நெய் தீபம் பலன்கள் | Ghee deepam benefits

திருக்கோவில்களில் தீபம் ஏற்றுவது மிகச்சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் ,அந்தி பொழுதில் நெய் தீபம் ஏற்றுவது அதிக பலனை கொடுக்கும். சிறந்ததாகும். இறைவனின் அருளை விரைவாக பெறுவது நாம் ஏற்றும் தீபங்கள் மூலமாகத்தான்.

மிகக் கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை,இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிராகசிக்கும் தூங்கா விளக்கில் ஊற்றி வந்தால் போதும். இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப் போடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது ஆகும்.

பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதை, விட ஒரு நெய் தீபம் ஏற்றுவது பலமடங்கு சிறந்தது.

லக்ஷ்மிக்கு உகந்தது நெய் தீபம். நெய் தீபம் ஏற்றி வீட்டில் வழிபட லட்சுமி நம் இல்லம் தேடி வருவாள்.

நெய் தீபம் ஏற்றுவதால் பலன்கள்

நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷம் இல்லத்தில் நிலைத்து நிற்க்கும்.

கிரகதோஷங்கள் விலகி சுகம் பெறலாம்.

வருமானம் அதிகரிக்கும்.

நெய் தீபம் ஏற்றும் போது நினைத்தது கைகூடும்.செல்வவிருத்தி உண்டாகும்

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்படும் போதும் உடனடியாக அருகிலுள்ள ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றி வைப்பது அந்த விநாடியே கஷ்டங்கள் குறைவதற்கு மகரிஷிகள் கூறிய ரகசிய பரிகாரமாகும்.

நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷம் இல்லத்தில் நிலைத்து இருக்கும். கிரகதோஷங்கள் விலகி சுகம் பெறலாம். வருமானம் அதிகரிக்கும். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி தினமும் 12 முறை சுற்றி 48 நாட்கள் வழிபட தொழில்,வழக்கு சாதகமாகும். 21 செவ்வாய்க்கிழமை நெய்தீபம் ஏற்றிவர பில்லி சூன்யம் விலகும்.

விளக்கேற்றும் போது சொல்ல வேண்டிய சுலோகம்

கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா |

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா ||


பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி… இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும். நல்லதை செய்யுங்கள் அதை இன்றே செய்யுங்கள்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!