ஒருவர் மரணம் அடைந்த பின் அவருக்கு அடுத்த பதிமூன்று நாட்களில் செய்ய வேண்டிய கர்மா அல்லது நியமங்களை எப்படி செய்ய வேண்டுமென்று சாஸ்திரங்களில் கூறி உள்ளார்கள். அவற்றில் சில சடங்குகள் விஞ்ஞான அடிப்படையில் அமைந்துள்ளவையாகவும் காணப்படுகின்றன.
இந்த உடலின் இயக்க அனுபவத்தில் சர்வம் பிரம்மமயம் என்ற உணர்வு உண்டாவதாக உரைக்கப்படுகிறது.
இந்த உடம்பானது தபோலோகத்தில் வேலை செய்வதற்காக வழங்கப்பட்டது. தபோலோகத்தில் ஒற்றுமையுணர்ச்சியைத் தவிர வேறெதற்கும் இடமில்லையாதலால் சித்தர், ஜீவன் முக்தர் போன்றோர் மட்டுமே இவ்வுடலில் செயல்பட வல்லவர்.
நரம்பியல் கருத்துக்களின்படி, குழந்தை உருவாகும்போது, உடலமைப்பில் முதல் பகுதியாக உருவாவது மூளையில் உள்ள 4வது வென்ட்ரிகள் எனும் பகுதியாகும்.
மரணத்தின் போது மனிதனின் நினைவு இறுதியாக மறைந்து போவதும் இந்தப் பகுதியிலேயாகும் என்று நரம்பியல் நிபுணர் கண்டறிந்து உரைக்கின்றன.
எந்த வாயிலில் உயிர் உடலுள் நுழைந்ததோ, அதே வாயிலிருந்து அது உடலைவிட்டு வெளியேறுகிறது. இக்கருத்தை நோக்கும் போது மூளையின் 4வது வென்ட்ரிகிள்தான் 7வது உடம்பான ஆனந்தமய உடம்போ என்று கருத வாய்ப்புண்டு.
நினைவுணர்ச்சி 4வது வென்ட்ரிகளில் இருந்து மறையும்போது உடலின் எடை அரை - முக்கால் அவுன்ஸ் குறைகிறது என்று கண்டறிந்துள்ளனர். உயிரியல் அறிஞர்கள். இந்த உண்மை நிரூபிக்கப்பட்டு, நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் எடை ஏன் குறைகிறது என்பதற்கான காரணம் இதுவரை புரியாத புதியாகவே இருக்கிறது.
பஞ்சபூத அணுக்களின் சேர்க்கையால் ஆன எலும்பும் தோலும் போ்த்தப்பட்ட இந்த பருவுடம்பை பூதவுடல் என்றும், அன்னவுடல் (அன்னமய கோசம்) என்றும் வழங்குவர்.
இந்த யாக்கை கண்ணுக்குத் தெரியும் பருப்பொருளான பூலோக அணுக்களின் சேர்க்கைகளால் ஆக்கப்பட்டது. எனவே இவ்வுடலை பருவுடம்பு என்பர். இதன் செயல்பாட்டை மட்டுமே யாவராலும் பார்க்க இயலும். இதனை ஸ்தூல உடம்பு என்றும் கூறுவர்.
இந்த முதல் உடம்பான பருவுடம்பை ஒட்டியிருக்கும், கண்ணுக்குப் புலப்படாத 2வது உடல் பிராண உடம்பு (பிராணமய கோசம்) எனப்படும். இதனை ஆவியுடல் என்றும் வழங்குவர். பருவுடலைப் போலவே இருக்கும் இது அன்னவுடலின் நுண்ணிய பாகமாக இருந்த போதிலும், இது பருவுடம்பை விட்டு 2 முதல் 3 செமீ. வரை வெளியே சற்று விரிந்திருக்கும்.
இவ்விரு உடம்புகளையும் ஒரு மிக நுண்ணிய கம்பி போன்றதொரு பொருள் இணைந்திருக்கும்.
