Interesting facts about Ram temple | அயோத்தி ராமர் கோவில் அரிய தகவல்கள்

அயோத்தி ராமர் கோவில் அரிய தகவல்கள்
அயோத்தியின் ராம் ஜென்ம பூமியில் அமைக்கப்பட்டு வரும் ராமர் கோவில் எப்படி இருக்கும் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கோவில் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக உள்ளன. உலகின் கைதேர்ந்த நிபுணர்களைக் கொண்டு, கோவிலுக்கு பயன்படுத்தபடும் கல் உள்ளிட்ட அனைத்தும் பல கட்ட சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பிறகே கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உத்திர மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் கோவில் 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் 22 திறக்கப்பட உள்ளது

ராமர் பிறந்த இடமான அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராம பிரானுக்கு பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் பூமி பூஜை 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கோவிலின் கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த கோவிலில் சூர்யன், விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

​ராமர் கோவில் பற்றி இதெல்லாம் தெரியுமா?

கிட்டதட்ட ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் மொத்தம் 2.7 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும். இதில் 57,400 சதுரஅடியில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டதாக இக்கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளது. இந்த கோவிலுக்கு மொத்தம் 12 நுழைவு வாயில்கள் உள்ளன.

கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக புதிதாக அமைய உள்ள விமான நிலையம், ரயில் நிலையம் திறக்கப்பட்டன.

அதோடு மிக முக்கியமாக ராம் ஜென்ம பூமியையும், அயோத்தியில் உள்ள மிக முக்கியமான மற்றும் பழமையான ஹனுமன் கோவிலையும் இணைக்கும் சாலை விரிவாக்கப் பணிகளும் நடந்து வருகின்றன. ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஹனுமனையும் தரிசிக்க செல்ல வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராம் ஜெயண்ட பூமி பாத் 30 மீட்டர் அகலமும், பக்தி பாத் 14 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.

இக்கோவிலின் சுவர்களில் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கருவறை எண்கோண வடிவம் கொண்டதாகும். இக்கோவிலின் கர்ப்ப கிரகத்தில் நிறுவனப்பட உள்ள ராம் லல்லாவின் சிலையின் மீது சூர்ய கதிர்கள் படும் வகையில் கட்டப்பட்டுள்ளன. மூலவர் ராமர் சிலை 5 அடி உயரத்தில் வெள்ளை பளிங்கு கல்லால் அமைக்கப்படட்டுள்ளது. இந்த கோவிலுக்காக 2100 கிலோ எடையுள்ள மணி, எட்டாவிலிருந்து பிரத்யேகமாக செய்து கொண்டு வரப்பட்டுள்ளது. 6 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட இந்த மணியின் விலை 21 லட்சம் ரூபாயாகும்.

​1000 ஆண்டுகள் ஆயுட்காலம் :
அயோத்தி ராமர் கோவில் அரிய தகவல்கள்
1000 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலம் கொண்டதாக இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. பல கட்ட சோதனைகள் நடத்தி, ஸ்திரதன்மை ஆராயப்பட்டு ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் ஒவ்வொரு தளத்திலும் பிரார்த்தனை மண்டபமும், கீர்த்தனை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் முன்புறம் மிக பிரம்மாண்டமாக அனுமன் சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

ஒரே சமயத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் இந்த கோயிலில் வந்து தரிசனம் செய்யலாம்.

இந்திய விடுதலைக்குப் பின் இந்தியாவில் கட்டப்படும் மிகப் பிரம்மாண்டமான முதல் திருக்கோயில் இதுதான். ஐஐடி வல்லுநர்கள், டாட்டா குழுமம் மற்றும் எல் அண்ட் டி சிறப்பு பொறியியல் வல்லுநர்கள் இந்தக் கட்டுமான பணிக்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமர் கோயில் கட்டுமானம் குறித்து ரூர்க்கியில் உள்ள CSIR-Central Building Research Institute (CBRI) இயக்குநர் பேராசிரியர் ராமஞ்ச்ரலா பிரதீப் குமார், செய்தியாளர்களிடம் பேசும் போது, மற்ற கட்டுமான பொருட்களை விடக் கற்களின் ஆயுள் அதிகம் என்பதால் நாங்கள் கற்களைப் பயன்படுத்தினோம் என்று கூறியுள்ளார். ராமர் கோயில் வலிமையான கட்டிடக்கலையைப் பறைசாற்றும் விதத்தில் கட்டப்பட்டு உள்ளது. இரும்பு துருப்பிடிக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தவில்லை. கூடுதலாகக் கோயில் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டப்பட்டு உள்ளது " என்று கூறியுள்ளார். அதேபோல் இக்கோவில் தனித்துவமான கல்லைப் பயன்படுத்திக் கட்டப்பட்டு உள்ளது. ராமர் கோயிலில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கல்லிலும் பள்ளம் வெட்டப்பட்டு பிறகு அந்த பள்ளத்தில் மற்ற கற்களைப் போட்டுக் கட்டியுள்ளனர். ராமர் கோவிலின் முதன்மை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு கல் அனைத்தும் ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள பன்சி பஹர்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த இளஞ்சிவப்பு கல் வலுவாக இருப்பதோடு நீண்ட ஆயுட்காலம் கொண்டது. பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தைக் கொடுக்கக் கூடியது. ராம் லல்லாவின் சிலையைச் செதுக்குவதற்காக நேபாளத்திலிருந்து அயோத்திக்குச் சிறப்பு ஷாலிகிராம் கற்கள் கொண்டு வரப்பட்டன. இந்த ஷாலிகிராம் கற்களைச் செதுக்கி இந்த சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ராம் லல்லா 5 வயதுக் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். அதே மாதிரி அயோத்தியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஷாலிகிராம் கற்கள் சுமார் ஆறு கோடி ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் சிறப்பு யாகங்கள் நடைபெற்று வருகின்றன.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!