ஏன் இல்லை நிறைய இருக்கின்றன
2.கொஞ்சம் விவரமாக கூறுங்கள்?
விஷ்ணு காயத்திரியில் நாராயண சப்தமே முன்னிலை பெற்று உளளது
பரப்ரம்மம் பரதத்துவம் பரஞ்சோதி பரமாத்மா என்னும் நான்கு சொற்களும் ஈசுவரனை குறிக்கும் என்னும் போது நாராயண பதத்தை இட்டே நாராயணானுவாகம் சொல்கிறது
உலக முடிவில் பிரமனும் சிவனும் சுவர்க்கம் பூமி முதலிய பூதங்களும் அவைகளால் உண்டாகிய பெளதிகங்களும் இல்லை நாராயணன் ஒருவன் மட்டுமே இருந்தான் என்று மஹோபநிஷத்து நாராயண சப்தத்தை சிறபிக்கிறது
கண்ணும் காணப்படும் பொருளும் செவியும் கேட்க படும் பொருளும் திக்குகளும் மூலை திக்குகளும் நாராயண எனும் சப்ததத்தை ஸூபாலோபநிஷத்து உறுதியாக கூறுகிறது
எவனுக்கு ஜீவாத்மா பூமி முதலிய சரீரமாக இருக்கிறதோ எவன் ஆத்மாக்களுக்கு அந்தர்யாமியோ அந்த வஸ்துவிடம் அவற்றின் குற்றங்கள் அண்டாமல் உள்ளதோ நிகரற்ற பலனை தர வல்லது அதுவே நாராயண என்று ப்ருஹதாரண்யம் சிறபிக்கிறது
3.ரிஷிகள் நாமத்தை விரும்பினர் என்பதற்கு சான்றுகள் உள்ளதா?
யதா ஸர்வேஷ தேவேஷ நாஸ்தி நாராயணாத் பர!
ததா ஸர்வேஷ மந்ரேஷ நாஸ்தி சாஷ்டாக்ஷரத்பர!
பொருள்
எங்ஙனம் எல்லா தேவர்களுள்ளும் நாராயணனை காட்டிலும் மேலான தெய்வம் இல்லையோ அது போலவே சகல மந்திரங்களிலும் அவனுடைய நாமத்தை காட்டிலும் உயர்வானது ஒன்று இல்லை
4.நாமம் எவருக்கு புகலிடம்?
ஸர்வ வேதாந்த ஸாரரார்த்தஸ் ஸம்ஸாரார்ணவதாரக
கதிரஷ் டாக்ஷரோ த்ரூணாம் அபுநர்ப்பவகாங்க்ஷிணாம்
பொருள்
அனைத்து வேதங்களுடைய சாரமான அர்த்தத்தை பிரதிபலிப்பதும் சம்சாரமான கடலை கடக்க செய்யும் ஹரியின் நாமமானது பிறவாமல் இருக்கும் படியான முமூட்சுகளான மனிதர்களுக்கு புகலிடம்
5. ஹரி நாமத்தின் பெருமை என்ன?
ஹரி நாமத்திற்கு உரியவன் அருகில் இல்லாமல் தொலைவில் இருப்பினும் அவனுடைய திரு நாமத்தை சொல்பவருக்கு அருகில் இருந்து அனைத்தையும் நிறைவேற்றும்
6.இதற்கு சான்று உள்ளதா?
த்ரெளபதியே இதற்கு சான்று அவளை ஹரி ரட்சிக்க வில்லை கோவிந்த நாமமே ரட்சித்தது
7.பரிகாசம் செய்தாலும் பலன் உண்டா?
தெரியாமல் விஷம் அருந்தி விட்டேன் என்றால் விஷத்தின் தன்மை மாறுமா அது போலவே தெரிந்தோ தெரியாமலோ பரிகாரமாகவோ தன் நிலை மறந்தோ வேறு பொருளை எண்ணியோ நாமத்தை சொன்னாலும் பலன் நிச்சயமாக உண்டு
8. சரம மார்க்கத்தை கைகொள்வர் இது எவ்வகையில் உபகாரம்?
சரணாகதியை மேற்கொண்டவருக்கு ஹரி நாம மந்திரமே ஈஸ்வரனே உபாயம் உபேயம் என்ற ஞானத்தை தருகிறது அவனுக்கு நாம் அடிமை என்னும் ஞானத்தையும் அளிக்கிறது எனக்கு தேனும் பாலும் அமுதுமாய திருமால் திருநாமம் என்கிறபடியே போக்கியமாகவும் உள்ளது