ஆனந்தமய கோசம்
மீதம் உள்ளவை நன்னெறி முறைகளை போதிப்பவை, ஒவ்வொருவரும் ஒழுங்கு முறையுடன் வாழ வேண்டும், பக்தி இருக்க வேண்டும் என்பதற்காகவும் எழுதி ஆன்மீக கண்ணோட்டத்துடன் போதிக்கப்பட்டவை. சடங்குகளில் கூறப்பட்டு உள்ள அனைத்திற்க்கும் நம்மிடம் விஞ்ஞானபூர்வ காரணங்கள் கிடையாது என்றாலும், நம்பிக்கையின் அடிப்படையில் அவை காலம் காலமாக பழக்கத்தில் இருந்து கொண்டு உள்ளன என்பது மட்டும் இல்லாமல் நம்பப்பட்டும் வந்துள்ளன.
அவற்றில் பலவும் இந்தக் கால நடைமுறைக்கு ஏற்றவையாக இல்லை என்றாலும் சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள அனைத்து சடங்குகளும், நெறி முறைகளையும் ஏற்க முடியாதவை என்று கூற முடியாது. அந்த காலத்தில் நிலவிய சூழ்நிலைக்கு ஏற்பவே நியதிகள் பலவும் சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளன என்றாலும், அதை இந்தக் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்வதற்கு தடையும் இல்லை.
9) இதற்கும் ஒரு அடிப்படைக் காரணம் உள்ளது. பண்டை காலத்தில் அந்தணர்களின் ஆதிக்கம் நிறைந்தே இருந்தது. அந்தணர்கள் வேறு எந்த தொழிலையும் செய்திருக்கவில்லை. சம்ஸ்கிருத மொழிகளில் மற்றும் கிரந்தம் எனப்படும் மொழிகளில் எழுதி வைக்கப்பட்டு இருந்த வேதங்களையும், சாஸ்திரங்களையுமே கற்றறிந்து இருந்தனர்.
குருமார்களிடம் சேவகம் செய்து குருகுல வாசத்தின் மூலம் அவற்றில் நல்ல தேர்ச்சியும் பெற்று இருந்ததினால் புரோகிதம் செய்து கொண்டு பல நாடுகளிலும் அரசினரின் ஆலோசகர்களாக, ராஜ குருக்களாக இருந்து வந்தார்கள். அவர்கள் மற்றவர்களை விட மேன்மையானவர்களாக கருதப்பட்டு வந்திருந்தார்கள்.
10) இந்த நிலையில் இறந்தவர்களுக்கு செய்யப்பட்ட சடங்குகளும், இறந்தவர்களின் ஆத்மா செல்லும் பாதையும் கூட கருட புராணத்தில் கருடாழ்வாருக்கு மகாவிஷ்ணு போதித்த போதனையின் அடிப்படையில் அமைந்ததுதான். பெரும்பாலான சடங்குகள் அனைத்துமே வாய்மொழி வார்த்தைகளின் மூலமாகவே பரவப்பட்டு பின்னர் எழுதி வைக்கப்பட்டு வந்துள்ளன என்பதையும் நாம் மறக்கக்கூடாது.
ஆகவே அது எந்த சூழ்நிலையில் கூறப்பட்டது என்பதைக் காண வேண்டும்.
அதனால்தான் தற்காலத்தில் பல்வேறு பிரிவினரும் சென்று வணங்கும் மகான்களும், ஆன்மீக குருக்களும் கூட பண்டை காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்திருந்த பல சாஸ்திர சடங்கு முறைகளை இந்த காலத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொடுத்து நமக்கு வழிகாட்டுவதில் இருந்தே பண்டைக் காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்திருந்த அனைத்து சடங்குகளுக்கும் அடிப்படை ஆதாரம் இருந்திருக்க நியாயம் இல்லை, அவை தர்ம நெறி முறைகளை, பக்தி மார்கத்தை வலுப்படுத்த ஏற்படுத்தப்பட்டவை, வேத மற்றும் புராணங்களை நியாயப்படுத்த ஏற்படுத்தப்பட்டவை என்பது விளங்கும்.
11) நாம் கடைபிடிக்கும் சடங்குகளின் அடிப்படை சடங்குகள் சாஸ்திர நியதிகளை மீறாமல் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே இறப்பு சம்மந்தப்பட்ட விஷயங்களில் கூறப்பட்டு உள்ள சடங்கு முறைகளில் மீறக் கூடாத முக்கியமான பொதுவான சடங்கு முறைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் இந்தக் கட்டுரையில் உள்ன. அதே சமயத்தில் இந்தக் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடிய, மாற்றி அமைத்துக் கொள்ளப்பட்டுவரும் நெறிமுறைகளையும் அங்காங்கே எடுத்துக் காட்டி உள்ளன.
12) இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய பொதுவான காரியங்கள் என்னென்ன என்பதை இந்தக் கட்டுரையில் கூறி உள்ளது என்றாலும் ஒருவர் வீட்டில் கர்மாவை செய்ய அழைக்கப்படும் பண்டிதர்கள் அந்த குடும்பத்தினரின் சம்பிரதாயத்துக்கு ஏற்ப என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விவரமாகக் கூறுவார்கள்.
ஏன் என்றால் ஒவ்வொரு கோத்திரங்களுக்கும், ஒவ்வொரு பரம்பரையினர் மற்றும் ஒவ்வொரு இனத்தவருக்கும் (ஜாதியினர்) தனித்தனி சடங்கு முறைகள் மற்றும் மந்திரங்கள் உண்டு என்பதினால் அவற்றை இங்கு தனித்தனியே விவரிக்காமல் பொதுவாக கடைபிடிக்கப்படும் சடங்குகளை மட்டும் விவரித்து உள்ளன.
பூஜை அறையிம் ஏற்றப்பட்டு உள்ள விளக்கு ஒருவர் வீட்டில் மரணம் ஏற்பட்டால் அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த அறையின் கதவை மூடி வைத்திருப்பார்கள்.
13) குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் முதலில் வீட்டில் பூஜை அறை தனியாக இருந்தால் அங்குள்ள விளக்கை அணைத்து விட்டு அறையை மூடி வைத்து விடுவார்கள். தனி அறை இல்லாமல் சுவற்றில் ஆணி அடித்து வைக்கப்பட்டு உள்ள தெய்வங்களுக்கு முன்னால் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு இருந்தால் அதையும் அணைத்து வைத்து விடுவார்கள்.
அடுத்த பன்னிரண்டு நாட்களும் வீட்டில் உள்ள பிற தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அங்கு விளக்கேற்றக் கூடாது, வீட்டில் அடுப்பையும் ஏற்றி சமைக்கலாகாது என்பார்கள். ஆனால் அந்த வீட்டில் தென் திசையில் ஒரு விளக்கை அடுத்த பன்னிரண்டு நாட்களும் அணையாமல் ஏற்றி வைத்து இருப்பார்கள். அந்த விளக்கை ஏன் ஏற்ற வேண்டும்? அதன் தாத்பர்யம் என்ன ??
14) குடும்பத்தில் ஒருவருடைய மரணத்தினால் வீட்டினருக்கு ஏற்பட்டு உள்ள அசௌகர்யம் அதாவது இறந்தவரது இழப்பினால் ஏற்பட்டுள்ள துயர நிலைக் காலம் என்பதை சுருக்கி அசௌகர்யம் என்பார்கள். அதைதான் சாஸ்திர சம்பிராயததில் தீட்டு காலம் என்று கூறி உள்ளார்கள்.
15) மகிழ்ச்சியான நாட்களில் வீட்டில் அனைவரும் நலமாக உள்ள நேரத்தில் குடும்ப மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்காக தெய்வங்களுக்கு முன்னால் ஏற்றப்படும் ஒளி விளக்கின் மூலம் அந்த தெய்வங்களை நமது வீட்டிற்கு வந்து நமக்கு அருள் புரிய வேண்டும் மானசீகமாக வேண்டுகோள் விடுகிறோம். வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து தம்மை ஆராதிக்கும் பக்தர்களுக்கு அருள் செய்ய அந்த ஒளி விளக்காக தெய்வங்களே பல சமயங்களில் நம்மை அறியாமல் வீட்டுக்குள் வந்து போகுமாம்.
