பல திவ்ய தேசங்களில் பகவான் புறப்பாடு கண்டருளும் போது இருபுறமும் இருவர் வெண்சாமரம் வீசிக்கொண்டே வருவர்.
ஏன் அப்படி வீசிக்கொண்டு வருகிறார்கள் தெரியுமா
பகவான் வீதிபுறப்பாட்டின் போது அவருக்கு களைப்பு மற்றும் நம்மைபோல் உடல் வியர்க்காமல் இருப்பதற்காக அல்ல.
வெண்சாமரம் கவரி மான்களின் ரோமங்களால் ஆனது. இதற்கு வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு....
பகவான் ஸர்வ வியாபி. அவன் உடலிலிருந்து வேதங்களும் மந்திரங்களும் எந்த நேரமும் வெளிவந்து கொண்டே இருக்கும்.அப்படி வெளிவரும் வேதங்கள் மந்திரங்கள், எட்டு திசையும் பரவி ஊரும் மக்களும் சூபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இருபுறமும் ஒரு ஒழுங்கு முறையில் சாமரம் வீசுகிறார்கள். களைப்பை போக்க அல்ல