாசல பந்தோ மான்யா தன்யேந கேந கிம் கார்யம் –65-

அவிரத ஹித ப்ரவ்ருத்தே -நன்மையே செய்யும்
ஆபதி ஸஹிதாத் -ஆபத்துக்களில் துணையாக
அக்ருத்ரிம ஸ்நேஹாத் -இயற்கையாகவே நண்பன்
ஸக்யம் நவ வித பகுதிகளில் ஸ்நேஹ பாவமும் உண்டே
மம கடிகாசல பந்தோ -உற்ற நண்பனே விளிச் சொல்
மான்யாத் –மதிக்க வேண்டுமே
அன்யேந கேந கிம் கார்யம்–இவரை விட வேறே யாரால் என்ன வேண்டும்

—————

கந கருண அம்ருத பூரை கடிகாசல கிருஷ்ண மேகதோ ஜநி தை
பாப அடாவீ ப்ரதக்தா பஜதே சித்ரம் பவ அம்புதி ஸோஷம் –66-

கந கருண அம்ருத பூரை –அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –
அம்ருத ப்ரவாஹம் பொழிந்து
கடிகாசல கிருஷ்ண மேகதோ ஜநிதை -இன்னும் கார் வண்ணனே
பாப அடாவீ ப்ரதக்தா -காட்டுத்தீயையும் அணைக்க வல்ல மேகம் அன்றோ
பவ அம்புதி ஸோஷம் –சம்சாரக்கடலை வற்ற வைக்கும் மேகம் அன்றோ
சித்ரம் பஜதே -என்ன ஆச்சர்யம் -ஆஸ்ரயிக்க வேண்டாவோ

————

கோபி பிரகாசி தார்த்தாத் கோத்ரே கடிகாபிதா நவத் யுதிதாத்
ஜாகர்தி சதத நித்ரம் ஸ விது ஜகதாம் மனஸ் ஸரோஜம் மே –67-

கோபி பிரகாசி தார்த்தாத் -தனது கிரணங்களால் பொருள்களை விளக்கும் ஆதித்யன்
கருணை ப்ரவாஹ -ஸ்ரீ ஸூ க்திகளால் -சரம ஸ்லோஹாதிகள் -இவற்றால் ஸாஸ்த்ர சாரங்களை அருளிச் செய்து விளக்கி
கோத்ரே கடிகாபிதா நவத் யுதிதாத் -மலையிலே -உதித்து –
கீழே 13 ஸ்லோகம் கபி சூர்யன் உதித்து அக்காரக்கனியை ஸேவித்து பார்த்தோம்
எம்பெருமான் தானே உகந்து அருளி நித்யவாஸம் செய்து அருளி
ஜாகர்தி சதத நித்ரம் ஸ விது ஜகதாம் -உறக்கத்தில் இருந்து எழுப்பி
ஆதித்ய உதயம் முன்பே எழும் சாத்விகர் -காணாமல் கண்டு கொண்டு திரிகால சந்த்யா வந்தனம்
அஞ்ஞானம் அந்தகாரம் -உழன்று இருக்கும் சம்சாரிகள் விடுபட்டு ஞான மலர்த்தியை
மனஸ் ஸரோஜம் மே -மானஸ தாமரையை அலர்த்தும் அக்காரக்கனியே
தானே புகுந்து அகற்றி-விகஸித்து அருளுகிறார் -என்று ஸ்லாகிக்கிறார்

————

ருஷ்டேந யேந ருத்ரோ ருக்ணோ தரணீம் ஜகாம சரபோ அபி
கந துரித தந்திநோ அஸ்மாத் கடிகாத்ரி ஹரே கதம் ந பீப்யது மே –68-

ருஷ்டேந யேந -கொண்ட சீற்றம் ஓன்று இருக்க
ருத்ரோ ருக்ணோ தரணீம் ஜகாம சரபோ அபி -சரப உருவாக வந்த பொழுதும் கூட
தோற்று கீழே ஒளிந்து போகப் பண்ணினாய் அன்றோ
கந துரித தந்திநோ அஸ்மாத் கடிகாத்ரி ஹரே கதம் ந பீப்யது மே –68-
இவ்வளவு வைபவம் கொண்ட அக்காரக்கனி அழகிய ஸிம்ஹர் முன்னால்
பாப மூட்டையாகிய பெரிய யானைகள் பயந்து நடுங்கச் சொல்லவும் வேணுமோ

சிங்க வேள் குன்றம் நூற்று எட்டு அந்தாதி -97-பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
சரபத்தை பிளந்தாயே -மன்மதனை எரித்த சிவனையே பிளந்தாயே

அவ்யாஹத ப்ரஸாராத் அபஹத மந்த்ர ஒவ்ஷதாத் ஸஹஸ்ராஸ்யாத்
பாதக மூஷிக நிவஹாத் பாயாத் கடிகாத்ரி போகி ந கோஹி –69-

அவ்யாஹத ப்ரஸாராத் -தனக்கு தடை இல்லாமல் எங்கும் புகுந்து -சஞ்சரிக்கும் அரவம்
ஸர்வ வ்யாபி -அண்டம் அகத்தும் புறத்தும் உள்ளான்
அபஹத மந்த்ர ஒவ்ஷதாத் -மந்த்ரத்துக்கும் ஒவ்ஷதத்துக்கும் கட்டுப்படாமல்
வேதமோ தபஸோ ஹோமமோ -கட்டுப்படுத்த முடியாமல் -பக்தி ஒன்றாலே –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ
ஸஹஸ்ராஸ்யாத் -ஆயிரம் தலை கொண்ட -ஸஹஸ்ரம் பல பலவே ஸர்வேஸ்வரேஸ்வரனையே சொன்னவாறு
பாதக மூஷிக நிவஹாத் பாயாத் -எலி பயல்கள் போல் -துஷ்ட பாபங்களையே எலி கூட்டமாக –
கடிகாத்ரி போகி ந கோஹி -அக்காரக் கனியைத் தவிர வேறே யாரால் போக்க முடியும்

———–

கலித புருஷார்த்த ஸார்தாத் கடிகா கடிதாத் ஸநாத நாத் தர்மாத்
கிம் வா பிரமாத் யதாம் ஸ்யாத் க்ஷேமம் ஹ்யத்ர ஹ்ய முத்ர வா பும்ஸாம் –70 –

கலித புருஷார்த்த ஸார்தாத் -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -இங்கும் அங்கும் -தந்து அருளும்
கடிகா கடிதாத் ஸநாத நாத் தர்மாத் -அக்காரக்கனி -தர்ம நிஷ்டையில் -ததாமி ஏதத் விரதம் மம -என்னுமவன் அன்றோ
அநாதி தர்மம் ராமாவதாரத்தில் வெளிப்படுத்தி அருளி -அவனைப் போல் அநாதி
கிம் வா பிரமாத் யதாம் ஸ்யாத் க்ஷேமம் ஹ்யத்ர ஹ்ய முத்ர வா பும்ஸாம் –இவ்வாறு இருந்தும் நாம் இடறி விழுகிறோமே
பும்ஸாம் -மானிடர்கள் –
அத்ர அமுத்ர-இங்கும் அங்கும்
க்ஷேமம் பெறாமல் இழப்பது ஆச்சார்யம் அன்றோ -ஹி –