ஆனால் மரணம் அடைந்த ஜீவன்கள் உலவும் இடத்தில், அதனுடன் சேர்ந்து வேறு பல ஆத்மாக்களும் உலவும் இடங்களில் தெய்வம் வருவது இல்லை. அதனால்தான் தெய்வங்களுக்கு முன்னால் விளக்கேற்றி வைத்து தெய்வங்களை அழைப்பது தடுக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட புனிதம் வாய்ந்த செயலை துக்க காலத்தில் இறந்தவரது வீட்டில் செய்வதை ஆன்மீக ரீதியில் அனுமதிக்கவில்லை. மன இருள் இல்லாமல் மகிழ்ச்சியோடு செய்ய வேண்டிய தெய்வ காரியம் எதையுமே துயரத்துடன் செய்யக் கூடாது என்பதினால் இந்த நியதி வைக்கப்பட்டு உள்ளது.
16) ஒருவர் வீட்டில் மரணம் நிகழ்ந்ததும் அந்த குடும்பத்தை விட்டு அடுத்த பன்னிரண்டு நாட்களில் வெளியேற உள்ள ஆத்மா துயரத்தோடு அங்கு சுற்றித் திரியும் நேரத்தில், நாம் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஏற்கனவே துயறுற்றுத் திரியும் ஆத்மாவை மேலும் துயரத்தில் ஆழ்த்தலாமா? அந்த ஆத்மாவின் துயரத்தில் அந்த வீட்டினரும் ஆத்மார்த்தமாக பங்கு கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதே தெய்வத்தின் முன்பாக விளக்கை அந்த பன்னிரண்டு நாட்களும் ஏற்றுவது இல்லை. ஏன் எனில் அந்த நேரத்தில் தெய்வங்களும் அங்கு வராதாம்.
17) அதே சமயம் இறந்து போனவர் அறையில் தெற்குப் பகுதியில் ஒரு சின்ன தீப விளக்கை அந்த பனிரண்டு நாட்களும் அணையாதபடி இருக்குமாறு ஏற்றி வைத்திருக்க வேண்டும் என்ற நியதி உள்ளது. அது ஏன்? அடுத்த பன்னிரண்டு நாட்களும் யம தர்மனின் ஆதிக்கத்தில் உள்ள அந்த வீட்டில் யம தர்மதேவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் காரியம் அது.
இறந்தவரது ஆத்மாவின் பாவங்களை மன்னித்து, அந்த ஆத்மாவை அழைத்துச் செல்ல வரும் யமகணங்கள் அவர்களை துன்புறுத்தாமல் நல்ல முறையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக யம தேவனை ஆராதிக்கும் வகையில் அவருக்கு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும் என்பதினால் இதை செய்கிறார்கள்.
யமதேவர் தென் திசையில் உள்ளதினால் தென் திசையில் விளக்கை ஏற்றி வைத்து, அவரை தெய்வமாக வணங்கி அவருக்கு மரியாதை தருகிறார்கள். சில ஊர்களில் யமதேவருக்கு ஆலயமும், சில ஆலயங்களில் யமனுக்கு சன்னதிகளும் உள்ளன என்பதை கவனியுங்கள்.
18) மரணம் அடைந்தவர் அறையில் விளக்கை ஏற்றுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவானது அந்த வீட்டில் சுற்றிக் கொண்டே இருக்கும். அப்போது உயிருடன் இருந்த நாட்களில் தான் வாழ்ந்திருந்த அறையில் அடுத்த பன்னிரண்டு நாட்களும் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கும் ஆத்மாவானது இருட்டில் தட்டுத் தடுமாறிக் கொண்டு இருக்கக் கூடாது,
யம தேவர் உள்ள திசையையும் அறிந்து கொண்டு அடுத்த பன்னிரண்டு நாட்களும் தம்மை நல்ல முறையில் அழைத்துக் கொண்டு சொர்க்கத்தில் விட வேண்டும் என அவரை ஆராதித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காகவும் வைக்கப்படும் விளக்காம் அது.
இவை அனைத்துமே தீர்கமான நம்பிக்கையின் அடிப்படையில் காலம் காலமாக கூறப்பட்டு வந்துள்ளவை. ஆகவே அந்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அவற்றை காரணம் இல்லாமல் நாம் ஒதுக்கி வைக்கக் கூடாது.
