74 simhasanadipatis appointed by Sri Ramanuja
ஸ்வாமி எம்பெருமானார் நியமித்த 74 சிம்ஹாஸனாதிபதிகள் !!
சதுஸ்ஸப்ததி ஸிம்ஹாஸநாதிபதிகள்
ஓராண் வழியாக வந்த குருபரம்பரையின் நடுநாயகரத்னமான ஸ்ரீஉடையவர் (ராமாநுஜர்) ஒரு ஸமயம் வீரநாராயணபுரம் எழுந்தருளினார். அங்குள்ள பெரிய ஏரியின் 74 மதகுகள் வழியாகப் பாயும் நீரானது, சுற்றியுள்ள அத்தனை ப்ரதேசங்களையும் வளங்கொழிக்கச் செய்வதை பார்த்தார். “நம் ஸம்ப்ரதாயமும் இதே போல் செழித்தோங்கிப் பெருகி ஜனங்களை வாழ்விக்க வேணும்” என்று திருவுள்ளம் பற்றினார். ஆயிரக்கணக்கான தம் சிஷ்யர்களிலே 74 பேரைத் தேர்ந்தெடுத்தருளி “பாருலகில் ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும்” என்று உலகோர்க்குப் பஞ்சஸம்ஸ்கார பூர்வகமாக ஹிதத்தை உபதேசிக்கும்படி நியமித்தருளினார். இவர்களே சதுஸ்ஸப்ததி ஸிம்ஹாஸநாதிபதிகள் எனப்படுவர். இந்த ஆசார்யர்களின் திருவம்சத்தவர்களே “ஆசார்ய புருஷர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர்.
1. சொட்டை நம்பி/ஆளவந்தாரின் வம்சத்தவர்.
2. புண்டரீகர்/பெரிய நம்பி வம்சத்தினை சேர்ந்தவர்.
3. தெற்காழ்வான்/திருக்கோட்டியூர் நம்பி வம்சத்தவர்.
4. சுந்தரதோளுடையான்/திருமலையாண்டான் வம்சத்தவர்.
5. ராமானுஜம்/பெரிய திருமலை நம்பி வம்சத்தவர்.
6. கூரத்தாழ்வான்/பட்டர்/ஸ்ரீராம பிள்ளை
7. முதலியாண்டான்/கந்தாடை ஆண்டான்
8. நடுவில் ஆழ்வான்
9. கோமாடத்து ஆழ்வான்
10. திருக்கோவலூர் ஆழ்வான்
11. திருமோகூர் ஆழ்வான்
12. பிள்ளைபிள்ளை ஆழ்வான்
13. நடாதூர் ஆழ்வான்
14. எங்களாழ்வான்
15. அனந்தாழ்வான்
16. மிளகாழ்வான்
17. நெய்யுந்தாழ்வான்
18. ஸேத்தலூர் சிறியாழ்வான்
19. வேதாந்தியாழ்வான்
20. கோயில் ஆழ்வான்
21. உக்கள் ஆழ்வான்
22. அரண புரத்து ஆழ்வான்
23. எம்பார்
24. கிடாம்பி ஆச்சான்
25. கனியனூர் சிறியாச்சான்
26. ஈச்சம்பாடி ஆச்சான்
27. கொங்கில் ஆச்சான்
28. ஈச்சம்பாடி ஜீயர்
29. திருமலை நல்லாண்
30. சட்டாம்பள்ளி ஜீயர்
31. திருவெள்ளறை ஜீயர்
32. ஆட்கொண்டவில்லி ஜீயர்
33. திருநகரி பிள்ளான்
34. காரான்சி சோமாஜியார்
35. அலங்கார வேங்கடவர்
36. நம்பி கருந்தேவர்
37. சிறுப்புள்ளி தேவராஜ பட்டர்
38. பிள்ளி உறந்தை உடையார்
39. திருக்குறுக்கைபிரான் பிள்ளான்
40. பெரிய கோவில் வள்ளலார்
41. திருக்கண்ணபுரத்து அரையர்
42. ஆசூரிப் பெருமாள்
43. முனிப் பெருமாள்
44. அம்மாங்கிப் பெருமாள்
45. மாருதிப் பெரியாண்டான்
46. மற்றொன்றில்லா மாருதி சிறியாண்டான்
47. சோமாசியாண்டான்
48. ஜீயர் ஆண்டான்
49. ஈஸ்வர் ஆண்டான்
50. ஈயுண்ணி பிள்ளை ஆண்டான்
51. பெரியாண்டான்
52. சிறியாண்டான்
53. குறிஞ்சியூர் சிறியாண்டான்
54. அம்மாங்கியாண்டான்
55. ஆளவந்தார் ஆண்டான்
56. அருளாளப்பெருமாள் எம்பெருமானார்
57. தொண்டனூர் நம்பி
58. மருதூர் நம்பி
59. மழுவூர் நம்பி
60. திருக்குறுங்குடி நம்பி
61. குரவை நம்பி
62. முடும்பை நம்பி
63. வடுக நம்பி
64. வாங்கீப்புரத்து நம்பி
65. ஸ்ரீ பராங்குச நம்பி
66. அம்மாங்கி அம்மாள்
67. பருத்தி கொள்ளை அம்மாள்
68. உக்காலம் அம்மாள்
69. சொட்டை அம்மாள்
70. முடும்பை அம்மாள்
71. கொமாண்டூர்ப்பிள்ளை
72. கொமாண்டூர் இளையவில்லி
73. கிடாம்பி பெருமாள்
74. காட்டுப்பிள்ளான்.
ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தை நிர்வகிக்க எழுபத்து நான்கு ஸிம்ஹாஸநாதிபதிகளை நியமித்தருளினார். அவர்கள் அனைவரின் விக்ரஹங்களையும் ஸ்ரீபெரும்பூதூரில் ஒரே சந்நிதியில் சேவிக்கலாம்.