மரத்திலே முதலில் பூ பூக்கும். அது காயான பின் பழமாக பழுக்கிறது. பூவாக இருக்கும்போது மணக்கிறது . பழமானதும் ருசிக்கிறது ..ரஸமாக. பழமானது இந்த இனிப்பான ருசி வருவதற்கு முன் எப்படியிருந்தது ? பூக்கிறது , பிஞ்சுக் காய் துவர்க்கம் ,, காயானதும் சில புளிப்பாகவும், பழமானவுடன் ரஸமாகி மதுரமாக இருக்கிறது. பழத்தில் மதுரம் முழுவதுமாக நிரம்பியவுடன் கீழே விழுந்து விடுகிறது.
அது போல் நம் உள்ளத்திலும் மதுரம் நிரம்பி விட்டால் எல்லா பற்றும் தானாக போய்விடும் . நிதர்சனம் ( புளிப்பு ) இருக்கும் வரை மற்றும் இருக்கும். காய்க்கும் பிஞ்சுக்கும் இடையில் கிள்ளினால் காம்பில் ஜலம் வரும்.. ஏன் ? காய்க்கும் மரத்தை விட்டுப் பிரிய மனமில்லை. மரத்திற்க்கும் காயை விட மனமில்லை.
ஆனால் நிறைந்த மதுரமாகி விட்டால் தானாகவே பற்று போய்விடும். பழமும் பற்று இன்று விழுந்து விடும். அப்போது மரமும் பற்று விட்டு விடுகிறது. பழமும் வருந்தாமல் மரத்தை பிரிகிறது படிப்படியாக வளர்ந்து மதுரமாக விட்ட ஒவ்வொருவரும் இப்படி சம்சார விருட்க்ஷத்திலிருந்து விடுபடுவர். பழமாவதற்குமுன் ஆரம்ப நிலையில் புளிப்பும் துவர்ப்பும் எப்படி அவசியமோ அப்படியே நாம் வளர வேகம், துடிப்பு போன்றவை அவசியமாகிறது. இவற்றிலிருந்து நாம் ஆரம்ப நிலையில் விடுபட முடியாது.இவை ஏன் வந்தன, எதற்காக வந்தது என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
கோபம் வந்ததே, ஆசைகள் வந்ததே இவற்றால் ஆகப்போவது என்ன ? இவற்றால் பிரயோஜனம் உண்டா ? இவை அவசியமாக வருவதா அல்லது அனாவசியமாக வருகிறதா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் அவை நம்மை ஏமாற்றிவிடும்.
புளிப்பு இருக்க வேண்டிய சமயத்தில் புளிப்பு இருக்க வேண்டும். துவர்ப்பு இருக்க வேண்டிய சமயத்தில் துவர்ப்பு இருக்க வேண்டும். ஆனால் அதே நிலையில் இல்லாமல் மிஞ்சாது படிப்படியாக பழமாவதற்கு முன் போல நாமும் மாதுர்யமான அன்பையும் சாந்தத்தையும் நினைத்துக் கொண்டே இருந்தால் நமக்கும் மோக்ஷம் என்கிற மதுர நிலை வந்துவிடும்