———

கந ஸமய நிர் வ்யபேஷாத் மேகாத் கடிகாத்ரி பர்த்ரு ருத்பூதா
ஷால யதி கலுஷ மலிநம் காசந கருணா தரங்கிணீ புவநம் –71-

கந ஸமய நிர் வ்யபேஷாத் -நதி தேவதை -மழை கால ருதுவை விரும்புமே -அசுத்தங்களை தள்ளிக் கொண்டு போகும் அன்றோ –
ஆனால் சரத்காலம் அபேக்ஷை இல்லாத அக்காரக்கனி காள மேகம்
மேகாத் கடிகாத்ரி பர்த்ரு -தலைவன் -கணவன் -இவனே மேகம்
ருத்பூதா -உத்பத்தி செய்து அருளும்
ஷால யதி கலுஷ மலிநம் காசந கருணா தரங்கிணீ புவநம் –பாப அழுக்கு கூட்டங்களை உடனே சுத்தம் பண்ணும் –
கருணை அலைகள் மிக்கு உள்ள நதி-எப்பொழுதுமே -எத்தையும் எதிர்பார்க்காமலேயே செய்து அருளும் அன்றோ

————–

ஸந் நிஹித சங்க பத்மாத் ஸர்வ ஸகாத் ஸகல புண்ய ஜன ஸேவ்யாத்
கடிகாத்ரி ராஜ ராஜாத் காவா நஸ்யாத் ஸமாஸ்ரிதாத் ஸம்பத் –72-

ஸந் நிஹித சங்க பத்மாத் -சங்க நிதி பத்ம நிதிகளைக் கொண்ட குபேரன்
சங்கம் தாமரை -அம்ருத பல வல்லித் தாயார் விட்டுப்பிரியாமல்
ஸர்வ ஸகாத் -ஸர்வேஸ்வரன் ஒருவனே -அனைவருக்கும் தோழன் -மங்களகரம் –
வைஷ்ணவானாம் யதா ஸம்பத் -அதுவே சம்பு சிவனுக்கு மங்களம் –
கீழே 68 ஸ்லோகம் சகாவாக முன்பே அருளிச் செய்தார் -ஆபத்து ரக்ஷகன்
அநந்யார்ஹம் இருக்க வேண்டியதாலும் -மற்றவரை வெறுக்கக் கூடாதே –
ஸகல புண்ய ஜன ஸேவ்யாத் -அனைவரும் ஆஸ்ரியத் தக்கவர்
கடிகாத்ரி ராஜ ராஜாத் -ராஜாதி ராஜன் -அக்காரக்கனி –
காவா நஸ்யாத் ஸமாஸ்ரிதாத் ஸம்பத்-எந்த செல்வம் தான் கிட்டப் பெறார்கள் -எல்லா செல்வங்களும்
அதுக்கும் மேலே பரம புருஷார்த்தமும் கிடைக்கப் பெறுவார்கள் அன்றோ –

————-

ப்ரஐந விஷா நல மூர்ச்சா விமுஷித சித்தான் பவோ ரக க்ரஸ்தான்
குர்வீத லப்த சத்தான் கோவா கடிகாத்ரி கருதி கதோ அந்ய –73-

ப்ரஐந விஷா நல -காம மோஹத்தால் –
மூர்ச்சா விமுஷித சித்தான் -சித்தம் முழுவதும் மூழ்கி
பவோ ரக க்ரஸ்தான் -ஸம்ஸார -உரக-க்ரஸ்தான் –நம்மை விழுங்கும் சர்ப்பம் –
கீழ் 11 ஸ்லோகத்திலும் நரேந்திரன் விஷ வைத்யனாக அருளிச் செய்தார்
குர்வீத லப்த சத்தான் கோவா -அத்தை மீட்டு உஜ்ஜவிப்பிக்க வல்லவன்
கடிகாத்ரி காருடி கதோ அந்ய –அக்காரக்கனி மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணனை விட வேறே யார்
நல்ல பிராணன் -அம்ருத பலமான தன்னையே அளிப்பவர் அன்றோ –
வாடினேன் வாடி –ஓடினேன் ஓடி –நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் -என்றாரே –

——-

நித்யாந் நிரஸ்த தோஷாத் நியதப்தாத் புண்ய கீர்தன ஸ்ரவணாத்
விநதோ சிதாபி தாநாத் ப்ரஹ்மண ஏவாதி கம்யதே சகலம் –74-

நித்யாந் –ஸ நாதன் -நித்தியமாக –
நிரஸ்த தோஷாத் -அகில ஹேய ப்ரத்ய நீகன் அன்றோ
நியதப்தாத் –பரமபதமும் நித்யம் அன்றோ
புண்ய கீர்தன ஸ்ரவணாத்-அது இது உத்து என்னாலாவது என கேனா அபி -அனைத்தும் புண்யம்
விநதோ சிதாபி தாநாத் -பக்தி பிரிய மாதவன் -பக்தி உசிதன் -கருணை பொழிபவன்
ப்ரஹ்மண ஏவ–சதேவ -ஏகமேவ அத்விதீயம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
அதி கம்யதே சகலம் –சகல அபீஷ்டங்களையும் பெற்று மகிழ்வார்கள் அன்றோ
கரந்து எங்கும் பரந்துளன் -தான் ஏற நாள் பார்த்து உள்ளானே –

————–

ஸூத்திம் உப ஜநயதோ அக்ர்யாம் ஸ்வ ஆலோகேந ஏவ வ சஷுஷோ ஜகதாம்
கடிகாத்ர மித்ரதோ அந்யம் கலயே அகில லோக பாந்தவம் நாஹம் –75-

ஸூத்திம் உப ஜநயதோ அக்ர்யாம் -முதன்மை -பவித்ரம்
சரீரத்துக்கு ஆத்ம உஜ்ஜீவனத்துக்கும் –
ஸ்வ ஆலோகேந ஏவ – சஷுஷோ ஜகதாம் -கண் போன்ற ஸூர்யன் -புற இருள் போக்க -கண்ணாவான் -ரக்ஷகன் அவனே
தன்னையே காட்டக் காணலாம்
கடிகாத்ர மித்ரதோ -மித்ரன் ஸூர்யன் –
அந்யம் கலயே அகில லோக பாந்தவம் நாஹம் –ந கலயே-ஸூர்ய நமஸ்காரம் செய்யாமல்
அவனுக்கும் அந்தர்யாமியான அக்காரக்கனியையே தொழுவேன்

——–

அம்ருத ப்ரவாஹ ஸஹஜை ஆலோகைர் அம்ருத ஸீதலை ஸ்நபிதா
விவிதான் பவ தவ தாஹான் விஜஹதி கடிகாத்ரி விலஸி தஸ்ய விதோ –76-

அம்ருத ப்ரவாஹ ஸஹஜை -அம்ருத வெள்ளம் -இயற்கையாகவே –கீழே ஸூர்ய துல்ய -இங்கு சந்த்ர துல்ய
ஆலோகைர் அம்ருத ஸீதலை -குளிர்ந்து
ஸ்நபிதா -நனைக்கும்
விவிதான் பவ தவ தாஹான் விஜஹதி -சம்சார காட்டுத்தீயில் இருந்து விடுவித்து அருளும்
கடிகாத்ரி விலஸி தஸ்ய விதோ –அக்காரக்கனி சந்திரனே

