மூலவர் : விஜயாஸனர் ( பரமபத நாதன் )
உற்சவர் : எம்மடர் கடிவான்
தாயார் : வரகுண வல்லி,
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், தேவபுஷ்கரணி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வரகுணமங்கை
ஊர் : நத்தம்
மாவட்டம் : தூத்துக்குடி
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாசனம் : நம்மாழ்வார்
புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை யாள்வாய் எனக்கருளி நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.
- நம்மாழ்வார்
திருவிழா
வைகுண்ட ஏகாதசி.
தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 92 வது திவ்ய தேசம்.
நவதிருப்பதியில் இது 2 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது சந்திரன் ஸ்தலமாகும்.
பொது தகவல்
இங்கு பெருமாள் விஜயகோடி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
3. செவ்வாய் : திருக்கோளுர்
4. புதன் : திருப்புளியங்குடி
5. குரு : ஆழ்வார்திருநகரி
6. சுக்ரன் : தென்திருப்பேரை
7. சனி : பெருங்குளம்
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலைவில்லிமங்களம்)
9. கேது : 2. இரட்டைத் திருப்பதி
தல வரலாறு
அமைவிடம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி, திருச்செந்தூர்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம், மதுரை.
தங்கும் வசதி : திருநெல்வேலி
தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 92 வது திவ்ய தேசம்.
நவதிருப்பதியில் இது 2 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது சந்திரன் ஸ்தலமாகும்.
பொது தகவல்
இங்கு பெருமாள் விஜயகோடி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி
1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
3. செவ்வாய் : திருக்கோளுர்
4. புதன் : திருப்புளியங்குடி
5. குரு : ஆழ்வார்திருநகரி
6. சுக்ரன் : தென்திருப்பேரை
7. சனி : பெருங்குளம்
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலைவில்லிமங்களம்)
9. கேது : 2. இரட்டைத் திருப்பதி
சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல் படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அதைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம்.
தல வரலாறு
நத்தம் என்று சொன்னால்தான் பலருக்கும் புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்த்தனைப்படி விஜயசனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம்.
நெல்லை, திருச்செந்ததூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம், எனினும் வாடகைக் கார். அல்லது வேன் எடுத்து கொள்வது நலம். ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து 13 கி.மீ., திருநெல்வேலியிலிருந்து 29 கி.மீ.,
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி, திருச்செந்தூர்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம், மதுரை.
தங்கும் வசதி : திருநெல்வேலி
திறக்கும் நேரம் :
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி :
அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில்நத்தம் (வரகுணமங்கை) - 628 601 தூத்துக்குடி மாவட்டம்.
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி :
அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில்நத்தம் (வரகுணமங்கை) - 628 601 தூத்துக்குடி மாவட்டம்.