நாராயணா என்றால் என்ன அர்த்தம்?
விஷ்ணு, பெருமாள் என்று பல பெயர்களை கொண்டவர் தான் நாராயணன். இவர் பல அவதாரம் எடுத்துள்ளார். ஒவ்வொரு முறை அவதாரம் எடுக்கும் போதும் மக்களுக்கு ஒரு கருத்தை எடுத்துரைக்கின்றார் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
கோவிந்தன் என்று அழைக்கும் நாராயணனின் பெயரின் அர்த்தம் தான் என்ன?
அவரின் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணம் உண்டு. அதுபோல இந்த பெயருக்கும் இரு காரணம் உள்ளது. அதை தெரிந்து கொள்வோம்.
நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு. பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாக தான்.
நாரம் என்ற சொல்லுக்கு பிரம்ம ஞானம் என்ற பொருளும் உண்டு. இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது. நாராயணன் என்பதை நாரம் + அயணன் என பிரிக்கலாம். நாரம் என்றால் தீர்த்தம். அயணன் என்றால் படுக்கை உடையவன்.
பாற்கடலாகிய தீர்த்தத்தில் பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்குப் பொருள்.
நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர், நாரதர். நாராயண! நாராயண! என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார். நாரதர் தோன்றுவதற்கு முன், இந்த உலகில் தண்ணீர் என்பதே குறைவாக இருந்ததாம். இவரது பிறப்புக்கு பின் தான் தண்ணீர் அதிகரித்தது.
நாராயணின் நாமத்தை துதிக்க நன்மைகள் வந்து சேரும். கோவிந்தன் என்று சொல்ல கொள்ளை இன்பம் ஓடி வரும். நாராயணா! ஸ்ரீ ஹரி நாராயணா!