——————

தர்மோத்தரம் த்வி பாத்ரே சங்கே கடிகாத்ரி மத்பத விவாதம்
கேநாப் காரிணா அஸ்மின் கிருஷ்ண ம்ருக வரஸ்ய நியத ஸம் வாஸ –77-

தர்மோத்தரம் த்வி பாத்ரே சங்கே -ஹஸ்திகிரிக்கும் கடிகாத்ரிக்கும் போட்டி -ஹஸ்திகிரிக்கே நியாயம்
கடிகாத்ரி மத்பத விவாதம்-அடியேன் வசிக்கும் கடிகாத்ரி யாக இருந்தாலும்
இரண்டு கிரிக்கும் பெருமாளையே தாங்கி இருந்தாலும்
கேநாப் காரிணா அஸ்மின் கிருஷ்ண ம்ருக வரஸ்ய நியத ஸம் வாஸ–கரும் தெய்வங்கள் இருவரும் -முகில் வண்ணன் -கரிய கோலத் திரு உரு
தன்னிடம் இருந்த ஸிம்ஹம் ஹஸ்திகிரிக்கு அனுப்பி -அஸ்மின் நான் இருக்கும் இடத்தில் –
யார் அபவாதம் செய்தார் -நன் தர்மம் வழியே முடிவு -நீயே தப்பு செய்தாய்
கவி சாதுர்யம் -அபூத கற்பனை -இல் பொருள் உவமை -சண்டையை கல்பிதம் செய்து அருளிய ஸ்லோகம்

————–

அம்ருதார்ப்பணம் ஸ்ரிதாநாம் அபி துர ரஸநத்வம் ஆர்ஜவம் கமநே
கதமிவ ச கருட ஸக்யம் கடிகாசல கிருஷ்ண போகிநோ கடதே –78-

அம்ருதார்ப்பணம் ஸ்ரிதாநாம் -ஆஸ்ரிதற்கு ஆரா அமுதம் அன்றோ அக்காரக்கனி எம்பெருமான் -தன்னையே கொடுக்கும் கற்பகம்
அபி துர ரஸநத்வம் -பிளவு படாத ஜிஹ்வா -நாக்கு -ஸத்ய வாக்யன் அன்றோ –இரட்டை நாக்கு இல்லாமல்
ஆர்ஜவம் கமநே –நேர்மையாக நடந்து -நடப்பித்து
கதமிவ ச கருட ஸக்யம் –கீழே 4 ஸ்லோகம் கருடக்கொடி -மின்னி விளங்கியதை அருளினார் அன்றோ –
கடிகாசல கிருஷ்ண போகிநோ கடதே —அக்காரக்கனியை -உகந்து கைங்கர்யம் செய்ய தானே வந்தார் அன்றோ பெரிய திருவடி

———

ஆகஸ்ஸூ ஸம்ஸ்ரிதாநாம் அநபிஜ்ஞ ஸ்யாத் மநோ அம்ருதஸ் யாஹம்
நியமேந ஸேவக ஸ்யாம் நித்யம் கடிகாத்ரி பூமி பாலஸ்ய –79-

ஆகஸ்ஸூ ஸம்ஸ்ரிதாநாம் அநபிஜ்ஞ ஸ்யாத் -ஆஸ்ரிதர்கள் குற்றம் பாராமுகமாகவே இருந்து அருளி
யாத்மநோ அம்ருதஸ் யாஹம் –அக்காரக்கனி -ஆராவமுதம்
நியமேந ஸேவக ஸ்யாம் நித்யம் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை கொண்டு அருள வேண்டும்
கடிகாத்ரி பூமி பாலஸ்ய –பூ பரிபாலனம் செய்து அருளும்

———–

ஸத் வோத்தர ஸ்வ தாநம் ஸத்ப்போ கடிகாத்ரி பூப்ருதோ யுக்தம்
ஸூதராம் பாப்ரதாநாம் யுஜ்யேத கதம் ஸூரத் விஷாம் தாநம் –80-

கடிகாத்ரி காம ஸூரபே காங்ஷாபத ஸகல பல மஹோ ஜகதாம்
மாதுர் கவாம் மயி ஸ்யாத் வத்ஸே பஹுலம் கதம் ந வாத்ஸல்யம் –81-

ஸத் வோத்தர ஸ்வ தாநம் ஸத்ப்போ –ஸாத்விகர் அனைவரைக்கும் தன்னையே கொடுத்து அருளும்
வேங்கடேச பிரபத்தி ஸ்தோத்ரம் -இதே போல் உண்டே -திருவேங்கடத்தானை சொல்லியே இந்த ஸ்தோத்ரம் உபக்ரமித்தார்
கடிகாத்ரி பூப்ருதோ -அக்காரக்கனி அரசன்
யுக்தம் -இதுவே தகுந்த செயல்
ஸூதராம் பாப்ரதாநாம் -நாநா விதம் பாபமே செய்து உள்ள அசுரர்களுக்கு
யுஜ்யேத கதம் ஸூரத் விஷாம் தாநம் –இவ்வாறு அருள முடியாதே –

கடிகாத்ரி காம ஸூரபே -அக்காரக்கனி தன்னையே தரும் -காமதேனு –
மாதுர் கவாம்-ஈன்ற கன்றுக்கு கொடுக்கச் சொல்ல வேண்டுமோ
காங்ஷாபத ஸகல பல மஹோ ஜகதாம் – ஸமஸ்த லோக மக்களுக்கும் ஸமஸ்த அபீஷ்டங்களை அளிக்கும் அவன்
மாதுர் கவாம் வத்ஸே பஹுலம் கதம் ந வாத்ஸல்யம் –அஹோ -என்ன ஆச்சர்யம்
இவன் ஈன்று எடுத்த குழந்தையான அடியேனுக்கு கிருபை பண்ணுவதில் என்ன ஆச்சர்யம்

