கஷ்டம் இல்லாத வாழ்க்கை ஏது ?

சந்தோஷம் வந்தால் ஏற்றுக் கொள்ளும் மனம் கஷ்டம் வந்தால் ஏனோ ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

உலகில் கஷ்டம் இல்லாத மனிதர்கள் யாருமே இல்லை ஏதோ ஒரு வகையில் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் அதற்காக மனம் தளராமல் பகவானின் திவ்ய திருவடிகளை பற்றி கொள்ள வேண்டும்.

யாராவது கஷ்டத்தை வரமாக கேட்பார்களா

ஆம்

மஹா பாரதத்தில் கஷ்டத்தை வரமாக கேட்டாள் குந்தி தேவி 

அதன் விளைவு ஸர்வ லோக ரக்ஷகனான கண்ணனே கடைசி வரை அவர்கள் கூடவே இருந்தார்.

ஏனென்றால் தர்மம் அவர்கள் பக்கம் இருந்தது.

கலியுகத்தில் கொஞ்சம் கஷ்டம் வந்தால் கூட பல தெய்வங்களை நிந்திக்கின்றனர்.

நீங்கள் செய்த கர்மா தான் நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.

இதில் பகவானுக்கு என்ன சம்பந்தம்

இதுதான் மனிதனுக்கு ஏற்படும் அஞ்ஞானம்

எல்லாம் துறந்த ஞானிகள் இதை எளிதில் புரிந்து கொண்டு விடுகின்றனர்.

சரி சின்ன உதாரணம் 

பாலுக்கு கஷ்டம் கொடுத்தால் தயிர் ஆகிறது.

தயிருக்கு கஷ்டம் கொடுத்தால் வெண்ணெய் ஆகிறது.

வெண்ணெயை கொடுமை செய்தால் நெய் ஆகிறது.

பாலை விட தயிர் உயர்ந்தது, 
      
தயிரை விட வெண்ணெய் உயர்ந்தது,    
      
வெண்ணெயை விட நெய் உயர்ந்தது.

இதனுடைய அர்த்தம் என்னவென்றால் - அடிக்கடி கஷ்டம் - சங்கடங்கள் வந்தாலும் கூட எந்த மனிதனுடைய நிறம் மாறுவதில்லையோ, சமூகத்தில் அவருடைய மதிப்பு அதிகரிக்கிறது.

பால் ஒரு நாளைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், பின் அது கெட்டுப் போய் விடும்.

பாலில் ஒரு சொட்டு மோர் விடும் போது அது தயிர் ஆகிறது. 

அது இன்னும் 2 நாட்களுக்கு இருக்கும்.

தயிரை கடையும் போது வெண்ணெய் வருகிறது. அது இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும்.

வெண்ணெயை கொதிக்க வைத்தால் நெய் ஆகிறது. அது ஒரு போதும் வீணாவது இல்லை.

ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள் ஒரு போதும் கெட்டுப் போகாத நெய் ஒளிந்து இருக்கிறது.

இதேபோல் தான் மனித வாழ்க்கையும்

உங்களை உருக்க உருக்க தான் நீங்களும் ஒப்பில்லா மனிதனாவீர்கள்.

எதுவும் கடந்து போகும் என்று நினையுங்கள்.

எதையும் நேர்மமையாக நினையுங்கள்.

அதாவது எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய பிரபலங்கள் எல்லாம் ஒரு காலத்தில் சாப்பாட்டிற்கே பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள்.

வாழ்வில் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது.

உங்களுக்கான கடமை முடியும் வரை
உங்களால் உலகை விட்டு செல்லவும் முடியாது.

உங்கள் மனம் கூட அளவற்ற சக்திகளால் நிரம்பியுள்ளது

அதில் கொஞ்சம் நேர்மையான விதைத்து விடுங்கள்.

தனக்குத் தானே சிந்தனை செய்யுங்கள்..

தன்னுடைய வாழ்க்கையை இன்னும் சரி பாருங்கள்.

நேரத்தை வீணடிக்காதீர்கள்.

அதற்கு எளிய வழி!
          
குருவின் திருவடிகளைப் பற்றிக் கொண்டால், அவரிடம் ஞானம் பெறுவது எப்படி என்பதை அவரே முடிவு செய்வார்.

பின் பாருங்கள்.

நீங்கள் ஒருபொழுதும் தோல்வியே காணாத பசுமையான "மனிதனாக இருப்பீர்கள்."

அப்படியே நீங்கள் தோல்வியை கண்டால் அதுவே உங்களின் வெற்றிக்கு முதல் படி.

ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!