சுடுகாட்டுக்கு சென்றுவிட்டு அப்படியே குளிக்காமல் வீட்டுக்கு வந்தால் அங்கு உள்ள விஷக் கிருமிகளை தாமே அறியாமல் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவதினால் அவை வீட்டில் இன்னமும் பரவ வாய்ப்புண்டு. பன்னிரண்டு நாட்கள்வரை அவை அந்த வீட்டில் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே அந்த பன்னிரண்டு நாட்களிலும் சுடுகாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பும் வீட்டினரை தொட்டுத் தழுவுவதின் மூலம் நம் மீதும் அந்தக் கிருமிகள் ஒட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
அவற்றை மனதில் கொண்டுதான் சுத்தத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில் கர்மாவை செய்யும் வீட்டுக்குச் சென்றால் குளிக்காமல் வீட்டுக்குள் நுழையக் கூடாது என்று சாஸ்திர விதி வைக்கப்பட்டு உள்ளது. இதுவே தீட்டு என கூறப்பட்டு அவர்களிடம் இருந்து மற்றவர்கள் தள்ளி இருக்க வேண்டும் என்று கூற காரணமாக அமைந்தது.
25) ஆனால் அந்த கிருமிகள் அனைத்தும் சுத்த சாந்தி (கிரேக்கியம்) செய்யப்படும் பதிமூன்றாவது நாளன்று செய்யப்படும் ஹோம குண்டத்தில் இருந்து வெளிப்படும் ஹோமகுண்டப் புகையை தாங்க முடியாமல் வெளியேறி விடும், அல்லது மரணம் அடைந்து விடும். அதற்குக் காரணம் ஹோமங்களில் பயன்படுத்தப்படும் பல பொருட்களுக்கு சில மருத்துவ குணமும், கிருமிநாசினி தன்மையும் உண்டு.
26) மூன்றாவது ஆன்மீகக் காரணம், அந்த பன்னிரண்டு நாட்களிலும் இறந்தவர்களது ஆத்மா அங்கு வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும். அந்த நேரத்தில் உறவினரும் மற்றவர்களும் வீட்டுக்கு வந்து உற்சாகமாக இருந்தால் அதைக் கண்டு அந்த ஆத்மா வேதனைப்பட்டு மனம் வெதும்பி நிற்கும்.
சந்தோஷ அதிர்வலைகள் அந்த இடத்தில் இருந்து துயர அதிர்வலைகளை துரத்தி அடிக்க, துயரமுற்று உள்ள ஆத்மாக்களும் சடங்குகளை ஏற்க முடியாமல் அங்கிருந்து ஓடிப் போக நேரிடும். அதனால் அது படும் வேதனை, துயரம் போன்றவை அந்த குடும்பத்தின் அமைதி இன்மைக்கு வழி வகுத்து விடும். ஒரு விதத்தில் பார்த்தால் அதுவே துயரத்தோடு இருக்கும் ஆத்மாவின் சாபத்தைப் பெற வழி வகுத்து விடும்.
27) அது மட்டும் அல்லாது இறந்தவரது ஆத்மா அந்த வீட்டுக்கு வந்து கொண்டும் சென்று கொண்டும் இருக்கையில் அதைத் தொடர்ந்து வேறு சில ஆத்மாக்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அந்த நேரத்தில் அங்கு அடிக்கடி வருபவர்களை சில தீய ஆத்மாக்கள் தாக்க வாய்ப்புண்டு. பசியினாலும், தாகத்தினாலும் வாடும் இறந்தவரது ஆத்மாவே கூட அவர்களுடைய நடத்தையைக் கண்டு கோபமடையலாம்.
அதன் விளைவாக அவர்களுக்கு சாபமும் கொடுக்கலாம். ஆகவேதான் இவற்றை எல்லாம் தவிர்க்கவே அந்த பன்னிரண்டு நாட்களையும் தீட்டு காலம் எனக் கூறி அந்த வீட்டுக்கு யாரும் செல்லக்கூடாது, அப்படி சென்றாலும் வீட்டுக்கு திரும்பிய பின் குளித்த பின்னரே வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்ற விதியை வைத்து இருந்தார்கள்.
28) அப்படி என்றால் அனைவருக்கும் பன்னிரண்டு நாட்கள்தான் அசௌகரிய அல்லது தீட்டுக் காலமா என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் தரப்பட்டு உள்ள ஆசௌகர்ய காலத்தை அந்த காலத்தில் அவரவருக்கு இருந்ததாக நம்பப்பட்ட மன மற்றும் ஆன்மீக நிலைக்கேற்ப இத்தனைக் காலம் என வறையுறுத்தி வைத்து உள்ளார்கள்.