————

ஹந்த ந ஜகத் யமோகம் ஆஸிஷம் ஆப்ய ஸ்ரியம் ப்ரயுஞ்ஜாநா
கடிகாசல ஹரி சந்தன பார்ஸ்வம் அஹீநா ஸூபாவந ஆஹாரா —-82-
ஹந்த ந ஜகத் யமோகம் ஆஸிஷம் ஆப்ய ஸ்ரியம் ப்ரயுஞ்ஜாநா -அமோகமான விஷப் பற்கள் கொண்டு இருந்தாலும்
மஹரிஷிகள் புருஷகாரமாக இருந்து நம்மையும் அவன் இடம் சேர்த்து அருளுகிறார்கள்
இதுவே அவர்கள் விரும்பும் கைங்கர்யம் -அது அமோகமாக நிறைவேறும் படி அருளிச் செய்கிறான் –
பரம பக்தியுடன் இருந்து -தீங்கு விளைக்காமல்
கடிகாசல ஹரி சந்தன பார்ஸ்வம் அஹீநா ஸூபாவந ஆஹாரா —-பக்கம் -சுற்றி என்றும் கொண்டு –
அருகில் உள்ள பாம்புகளும் காற்றையே ஆகாரமாகக் கொண்டு
இவனையே உண்ணும் சோறு என்று இருக்கும்
மகரிஷிகளையும் சொன்னவாறு காற்றையே ஆகாரமாகக் கொண்டு மனனம் பண்ணி இருப்பவர்
—————-
சத அம்ருத பலஸ்ய கடிகா ஸைல ரஸா லஸ்ய ஸவித கஸ்யாபி
ஸப்தாதி நிம்ப ஸேவாம் ஸந்த்ய ஜதி ந ஹந்த ஹ்ருதய காகோ மே –83-
சத அம்ருத பலஸ்ய –ஸாத்விக அம்ருத பலம் -அந்தமில் பேர் இன்பம் பர்யந்தம் அருளும்
கடிகா ஸைல ரஸா லஸ்ய –அக்காரக்கனி -கட்டடங்க அம்ருத ரஸம் மிக்கு -அன்றோ -தன்னையே அளித்து அருளும் –
ஸவித கஸ்யாபி -கூப்பிடு தூரத்தில் இருக்க
ஸப்தாதி நிம்ப ஸேவாம் -ஸப்தாதி -வேம்பை விரும்பிப் போகுவதே –
நெஞ்சம் உனது தாள் ஒழிந்தவற்றையே உகக்க -மா முனிகள் போல் இங்கு இவரும் நைச்யம் பாவிக்கிறார்
நாம் அனுசந்திக்கவே இருவரும் இவ்வாறு அருளிச் செய்கிறார்கள்
ஸந்த்ய ஜதி ந -ஐந்தில் அறியாதார் ஐம்பதிலும் அறியாரே -இதுவே தேஹ யாத்திரை ஆவதே –
ஹந்த -என்ன ஆச்சர்யம் -ஐயோ
ஹ்ருதய காகோ மே -காகம் போல் -பறந்து கண்டதையும் கவ்விப் போவதே -ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
—————
அமல அநு ராக ஸலிலை அபிலாஷ மலாந்ய போஹ்ய சகலாநி
குஸூமைர் அஹிம்ஸந ஆத்யை குர்யாம் கடிகாத்ரி தைவதைஸ் யார்ச்சாம் –84-
அமல அநு ராக ஸலிலை –குற்றங்கள் அற்ற ப்ரேமை -பக்தி -விரும்பி -நீர்ப் பண்டமாக உருகும் படி-
பக்திக்கும் அமல –நீர்ப்பண்டத்துக்கும் அமல விசேஷணம்
பர கத ஸ்வீ காரம் -உதாராஸ் ஸர்வை என்னுமவன் அன்றோ
அபிலாஷ மலாந்ய போஹ்ய சகலாநி -ஆசை காமம் -ஆறு பகைவர்கள் -காமம் க்ரோதம் இத்யாதிகளைபப் போக்கி
மதம் அபிமானம் அற்ற அந்திம உபாய நிஷ்டர்கள் அன்றோ மா முனிகள் ப்ருத்யைர்கள் -அவர்களில் ஸ்ரேஷ்டர் அன்றோ இவர்
நமக்காகவே இவ்வாறு அருளிச் செய்கிறார் -நிர்மலமான பக்தி நீர் கொண்டு அகற்றி அருள வேண்டும்
குஸூமைர் அஹிம்ஸந ஆத்யை குர்யாம்–ஸாத்விக அஷ்ட புஷ்பங்களைக் கொண்டு
கடிகாத்ரி தைவதைஸ் யார்ச்சாம் –அக்காரக்கனி அர்ச்சனை செய்யும் அருள வேண்டும்

அஹிம்ஸா பிரதமம் புஷ்பம் புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ:
சர்வபூத தயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விசேஷத:
சாந்தி: புஷ்பம் தப: புஷ்பம் ஞானம் புஷ்பம் ததைவ ச
சத்யம் அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்

அபகத மத மாநைர் அந்திமோபாய நிஷ்டை-அதி கத பரமார்த்தைர் அர்த்த காம அநபேஷை –
நிகில ஜன ஸூஹ்ருத்பிர் நிர் ஜித க்ரோதா லோபை வர வர முனி ப்ருத்யைர் அஸ்து மே நித்ய யோக –10-

விஷய போகக் களிப்பும் செருக்கும் அற்றவர்களாயும் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் சரம உபாயமாக நிஷ்கர்ஷிக்கப் பட்ட
அந்திம உபாயத்தில் ஊற்றம் உடையவர்களாயும் சகல சாஸ்த்ர சாரார்த்தங்களும் கை வந்தவர்களாயும் -தர்ம மோக்ஷங்கள் தவிர அர்த்த காமங்களில்
விருப்பம் அற்றவர்களாயும் -ஒருவர் இடத்திலும் மாத்சர்யம் கொள்ளாதே சர்வ பூத ஸூஹ்ருத்துக்களாயும் க்ரோதம் லோபம் இரண்டையும் வென்றவர்களாயும் இருக்கின்ற மா முனிகளின் அடியாரோடு அடியேனுக்கு நித்ய சகவாசம் உண்டாகக் கடவது -என்று விஞ்ஞாபனம் செய்வார் சில பக்தர்கள்-

—————

தந தாத்யைர் அபி ந பரஸை ஸாத்யம் ஸூ மஹத் திரண்ய தாநம் தத்
ஸூகரேண க்ருதமத ஸ்யாத் துல்யோ கடிகாத்ரி பூ ப்ருதகோ –85-

தந தாத்யைர் அபி -குபேரன் முதல் கொண்டு –
ந பரஸை ஸாத்யம் -வேறே எவராலும் செய்ய முடியாததாய்
ஸூ மஹத் திரண்ய தாநம் தத் -பெரிய-மஹாத்ம்யம் மிக்க இரண்ய தானம் -ஹிரண்ய வதம் -மோக்ஷ பிராப்தி என்றுமாம்
ஸூகரேண க்ருதமத ஸ்யாத் -ஸூ குமாரமான திருக் கரங்களால் செய்து அருளிய
துல்யோ கடிகாத்ரி பூ ப்ருதகோ –அக்காரக்கனி எம்பெருமானுக்கு ஓத்தார் மிக்கார் இல்லையே
மோக்ஷ பிரதன் இவன் ஒருவனே -என்றவாறு –

———–

ஐநயத்வதி ச சகலாந் ஞாப்யதி ச யோஹிதாஹிதே சாஸ்த்ராத்
நாத்யேதி தஸ்ய கோவா ஞானீ கடிகாத்ரி ஸர்வ ஐநகஸ்ய –86-

ஐநயத்வதி ச சகலாந் -ஸமஸ்த சேதனங்களையும் ஸ்ருஷ்டித்து ரக்ஷித்து அருளி
ஞாபயதி ச யோஹிதாஹிதே சாஸ்த்ராத் ஹிதமாக ஸாஸ்த்ர பிரதானங்களையும் அருளி
கோவிந்தா நாமம் வாயாலே சொல்வாருக்கும் ரக்ஷித்து அருளும் தீஷையும் கொண்டு அருளி
நாத்யேதி தஸ்ய கோவா ஞானீ கடிகாத்ரி ஸர்வ ஐநகஸ்ய -ஜனிக்கும் காரணம் –அகில லோக தந்தை அன்றோ அக்காரக்கனி
இவற்றை அறிந்து -அத்யயனம் பண்ணி -கற்று அறிந்து தேறி -யார் தான் செய்ய மாட்டார்கள் –

