திருவரங்கம் : பிள்ளைலோகாச்சாரியார் உறங்க ஆரம்பித்த சில மணித்துளிகளில் திடீரென அறைக்கதவை யாரோ தட்டினார்கள்.
அறைக்கதவைத் திறக்க, அவருடைய சீடர் விளாஞ்சோலை தாசர் நின்றிருந்தார். “ மன்னிக்க வேணும் ஸ்வாமி ! தங்களைக் காண ஒரு வயோதிகர் காத்திருக்கிறார்.
நானும் பலமுறை சொல்லிப்பார்த்துவிட்டேன். இந்த நேரத்தில் வேண்டாம் என்று, அவர் இப்பொழுதே பார்க்கவேண்டும் ஒன்று அடம்பிடிக்கிறார்.” பிள்ளைலோகாச்சாரியார் மடத்தின் வாயிலை நோக்கி நடந்தவர், அப்படியே மேசிலிர்த்துபோய் நின்றார்! நரைத்த தாடி மீசையுடன், மடத்தின் நுழைவாயிற்படியில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தார், அந்தப் பெரியவர்! பார்வையில் தீட்சன்யம்! “ வாரும் பிள்ளைலோகாச்சாரியார் ! நீர் பதவியேற்றதற்கு வாழ்த்துச் சொல்ல வந்தேன்...! சிம்ம கர்ஜனையாக ஒலித்தது அவர் குரல் !
நீர் யாரென்று அடியேன் அறியாலாமா ?
“ பிள்ளை நீ என்றால் நான் உனது தந்தை ஸ்தானம் என்று வைத்துக்கொள்ளேன்! எத்தனையோ ஆசான்கள் உனக்கு முன்பாக இருந்திருக்கிறார்கள்.
உனக்குப் பின்னும் பலர் இருக்கப்போகின்றனர்.
இருப்பினும் யாரும் செய்யாத தீரச்செயலை நீ செய்யப்போகிறாய். அதனாலேயே உன்னைக்கான வந்திருக்கிறேன் பிள்ளாய்.
உமது இருப்பிடம் ?
“ சிங்கவேள்குன்றம்! உன்னை வாழ்த்திவிட்டு நான் உடனே போகவேண்டும்...எனக்கு இன்று பிறந்ததினம்! என் மணைவி எனக்காக சாப்பிடாமல் காத்திருப்பாள்.”
பிள்ளைலோகாச்சாரியார் திகைத்தார். இந்தத் தள்ளாத வயதில் இதனை தூரம் பயணிக்க முடியுமா! அதுவும் இந்த இரவு வேளையில் கிளம்புகிறேன் என்கிறாரே !
ஸ்வாமி! தங்களது திருநாமம்?
நரஹரி என்று என்னை அழைப்பர்.
ஸ்வாமி தாங்கள் என்னை ஆசிர்வதிக்கவேண்டும்.
பிள்ளைலோகாச்சாரியார் அவரது திருவடிகளில் பணிந்தார்.
ஸ்வாமி உள்ளே வாருங்கள். வாயிற்படியில் என் உட்காரவேண்டும்? அவரைப் பார்த்து இடி இடி எனச் சிரித்தார் பெரியவர்.
“ வாயிற்படிதான் எனக்கு வசதி. “ நான் உடனே எழுந்து செல்வதற்கு வசதியாக, எங்கு சென்றாலும் வாயிற்படியில்தான் அமருவேன்.
பிள்ளாய்! இந்த எளியோன் உனக்குத் தரும் சிறு அன்பளிப்பு. “
தன் கையில் இருந்த பேழையை அவரிடம் கொடுத்தார் நரஹரி.
இது எதற்கு சுவாமி? தங்கள் ஆசிகள் இருந்தாலே போதும், பிள்ளைலோகாச்சாரியார் சொன்னார். நரஹரி மீண்டும் இடியெனச் சிரித்தார்.
“ பிள்ளாய், உன்னை நம்பித்தானே திருவரங்கனே இருக்கிறான்.
உமக்கு ஆசிகள் தேவையில்லை. நான் தருவதை வாங்கிக்கொள். உனக்கு இது மிகவும் உதவப்போகிறது. “
நரஹரி கொடுத்த அந்தப் பேழையை வாங்கிக்கொண்டார் பிள்ளைலோகாச்சாரியார்.
உள்ளே ஒரு சுவடியும், எழுத்தாணியும் இருந்தது. “இதை பதிதமாக வைத்துக்கொள் பிள்ளாய்! இதுதான் வருங்காலத்தில் திருவரங்கத்தையும் அதில் கண்வளரும் செல்வனையும் காக்கப் போகின்றது.” பித்துப் பிடித்தவரைப் போல மீண்டும் கலகலவென்று நகைப்பொலி அவரிடமிருந்து எழுந்தது.
“ பிள்ளாய்! இதில் ஒன்றும் எழுதப்படவில்லை! இது உமது உபயோகத்திற்குத்தான்! இந்த சுவடி அபூர்வ பனையோலையால் செய்யப்பட்டது .
எனது மனைவியின் உறவினர்கள் செஞ்சு மலைப் பகுதியில் வசிக்கிறார்கள்.
அவர்களால் எனக்கு கொடுக்கப்பட்ட ஓலைச்சுவடி இது.
காலத்தால் அழியாதது. இதை உபயோகிக்கும் காலம் வரும். சரி, நான் ஊர்போய் சேரவேண்டும்.. கிளம்புகிறேன். “
ஸ்வாமி சற்றுப் பொறுங்கள், சிறிது பாலாவது அருந்திவிட்டுச் செல்லுங்கள்.
அப்படியா சொல்கிறாய்! சரி, பச்சைக்கற்பூரத்தை பொடிசெய்து போடச்சொல்.
பச்சைக்கற்பூர வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும்”
தனது தலைமுடியை அப்படியும் இப்படியும் அசைத்து சிம்மம் போல் சிலிர்ப்பினார் நரஹரி. விளஞ்சொலையருக்கு அப்பெரியவரின் செயல் வியப்பாக இருந்தது.
அக்காரகனி பாலை அருந்திய நரஹரி, “ நான் கிளம்புகிறேன் “ என்று கூறி, திரும்பிப் பார்த்தால் நடந்து சென்று இருளில் மறைந்தார்.
சுவாமி பித்துப் பிடித்தவர்போல் நடந்துகொள்கிறாரே! சீடர் கேட்க, “ சிலரின் மேதாவித்தனம் பித்தாக வெளிப்படும், அது நமக்குத் புரியாது.” பிள்ளைலோகாச்சாரியார் விளக்கினார்.
அந்தப் பெரியவர் யார்? அவர் சென்றுவிட்ட பிறகும் மடம் முழுவதும் பச்சைக்கற்பூர வாசம் வீசிக்கொண்டிருக்கிறதே !
மீண்டும் தன் அறைக்குச்சென்று பிள்ளைலோகாச்சாரியார் படுத்துக்கொண்டார்.
சடாரென்று அடுத்த கணமே எழுந்து அமர்ந்துவிட்டார். அந்தப் பெரியவர் இன்று தமக்குப் பிறந்தநாள் என்று சொன்னாரே ! பிள்ளையின் உடல் பரவசத்தில் துடித்தது. “ அன்று நரசிம்ம ஜெயந்தி “ .எல்லாம் புரிந்தது !!!
ஆஹா வந்தது ஷாஷாத் நரஸிம்மரே
ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்.