அவர்கள் சமூக கொண்டாட்டங்களில் ஈடுபடுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு அதற்கான கால அளவையும் வறையுறுத்தி அதை தீட்டுக் காலம் எனப் பெயரிட்டு உள்ளார்கள் (அந்த தீட்டுக் கால அளவு எத்தனை என்பது கடைசியில் உள்ளன).
உண்மையாகப் பார்த்தால் பண்டைக் காலத்தில் நிலவிய குடும்ப மன நிலை, மனக்கட்டுப்பாடு, மன உறுதி போன்றவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதே தீட்டுக்காலம் அதாவது மனத் துயர் நீங்குவதற்கு கொடுக்கப்பட்ட கால அளவு என்பதாகும். அவை விஞ்ஞான அடிப்படையில் அமைந்தவை அல்ல.
சில சடங்குகளை மிகைப்படுத்தி வேதங்கள் கூறியவை, வழி வழியாக வாய் மொழிச் செய்தியாக கூறப்பட்டு வந்தவற்றை என அவற்றின் சாரத்தை சற்றே உருமாற்றி அந்த காலத்தில் சமுதாயத்தில் தம்மை உயர்வாக காட்டிக் கொள்ள அந்தணர்கள் ஏற்படுத்திய சட்ட திட்டங்களே ஆகும். அதில் தீட்டுக் காலமும் ஒன்று ஆகும்.
29) தீட்டு சம்மந்தமாக சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள சில நியதிகளுக்கு விஞ்ஞான ரீதியிலான அடிப்படை காரணம் உண்டு என்றாலும் அவற்றில் இடை சொருகல் செய்யப்பட்டு உள்ள தீட்டுக் கால அளவிற்கு அடிப்படை ஆதாரம் எதுவுமே கிடையாது என்பதே உண்மை.
இதற்கு உதாரணத்தைக் காட்ட வேண்டும் எனில் ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்தால் அதனால் ஏற்படும் தீட்டு பிராமணர்களுக்கு பத்து நாட்கள், க்ஷத்திரியர்களுக்கு பதினைந்து நாட்கள், வைசியர்களுக்கு இருபது நாட்கள் மற்றும் சூத்திரருக்கு முப்பது நாட்கள் எனக் கூறப்பட்டு இருப்பதில் இருந்தே இவை வர்ணாஸ்ரம அடிப்படையில் உருவானது என்பது விளங்கும்.
30) அது மட்டும் அல்ல. ஒரே குடும்பத்திலும் கூட இன்னாருக்கு இத்தனை நாட்கள் தீட்டு என்றும் பல பிரிவுகளை வைத்து உள்ளார்கள். மரணம் அடைந்தவருடைய பங்காளியில் ஒருவருக்கு பத்து நாட்கள் தீட்டு, அதே குடும்பத்தில் இன்னும் சிலருக்கு மூன்று நாட்கள், இன்னும் சிலருக்கு ஒரு நாள் என தீட்டுக் காலத்தை அமைத்து உள்ளார்கள்.
உண்மையிலேயே தீட்டு காலத்துக்கு விஞ்ஞான ரீதியிலான அடிப்படை காரணம் முழுமையாக இருந்திருந்தால் அதெப்படி ஒவ்வொருவருக்கும் தீட்டு காலம் வேறுபட்டு இருக்கும் ?(அந்த தீட்டுக் கால அளவு எத்தனை என்பதை கடைசியில் உள்ளன).
31) இதில் இன்னொன்றையும் சரியான நியதியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தற்கொலை செய்து கொண்டவர்கள், விபத்தில் இறந்தவர்கள், யுத்தத்தில் மரணம் அடைந்தவர்கள் மற்றும் இயற்கையாக இறந்தவர்கள் என்பவர்களுக்காக அனுஷ்டிக்கப்பட வேண்டிய அசௌகரியம் மற்றும் தீட்டு கால அளவு வெவ்வேறாக உள்ளது.
இனி அடுத்த பன்னிரண்டு நாட்களும் செய்ய வேண்டிய சடங்குகள் என்னென்ன என்பதையும் அவற்றின் தத்துவங்களையும் ஆராயலாம்.
……….நாளை தொடரும்