———–

தோஷா கரே வி ராகம் ஸூர்யா லோகே விகாஸ மா மோதம்
பத்ம்யாக்யாம் அபி வஹதோ யுக்தா கடிகாத்ரி பஸ்ய கேஸரிதா –87-

தோஷா கரே வி ராகம் -தோஷம் கரோதி -சந்திரனுக்கு தோஷாகரன் -அவனைப் பார்த்து கூம்பிப் போகுமே
குற்றங்களையே பண்ணிக் கொண்டு இருக்கும் ஸம்ஸாரிகளை பார்த்து திருமுகம் வாடுமே
ஸூர்ய ஆலோஸி விகாஸ மா மோதம் -கதிரவனைப் பார்த்ததும் விகசிக்கும்
ஸூரி ஆலோக்ய-நித்ய ஸூரிகளை -அவர்களிலும்  பிரதானரான ஆதி சேஷனைப் பார்க்கும் க்ஷணம் தோறும் அதி விகாஸம் அடையுமே
பத்ம்யாக்யாம் அபி வஹதோ -பத்மம் தாமரை -பத்மம் திருக் கையில் வைத்து இருப்பதால் பிராட்டிக்கும் அக்காரக்கனிக்கும் பத்மக
யுக்தா கடிகாத்ரி பஸ்ய கேஸரிதா –கேஸரி -மகரந்த சுவை இருப்பதால் தாமரைக்கும் ஸிம்ஹ பிடரிக்கும்
இவ்வளவு ஒற்றுமைகள் உண்டே -நீரே தாமரை -என்கிறார்

நித்யாநாம் யத் ப்ரதம கணநாம் நீயஸே ஷாஸ்த்ர முக்யை: |
க்ருத்யாSSக்ருத்யா பவஸி கமலா பர்துரேகாந்த மித்ரம் ||
தேவ:ஸ்வாமீ ஸ்வயமிஹ பவந் ஸௌம்யஜாமாத்ரு யோகீ |
போகீஷத்வத் விமுகமபிமாம் பூயஸா பஷ்யசி த்வம் ||-ஸ்ரீ வர வர முனி சதகம் –24

எந்த நீர் சாஸ்த்ரமறிந்தவர்களால் நித்யர்களுக்குள் முதல்வராக எண்ணப் படுகிறீர்,
செய்கையாலும் உருவத்தாலும் கமலாபதியின் ரஹஸ்யத் தோழனாகிறீர் —
தேவனாகவும் உடையவனாகவும் உள்ள தாமே இங்கு வரவர முநியாகி ஹே அநந்தனே!
உம்மைப் பாராதிருந்தும் என்னை நிறையக் கடாக்ஷிக்கிறீர்.

————————

தந்வீ மயா அத்ய லப்தா தபஸா விபுலேந பக்தி கந்யேயம்
பஜதாம் அவ்யபிசாரம் பாவம் கடிகாத்ரி பர்த்தரி ப்ரவ்டா–88–

தந்வீ மயா அத்ய லப்தா தபஸா விபுலேந பக்தி கந்யேயம்-அடியேனால் விபுலமான தபஸ்ஸாலே
இப்பொழுது அடையப்பெற்ற -பக்தி -என்னும் கன்னிகை -தந்வீ-இப்பாலையை –
பஜதாம் அவ்யபிசாரம் பாவம் கடிகாத்ரி பர்த்தரி ப்ரவ்டா—பிஞ்சிலே பழுத்து ஆசை விஞ்சி -பிரவிடாகி
அக்காரக்கனி எம்பருமானையே வரித்து
செய்த்தலை நாற்று போல் செய்வன செய்து கொள்ளட்டும் என்று அவனுக்கே அநந்யார்ஹை ஆகி
மற்று ஒரு தெய்வத்துக்கு ஆளாவதையும் -பேச்சும் கூட பொறுக்க மாட்டாமல் ஆனாள்
இந்த ஸ்தோத்ரம் ஸ்வாமியுடைய தபஸ்ஸாகும்
இதன் பலமாகவே பெற்ற பரம பக்தி நிலை என்று அருளிச் செய்கிறார்

—————-

பாஸ்வதி ஸூராஸூர குரவ் போகிநி வந்தாரு சவும்ய மந்தாரே
கடிதாத்மகாய கடதே கடிகாத்ரி விதவ் கதம் க்ரஹை பீடா –89-

பாஸ்வதி –ஸூர்யன் -ஆச்சார்யமான தேஜஸ்
ஸூராஸூர குரவ் -ப்ருஹஸ்பதி சுக்ரன் -தேவாசுரர்களும் பூஜிக்கும்
போகிநி -ராகு கேது -போகங்களை அனுபவிக்கும் -பாற் கடல் எம்பெருமான்
வந்தாரு சவும்ய -புதன் -வாங்கியவர்களுக்கு கற்பகம்
மந்தாரே -அனைத்துக்கும் அந்தர்யாமி
கடிதாத்மகாய கடதே கடிகாத்ரி -அக்காரக்கனி -சேராச் சேர்க்கை ந்ருஸிம்ஹம்
விதவ் கதம் க்ரஹை பீடா —க்ரஹங்களால் என்ன பீடை வரும் -ஸந்த்ரன் விட ஆஹ்லாத கரம்
நீரே குளிரச் செய்து அருளிய பின்பு -ஆச்சார்யர் அநு க்ரஹமே -பலிக்கும் ‘
க்ரஹங்களால் அணுகவும் ஒண்ணாதே

—————–

ஸம வர்த்திநி புவநேஸே புண்ய ஜநே பாவகே ஜகத் ப்ராணே
ஸ்ரீதே ஸிவே அபி கடிகா ஸைல ஹரவ் சதி கிமன்ய திக் பாலை –90-

ஸம வர்த்திநி -யம தேவன் –தர்ம ராஜன் –
புவநேஸே-இந்த்ரன் -வருணனையும் சொல்வார் -வர்ஷித்து ரக்ஷணம்
புண்ய ஜநே -நிருதி –
பாவகே -அக்னி தேவன் -பரம பாவனன்
ஜகத் ப்ராணே -வாயு பகவான்
ஸ்ரீதே -சுவையான திருவின் மணாளன் -குபேரன்
ஸிவே அபி -சிவன் உட்பட -பரம சிவன் -வைஷ்ணவாணாம் யதா சம்பு அன்றோ –
இயற்கையான மங்களம் இவன் திருவடி தீர்த்தம் தாங்கி
கடிகா ஸைல ஹரவ் சதி -அனைவருக்கும் அந்தர்யாமி அக்காரக்கனி எம்பெருமானே தானே
கிமன்ய திக் பாலை –இவர்களால் ப்ரபன்னருக்கு என்ன வேண்டும் –

