பாதுகா ஸஹஸ்ரம் - சில துளிகள்

ஸ்ரீ ஸ்வாமி வேதாந்த தேசிகர் ஸ்ரீ ராமானுஜ ஸம்ப்ரதாயத்தை நிலை நிறுத்தி வைஷ்ணவ உலகுக்கு மஹத்தான ஸேவை புரிந்துள்ளார். அவர் எழுதிய நூல்கள் எவ்வளவோ கலியுகத்தில் நாம் செய்யும் பாவங்கள் கணக்கில் அடங்காதது இப்பாபங்ககளை போக்க நமக்கு நல்ல வழி காட்ட அப்பப்போது பகவான் ஆசார்ய ரூபமாக அவதரித்து நம்மை நல் மார்க்கத்தில் இட்டு செல்கிறார்கள். அப்படி அவதரித்த மகான் தான் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன். அவர் செய்த கிரந்தங்களும் காரியங்களும் எல்லை இல்லை.

அவைகளில் மிக முக்கியமானது ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம் - ஒரு நாள் ஸ்ரீ தேசிகன் ஸாயங்க்காலம் அனுஷ்டானமான பிறகு ஸ்ரீ ரங்கநாதன் மங்களா சாஸனத்திற்கு எழு.ந்தருளினாராம். அப்போது ஒரு வைஷ்ணவர் ' இன்று இராத்திரிக்குள் தேவரீர் ஆயிரம் ஸ்லோகம் பண்ணவேண்டும், நானும் பண்ணுகிறேன் பார்ப்போம் ' என்றாராம்.

அதற்கு ஸ்ரீ தேசிகன் இந்த ஸ்வாமிமுகமாய் - இது பகவானின் நியமனம் -போல் எண்ணி
பாதுகா ஸஹஸ்ரம் பண்ணுகிறேன் என்று சாதித்தாராம். பெருமாளிடத்தில் எல்லை இல்லா பக்தி கொண்ட ஸ்ரீ நம்மாழ்வாரை ஸ்ரீ சடாரீ என்றும், ஆழ்வார் பாதுகையை ஸ்ரீ மதுர கவி என்றும்-ஸ்ரீ ராமாநுஜர் என்றும், ஸ்ரீ பாஷ்யகாரர் பாதுகையை-முதலியாண்டான் என்றும் ஸ்ரீ தேசிகன் பாதுகையை நையினாச்சாரியார் என்றும் சொல்லுகிறார்கள்.

நாம் பெருமாளை வாயால் மாத்திரம் சொல்லுகிறோமே தவிர மனப்பூர்வமாக மனதில் பட்டு சொல்வதில்லை.மனதில் பட்டு சொன்னோமேயானால் அதன் பலனே தனி. நாம் ஆசார்ய பரம்பரையை பரிபூர்ணமாக பக்தி செலுத்தி ஸத்விஷயங்ககளை கேட்டும் புஸ்தகத்தை படித்தும் நல்ல ஆசார்யர்களிடம் உபதேசம் பெற்று இதை பாராயணம் செய்தால் நமக்கு கண்டிப்பாக பெருமாள் ஆசார்யர்கள் அருள் கிடைக்கும், மனம் அமைதி பெறும்.

எல்லா ஸ்லோகங்களையும் பாராயணம் செய்ய முடியாதவர்கள் ஒரு பத்ததியில்
சில ஸ்லோகமாவது பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்;

ப்ரஸ்தாவ பத்ததி

ஸந்த: ஸ்ரீரங்கப்ருத்வீசச்கரணத்ராணசேகரா:
ஜயந்தி புவனத்ராணபங்கஜரேணவ: //

ஸ்ரீரங்க நாதனுடைய பாதுகைகளை பரம ஸந்தோஷத்துடன் சிரஸில் வைத்துக்கொள்ளுகிற பெரியோர்களுடைய திருவடித்தூள் எல்லா லோகத்தையும் காப்பாற்றுகின்றது. அப்பேற்ப்பட்ட பெரியோர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். (நம்மாழ்வாரை போற்றுகிறவர்கள் தாங்களும் நல்ல கதி பெற்று மற்றவர்களும் கடை தேற வழி செய்கிறார்கள் )

பரதாய பரம் நமோஸ்து தஸ்மை ப்ரதமோதாஹரணாய பக்தி பாஜாம்
யதுபஜ்ஞமசேஷத: ப்ருதிவ்யாம் ப்ரதிதோ ராகவபாதுகாப்ரபாவ: //

ஸ்ரீ பரதாழ்வாரல் ஸ்ரீ ராமருடைய பாதுகைக்கு எவ்வளவு சக்தி, பக்தி இருக்கிறது என்று உலகங்களுக்கெல்லாம் தெரியவந்தது. ஆகையால் மஹா பக்தரான ஸ்ரீ பரதாழ்வானை ஸேவிக்கிறேன்.

தத்தே முகுந்தபாதுகயோர் நிவேசாத் வல்மீகஸம்பவகிரா ஸமதாம் மமோக்தி:
கங்காப்ரவாஹபதிதஸ்ய கியாநிவ ஸ்யாத் ரத்யோதகஸ்ய யமுநாஸலிலாத் விசேஷ://

கங்கையில் மழை பெய்து வீதி ஜலமும் விழுகிறது. யமுனா ஜலமும் விழுகிறது. நாம் இரண்டையும் ஒரே ஜலம் -கங்கா ஜலம் என்று தான் அழைக்கிறோம். அதுபோல நான் தாழ்ந்திருந்தாலும் என் வார்த்தை பாதுகா ஸ்தோத்ரமாயிருப்பதால் ஸ்ரீ வால்மீகி செய்த ஸ்ரீமத் ராமாயணம் போல பெருமை அடையும்- அதாவது இதை பாராயணம் செய்பவர்கள் சகல புருஷார்த்தங்களையும் அடைவர்ர்கள் என்பது நிச்சியம்.

யதாதாரம் விச்வம் கதிரபி ச யஸ்தஸ்ய பரமா தமப்யேகா தத்ஸே திசஸி கதிம்
தஸ்ய ருசிராம் /
கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹரதுர்போதமஹிமா கவீநாம் க்ஷூத்ராணாம்
த்வமஸி மணிபாது ஸ்துதிபதம் //

எல்லா உலகத்தையும் பெருமாள் தாங்குகிறார். அப்பேற்ப்பட்ட பெருமாளையே நீ தாங்குகிறாய். எல்லா ஜீவர்களும் பெருமாளிடம் தான் போக வேண்டும். ஆனால் பெருமாள் போகவேண்டும் என்றால் உன்னை சாற்றிக்கொண்டுதான் செல்லவேண்டும். அதனால் உனக்கு ஏற்றம்.

யதேஷஸ்தௌமி த்வாம் த்ரியுகசரணத்ராயிணி ததோ
மஹிம்.ந: கா ஹாநிஸ்தவ மம து ஸம்பந்நிரவதி /
சு.நா லீடா காமம் பவது ஸுரஸிந்துர் பகவதீ
ததேஷா கிம்பூதா ஸ து ஸபதி ஸந்தாபரஹித: //

ஏ! பாதுகையே! நாய் கங்கையில் தண்னீர் குடித்தால் அதற்கு சுகம் உண்டாகிறது. அதனால் கங்கைக்கு எந்த குறைவும் இல்லை. அதுபோல நான் உன்னை ஸ்தோத்ரம் செய்தால் உனக்கு ஒன்றும் குறை கிடையாது. ஆனால் எனக்கு இஹபர சுகம் உண்டாகிறது.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!