சரணாகதியால் நமக்கு ஏற்படும் பலம் என்ன?

சரணாகதி வைபவம்

சரணாகதியால் நாம் க்ருதக்ருத்யர் ஆகிறோம். அதாவது, மோக்ஷத்திற்காக நாம் செய்யவேண்டிய கார்யம் செய்தாய்விட்டது. நமக்கு மோக்ஷம் நிச்சயம்.

நம்முடைய கர்மம் எப்படி என்றால், ப்ரஹ்ம கல்பத்தில் 10,000 கல்பம் ஜன்மம் எடுத்து நம்முடைய கர்மபலத்தை அனுபவித்தாலும் முடிவுபெறாத கர்மத்தை ஒருவன் அரை க்ஷணத்தில் செய்துவிடுகிறான். அப்படியானால் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு கர்மா? ஒரு நாளில் எவ்வளவு? ஒரு வருஷத்தில் எவ்வளவு? ஒரு ஆயுஸ்ஸில் எவ்வளவு? இப்படி எத்தனை ஜன்மம் நாம் எடுத்திருக்கிறோம்? இக் கர்மத்துக்கு ஸஞ்சித கர்மம் என்று பெயர்.

இவைகளுக்குப் பெருமாள் பேரேடு போட்டு வைத்திருக்கிறார். இதில் ஒவ்வொரு கர்மமாக எடுத்து நமக்குப் பெருமாள் பலம் கொடுக்கிறார். அப்படிப் பலம் கொடுப்பதற்காக எடுத்திருக்கிற கர்மத்துக்கு ஐந்து ஜன்மம் அனுபவிக்கவேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்படி எடுத்த கர்மத்துக்கு ப்ராரப்த கர்மம் என்று பெயர்.

இப்படி ப்ராரப்த கர்மத்தில் சில பாகம் (அதாவது 3 ஜன்மம்) அனுபவித்தாய்விட்டது. 4வது ஜன்மம் இப்போது நடக்கிறது. இதற்குப் பெயர் அப்யுபகத ப்ராரப்தம்.

இன்னும் வரவேண்டியதான 5வது ஜன்மத்தைக் கொடுக்கிற பாகத்துக்கு அநப்யுபகத ப்ராரப்தம் என்று பெயர்.
இனி ஜன்மம் எடுக்கிற காலங்களில் செய்கிற கர்மத்துக்கு ஆகாமி கர்மம் என்று பெயர்.

நம்முடைய சரணாகதியால் எது தொலைகிறது?
ஸஞ்சித பாபம் பூராவும் போய்விடுகிறது.
ப்ராரப்தத்தில் அநப்யுபகதம் பூராவும் போய்விடுகிறது.

அப்யுபகதம் மட்டும் நடக்கிறது. இது நம்முடைய சரணாகதியால் போகவில்லை. ஏன்?

நம்முடைய ப்ரார்த்தனையில் “ஏதத் தேஹாவஸாநே மாம்" என்று கேழ்க்கிறோம். ததிபாண்டன் உடனே மோக்ஷம் வேண்டுமென்று கேட்டான்; உடனே மோக்ஷம் போய்விட்டான்.

இனி ஆகாமி பாபம் என்ன ஆகிறது என்று பார்ப்போம். அதாவது சரணாகதிக்குப் பிற்பாடு நாம் இப்போது இருக்கிறோமே, இந்தக் காலத்தில் நாம் செய்கிற கர்மங்களுக்குப் பலம் என்ன?
நாம் செய்கிற கர்மம் இரண்டு விதம் - புத்தி பூர்வமானது, தன்னறியாமல் செய்வது.

நம்மைறியாமல் செய்கிற கர்மம் நம்மை ஒட்டாது. புத்திபூர்வமான கர்மமோ என்றால், நாம் பரமபதத்தில் போய்ப் பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்யவேணுமென்று ஆசைப்பட்டே சரணாகதி செய்திருக்கிறபடியால் அந்தக் கைங்கர்யத்தை இங்கே விடமாட்டோம்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!