இந்திரன், அக்னி தேவன், எமதருமன், வருண பகவான், நிருதி பகவான், வாயு பகவான், குபேரன், ஈசானன் ஆகிய எட்டுபேரும் அஷ்ட திக் பாலகர்கள்
கிழக்குத் திசைக்கு அதிபதி, இந்திரன்
தென்கிழக்கு அக்னி தேவன்
தரும தேவன் -காலதேவன் – அவர் தான் எம தருமன். தென் திசைக்காவலன்
வருண பகவான், மேற்குத் திசையின் நாயகன். காவலன்
நிருதி பகவான் தென்மேற்கு திசையின் அதிபதி. –
இவரை வழிபட்டு வந்தால், மனோபலம் பெருகும். மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகள் பற்றிய பயமும் நீங்கும்.
வடமேற்கு திசைக்குக் காவலன் வாயு பகவான்
குபேரன் வடக்குத் திசையின் நாயகன்
வடகிழக்கு திசையின் அதிபதி, நாயகன்… ஈசானன்.-சிவனாரின் ஐந்து முகங்களில், ஈசானமும் ஒன்று

————–

யஸ் யோதய பரார்த்த யஸ்ய ஆலோகேந யாத்யகம் விலயம்
காலேந போத யதிய கடிகா மித்ரே அத்ர கோ விராகீ ஸ்யாத் –91-

யஸ் யோதய பரார்த்த -யாருடைய உதயத்தால் பரர்களுக்கு நன்மை விளைகிறதோ
ஞானம் -அந்தமில் பேர் இன்பம் பிராப்தி பர்யந்தம் கிட்டுமோ
யஸ்ய ஆலோகேந யாத்யகம் விலயம் -யாரைக் காண்பதினாலேயே அகம் -அழுக்கு இருட்டு -அஞ்ஞானம் நீங்குகின்றதோ
கடாக்ஷத்தால் பிரதிபந்தங்களைப் போக்கி அருளி
காலேந போத யதிய கடிகா -சரியான காலத்தில் ஒளி உண்டாக்கி -விழிப்பு உண்டாக்கி -ஞானம் உண்டாக்கி
காலம் தாழ்த்தாமல் கிருபை அருளி
மித்ரே அத்ர கோ விராகீ ஸ்யாத் –அப்பேர் பட்ட ஸூர்யன் மேல் யார் தான் விருப்பம் கொள்ளாமல் இருப்பார் –
அக்காரக்கனி திவாகரன்-அச்யுத பானு – மேல் ஆர் தான் ஆசை கொள்ளாமல் இருக்க இயலும்

—————

ஸரஸே ஜாக்ரதி கடிகா ஸைல கதே ஸரஸி ஜாலயே மோஹாத்
விரஸே ஷு சித்த நாமா விஷயே ஷுர கேஷு விஹரதே ப்ருங்க –92-

ஸரஸே ஜாக்ரதி கடிகா ஸைல கதே -நீர் நிரம்பிய ஸரோவரம் இங்கே உள்ளது -நன்றாக மலர்ந்த
கருணா ரஸம் பொழியும் அக்காரக்கனி -கடிகைத்தடம் குன்றத்திலே நீர்ப்பண்டமாக
ஸரஸி ஜாலயே மோஹாத் -ஸரஸி ஜா- தாமரை மலர்களுக்கு இருப்பிடம் -பிராட்டி அம்ருத பல வல்லித் தாயாரும் இங்கே எழுந்து அருளி இருக்க
விரஸேஷு சித்த நாமா விஷயே ஷுர கேஷு விஹரதே ப்ருங்க — ரீங்காரம் இட்டு வரும் வண்டு
இங்கே வராமல் முள்ளு மலரிலே சென்று தன்னை வருத்திக் கொள்கிறதே ஐயோ
மிதுனமாக இங்கே நமக்காகவே உகந்து எழுந்து அருளி நித்ய வாஸம் பண்ணி நிற்க
புருஷாந்தரங்களை வேறே எங்கு எங்கோயே போகுமோ
ஹரீ ஹரீ என்று அன்றோ ரீங்காரம் இட்டுக் கொண்டு மங்களா ஸாஸனம் பண்ண அன்றோ அடுப்பது
கீழ் அச்யுத பானு ராம திவாகரன் அக்காரக்கனி பாஸ்கரன்
இங்கு தாமரை விகஸிப்பதும் பொருந்துமே

————-

பிப்ரதி சதைவ லஷ்மீ விப்ரா ஜதி மித்ர மண்டலே விதுஷாம்
கடிகாத்ரி ஸார்வ பவ்மே கிம் வா கடதே ந ஸம் ஸ்ரிதாபி மதம் –93-

பிப்ரதி சதைவ லஷ்மீ -எப்பொழுதும் செல்வங்கள் மிக்கு இருக்கும் சக்ரவர்த்தி
அம்ருத பல வல்லி தாயார் இறையும் அகலகில்லேன் என்று இருக்க
விப்ரா ஜதி மித்ர மண்டலே விதுஷாம் -தோழர்கள்-வேத விற்பன்னர்கள் பண்டிதர்கள் மந்திரிமார்கள் புடை சூழ்ந்து –
ஓலக்கத்தில் சாதனர்களை கௌரவித்து –
ஞானிகள் தபஸ்ஸூ செய்யும் படி ஸூர்ய நாராயணனாக இருக்க
கடிகாத்ரி ஸார்வ பவ்மே -ஸர்வேஸ்வரேஸ்வரன் அக்காரக்கனி எம்பிரான் நித்ய ஸந்நிதியாய் எழுந்து அருளி இருக்க
நம் போல்வார் கூட சகல மனுஷ நயன விஷய தாங்கனாக உகந்து எழுந்து அருளி இருக்க
கிம் வா கடதே ந ஸம் ஸ்ரித அபி மதம் –அபீஷ்டங்கள் எவை தான் யாருக்குத் தான் கிட்டாமல் போகும் –

—————–

ஸ்ரித கடிகாசல ஸிகரே ஸ்திர கருணா பூர நிர்ப்பரே ஸிஸிரே
தீவ்யந்தி விமல பஷா திவ்யே கமலாலயே சிரம் ஹம்ஸா –94-

ஸ்ரித கடிகாசல ஸிகரே -அடைந்த -உகந்து அருளி
ஸ்திர கருணா பூர நிர்ப்பரே ஸிஸிரே -குளிர்ந்த தடாகம் -கருணை வெள்ளம் நிரம்பிய
ஆச்சார்ய புருஷர்கள் கூடி -கிருபா கடாக்ஷம் -பெற்று ஆழ்ந்து –
லோக ஹிதம் ஒன்றே இவர்கள் க்ருத்யம் -59 சதகம் -நம் போல்வாரை கரை சேர்க்கவே
நம்போல்வாரை மிதுனத்துக்கு சேஷமாக்கி அருளவே இவர்கள் இங்கே மண்டி உள்ளார் அன்றோ
தீவ்யந்தி விமல பஷா திவ்யே கமலாலயே சிரம் ஹம்ஸா –பாவனத்வம் -நிறைய நாளாக விளையாடிக் கொண்டு இருக்கும்
உலாவும் பெருமாள் -ஞான தீபம் ப்ரஸாதம் -ஸஜாதீய மனுஷ்யர் என்று எண்ணினால் யானையைக்குளிப்பாட்டிய பின்பு தன் மேல் புழுதி போட்டுக் கொள்ளுமா போலே அன்றோ
ஆச்சார்யர் திவ்ய மயம் என்று உணர வேண்டுமே –
திவ்யமான தடாகத்தில் மிதுன கருணா கடாக்ஷத்தில் விளையாடும் பரம ஹம்ஸர்
தூவி சேர் அன்னம் சூழ் புனல் குடந்தையே தொழுது
ஆச்சார்யர் -ஞானம் அனுஷ்டானம் -இரண்டு சிறகுகள் -பரம ஹம்ஸர் –
ப்ரயோஜனாந்தர பரர் இல்லாமல் -மங்களா ஸாஸனம் முதல் பாசுரம் கலியன்

அஸ்மாத் பூயாந் த்வமஸி விவிதா நாத்மந: சோதயித்வா |
பத்மா பர்த்து: ப்ரதி திநமிஹ ப்ரேஷயந் ப்ராப்ருதாநி ||
தஸ்மிந் திவ்யே வரவரமுநே தாமநி ப்ரஹ்ம ஸாம்யாத் |
பாத்ரீ பூதோ பவது பகவந் நைவ கிஞ்சித் தயாயா: ||–ஸ்ரீ வர வர முனி சதகம் –59

பிராட்டியின் கணவனான ஸ்ரீமந் நாராயணனுக்குப் பரிசாக இங்கு தினந்தோறும் பல ஜீவன்களைச் சுத்தி செய்து
எங்களை அனுப்பிக் கொண்டு நீர் மதிக்கத் தக்கவராக இருக்கிறீர்.
ஹே வரவரமுநியே! அந்தப் பரமபதத்தில் பரப்ரஹ்ம ஸமமாக இருப்பதால்
உமது கருணைக்குப் பாத்திரமாக ஒரு வஸ்துவும் ஆகிறதில்லை.

———————-

விஹரதி பஹு குண ஜாலே வீரே கடிகாத்ரி கிருஷ்ண வர்த்மநிதே
விஜஹதி ஸமஸ்த தாபான் விஜயந்தே கில மமாபி மோஹ மஹோ –95-

விஹரதி பஹு குண ஜாலே -கல்யாண குண கணங்கள் மிக்கு
வீரே -தாப த்ரயங்களைப் போக்கி அருளும் வீரனே
கடிகாத்ரி கிருஷ்ண வர்த்மநிதே –மார்க்கம் உபாயம் -அக்காரக்கனி கண்ணன் என்னும் கரும் தெய்வமே ஸித்த உபாயம்
விஜஹதி –ஆஸ்ரயித்து- கைங்கர்யமே யாத்ரையாகக் கொண்டு
ஸமஸ்த தாபான் விஜயந்தே -கீழே பரம ஹம்சர்கள் -தாபத் த்ரயங்கள் விடுபட்டுப்போய்
கில மமாபி மோஹம் அஹோ — அடியேனுக்கும் மோஹம் விலகிற்றே -என்ன ஆச்சார்யம் –
நீயே உபாயம் உபேயம் -அறியும்படி அருளினாயே
நாம் அனுசந்திக்க வேண்டியதற்காக அருளிச் செய்த ஸ்லோகம் அன்றோ –

————–

கநக மய கடக ஸோபாம் கலயதி கடிகா மஹீ ப்ருதோ ருசிரே
தீப்தி மதி க்ருஷ்ண வர்ணே த்ருஷ்டே த்ராச லவம் அனு பவேத் கோவா -96-

கநக மய கடக ஸோபாம் கலயதி –பொன் மயமான ஜ்வலிக்கும் சோபை மிக்க
கடிகா மஹீ ப்ருதோ ருசிரே தீப்தி மதி க்ருஷ்ண வர்ணே த்ருஷ்டே -ப்ரகாஸம் -அழகு -கருமை வண்ணம் -பொன் வண்ணமும் சேர்ந்து
த்ராச லவம் அனு பவேத் கோவா -ஸம்ஸார பயம் லவலேசமும் கீழே இருந்து தரிசித்தாலே போதுமே
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே போல் இங்கும் –

—————-

ஸப்தரிஷி ஸேவ்ய மாநே சந்தத ஸூமந ஸ்துதே ஸஹஸ்ராஷே
ரமதாம் மநோ ஹரவ் மே ராஜதி கடிகாத்ரி ரத்ன ஸாநு தடே –97-

ஸப்தரிஷி ஸேவ்ய மாநே -சேவிக்கப் பெற்றான் – மரீசி அத்திரி, வசிஷ்டர், காஸ்யபர், கௌதமர், பரத்வாஜர், அங்கீரஸ் …
சந்தத ஸூமந ஸ்துதே ஸஹஸ்ராஷே– -புருஷ ஸூ க்தம் கொண்டு ஸ்துதிக்கும் ஸத் புருஷர்கள்
ரமதாம் மநோ ஹரவ் மே ராஜதி கடிகாத்ரி ரத்ன ஸாநு தடே -நரஸிம்ஹன் இடம் மனஸ்ஸூக்கு ப்ரீதி உண்டாக்கி அருள வேண்டும்
மேரு போன்ற குன்றம் கீழேயே அருளிச் செய்தார் அன்றோ –

—————

பாத ஸ்பர்சந விபவாத் பாலித புவநே ப்ரபோதி தாத்ம குணே
பஜது கடிகாத்ரி மித்ரே பகவதி பாவம் மநஸ் ஸரோஜம் மே –98–

பாத ஸ்பர்சந விபவாத் -தீண்டி -கிரணங்களை பரப்பி –திருவடி சடாரி சம்பந்தத்தால் -ப்ருத்ய -அடியார் அடியார்
பாலித புவநே ப்ரபோதி தாத்ம குணே-பரிபாலனம் -இருள் நீக்கி -பயிர்களை விளைவித்து –
தத்வ ஞானம் அறிவித்து -அஞ்ஞானங்களைப் போக்கி-ஆத்ம குணம் வளர்த்து —
பஜது கடிகாத்ரி மித்ரே பகவதி பாவம் மநஸ் ஸரோஜம் மே –மித்ரன் சூரியனுக்கும் இன்னும் ஓரு பெயர் –
கடிகைத்தடம் குன்றம் மேல் உள்ள அக்காரக்கனி தானே ஹிருதய கமலத்தை இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்

————-

துஷ்டே அல்பத ஸூ ஸீலே ஸூ குண க்ருஹீத ஸூ லக்ஷணே ஸூ த்ருடே
ஆரோபிதோ மதீயோ பத்ரே கடிகாத்ரி தூர்வஹே பார –99-

துஷ்டே அல்பத ஸூ ஸீலே -எருது அல்ப தீனி கொடுத்தாலும் ஸந்தோஷம் அடைந்து –
அஞ்சலி பரமாம் முத்ரா -ஸக்ருத் -பக்தி ஒன்றையே எதிர்பார்த்து –
ஆச்சார்யர் ஸுலப்யமே உருவாகி
என் பேரைச் சொன்னான் ஊரைச் சொன்னான் இத்யாதி
ஸூ குண க்ருஹீத –கழுத்தில் காட்டியதும் அடங்கி இருக்கும்
கல்யாண குணங்கள் -ஞான பக்தி வைராக்யம் -பக்த ஆஸ்ரித வத்சலன் -பக்த உசிதன்
ஸூ லக்ஷணே ஸூ த்ருடே –அங்க அடையாளங்கள் பூர்த்தி -மல்லாண்ட திண் தோள்
திண் கழல் -ஊற்றம் உடையாய் -நெடுமால்
ஞானம் அனுஷ்டானங்கள் நிறைந்த ஆச்சார்ய ஸமூஹம் -நம்மைக் கரை யேற்றவே விரதம் தீக்ஷயாகக் கொண்டு
ஆரோபிதோ மதீயோ பத்ரே கடிகாத்ரி தூர்வஹே பார —இங்கே அன்றோ உள்ளது –
என்னுடைய பாரங்களை சமர்ப்பிக்க ஏற்றவாறு –
காளை புகுதக் கனாக் கண்டேன்
ரிஷபம் -ரிஷ அபம் -தீப பிரகாசம் இவனே
இவனையே பார்த்த சாரதி என்றும் முன்பே அருளிச் செய்தார்
பத்ரம் -மங்களம் -ஆச்சார்யர் திருவடிகளே மங்களகரம் -மங்களா ஸாஸனம் பண்ண நம்மை ஆக்கி அருளும் காளைகள் –

———–

மேல் மூன்றும் பிரார்த்தனா ரூபமாக அங்கீ கருத்து அருள வேண்டி அருளுகிறார்

அநநு குணாம் அபி வாணீம் ஆகஸ் ஸந்தோ ஹ மந்த மதி கலிதாம்
அங்கீ கரோது பகவான் ஆஸ்ரித தோஷ அவலோநா அகல்ய –100-

அநநு குணாம் அபி வாணீம் -உனது பெருமைக்குச் சேராத வாக்கு –
ஆகஸ் ஸந்தோ ஹ மந்த மதி கலிதாம்-மந்த மதிகளான -ப்ருத்யர்களின் கடைசில் நிலையானதாக ஆக்கி அருள் என்றார் அன்றோ
அங்கீ கரோது -இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனிய வாறே அன்றோ
பகவான் –ஸ்வா பாவிக ஷட் குண -பகவான்
ஆஸ்ரித தோஷ அவலோநா அகல்ய –குற்றங்கள் எல்லாம் பார்க்காமல் -வாத்சல்யம் மிக்கு உள்ள அக்காரக்கனி எம்பெருமான் அன்றோ

———–

ஸ்வாமி ந ஏவ க்ருதிர் மே ஸூக்திஸ் தோஷாயா ததபி தஸ்யைஷா
ஸ்வ யுக்தி மநு வததி பாலே ஸூதராம் தாதோ அபி தோஷ முப் யாதி –101-

இளைய புன் கவிதை
தன் சொல்லால் என்னைப் பாடுவித்த அப்பன்
பாலன் அநு வாதம் -தப்பாகவே பின்னால் சொன்னாலும்
தாதா-அப்பனுக்கு சந்தோசம் ஆகுமே
ஆர்த்தி பிரபந்தம் -முக்த ஜல்பிதம் என்று மா முனிகள் -திருவாய் மொழிப்பிள்ளை திருவடி அடைந்த வஸ்துவின் உளறல்

தேசிகர்கள் போற்றும் திருவாய் மொழிப் பிள்ளை
வாச மலர்த்தாள் அடைந்த வத்து வென்று -நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசா அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து—57-

தேசிக குல கூடஸ்தரான ஸ்ரீ ஆழ்வார் உடைய அசேஷ வ்ருத்தியிலும் அந்விதராய்
அதுவே யாத்ரையாகச் செய்து கொண்டு போருகையாலே
செந்தமிழ் வேத திருமலை ஆழ்வார் வாழி-என்று ஸ்ரீ ஆச்சார்யர்களாலே மங்களா சாசனம் பண்ணும் படியான
மகாத்ம்யத்தை உடையரான ஸ்ரீ பிள்ளை யுடைய சௌகந்த்ய சௌகுமார்ய யுக்தமான திருவடிகளை ஆஸ்ரயித்து

சேஷத்வ ஆஸ்ரயமான வஸ்து என்கிற ஸ்நேஹத்தால்-அடியேனுடைய அபராதங்களை தர்சியாதே
அதில் அவிஞ்ஞாதா வாய் இருக்கிற தேவர் அடியேனுடைய தோஷ யுக்தமான
முக்த ஜல்பிதத்தை சீறாமல் சஹித்து நின்று சாதாரமாக திருச் செவி சாத்தி அருள வேணும் –

———-

பக்தோசித அப் யுக்தாம் பக்த்யா சவ்ம்ய வர கிங்கர உப ஹிதாம்
அம்ருத பலா வலிம் அநகா ம்ருது லாமஸ் வாத்ய ம்ருத்யு மதி யாந்தி –102-

பக்தோசித அப யுக்தாம் -பக்த வத்சலன் -தக்காண திருச்செவி சாத்தும் படி அருளி -அங்கீ கரித்து அருளி
பக்த்யா சவ்ம்ய வர கிங்கர உப ஹிதாம் -அடையாளம் காட்டிக்கொள்கிறார் -ஷட் பதம் -திருவடித் தாமரைகளில் அமர்ந்த வண்டு
திவ்ய ஞான பிரதர் -தனியனிலே உண்டே-ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

மா முனிகள் நியமிக்க அருளிச் செய்த திவ்ய கிரந்தம்
அம்ருத பலா வலிம் -ஸ்வாமியே திரு நாமம் -ஆவலி -தொடர்
ஒவ்வொன்றுமே அம்ருதம் -தொகுத்து அருளிய திவ்ய மாலை –
அநகா-குற்றங்களைப் போக்கி அருளும்
ம்ருது லாம் -மிருதுவாக
ஆஸ்வாத்ய -தாபத் த்ரயங்களுக்கு ஆஸ்வாஸ கரம்
ம்ருத்யு மதி யாந்தி –ஸம்ஸாரத் தடைகளைப் போக்கி நிரதிசய பரம புருஷார்த்தம்
ஆச்சார்யர் திருவடிகளிலே சேர்த்து அருளும்

—————————————————————————————————————————–

வித்தகனே வேந்தே மணவாள மா முனியே
சுத்தனே சோதிச் சுடர் முடியே -முத்தே
கரும்பின் சுவையே கடலில் அமுதமே
அரும்பின தாள் நீயே அருள் —ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் குண வகுப்பு

————-

மல்லிகைகள் வகுள மலர் மணி முடியில் நாறும்
வண் பவள வாய் அலரில் மறைகள் மிகு நாறும்
நல்லிசை சேர் பதின்மர்களின் நற் கலைகள் எல்லாம்
நலமுடைய கருணை விழி நாள் தோறும் மணக்கும்
சொல்லரிய பாதம் அபிஷேக மணம் நாறும்
தொல்லை எதிராசன் என இவ்வுலகில் வந்தோன்
செல்வன் மணவாளன் லோக குரு எங்கோன்
திருவடிகள் அல்லது ஒரு தெய்வம் அரியேனே–ஸ்ரீ ஸ்வாமி எறும்பி அப்பாவின் ஸ்ரீ மணவாள மா முனிகள் அகவல்


ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்