ஸ்ரீ ஆண்டாளின் அற்புதமான பாசுரங்கள் திருப்பாவை.
ஸ்ரீ கோதை நாச்சியார் பூமிப் பிராட்டியின் அவதாரமான தாயார், கண்ணனின் திவ்ய நாமங்களை, பாதகங்களைத் தீர்க்கும், பகவானின் திருவடிகளைக் காட்டிக் கொடுக்கும், வேதம் அனைத்துக்கும் வித்து என்று அறுதி இட்டுச் சொல்லப்படும் –கோதை தமிழ் எனப் புகழப்படும் திருப்பாவையில், கிருஷ்ணனின் நாமாக்களை, முப்பது பாசுரங்களில் அருளியிருப்பதை, இப்போது பார்க்கலாம்.
1. கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
2. ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
3.கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்
4.நாராயணன்
5.பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்
6.ஓங்கி உலகளந்த உத்தமன்
7.ஆழிமழைக்கண்ணன்
8.ஊழி முதல்வன்
9.பாழியந்தோளுடைப் பற்பநாபன்
10.மாயன்
11.வடமதுரை மைந்தன்
12.தூய பெருநீர் யமுனைத் துறைவன்
13.ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கு
14.தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்
15.பேய்முலை நஞ்சுண்ட வித்து
16.கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிய வித்து
17.வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்து
18 ஹரி
19.நாராயணன் மூர்த்தி கேசவன் (நாராயணனின் அவதாரமான கேசவன் )
20.மாவாய் பிளந்தான்
21.மல்லரை மாட்டிய தேவாதி தேவன்
22.மாமாயன்
23.மாதவன்
24.வைகுந்தன்
25.நாற்றத்துழாய் முடி நாராயணன்
26.நம்மால் (நமது திருமால் )
27.போற்றப் பறைதரும் புண்ணியன்
28.முகில்வண்ணன்
29.சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான்
30.புள்ளின்வாய் கீண்டியவன்
31.பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தவன்
32.சங்கொடுசக்ரம் ஏந்தும் தடக் கையன்
33.பங்கயக் கண்ணன்
34.வல்லானைக் (வலிமை மிகுந்த யானையை ) கொன்றவன்
35.மாற்றாரை மாற்றழிக்க வல்லான்
36.மாயன்,(வல்லானை மாயனை )
37. மாயன் (மணிவண்ணன் மாயன் )
38.மணிவண்ணன்
39.அம்பரு மூடறுத்தோங்கி உலகளந்த உம்பர்கோமான்
40.பந்தார்விரலியின் மைத்துனன் (நப்பின்னையின் மைத்துனன்—-யசோதையின் உடன்பிறந்த கும்பனின் பெண் நப்பின்னை—நீளாதேவி அம்சம் )
41.மலர்மார்பன்
42.முப்பத்துமூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் (நடுக்கம் ) தவிர்க்கும் கலி (மிடுக்கு உடையவன் )
43.செப்பம் உடையவன்
44.திறல் உடையவன்
45.செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்
46.ஆற்றப் படைத்தான் மகன்
47.ஊற்றம் உடையவன்
48.பெரியவன்
49.உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்
50.கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண்
51.திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் அங்கண்
52.பூவைப் பூவண்ணன்
53.அன்று இவ்வுலகம் அளந்தவன்
54.சென்று அங்குத் தென்னிலங்கைச் செற்றவன்
55.பொன்றச் சகடம் உதைத்தவன்
56.கன்று குணிலா எறிந்தவன்
57.குன்று குடையாய் எடுத்தவன்
58.வென்று பகை கெடுக்கும் வேலைப் பற்றியவன்
59.ஒருத்தி மகனாய்ப்பிறந்தவன்
60.ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தவன்
61.(தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்) நெருப்பென்ன நின்ற நெடுமால்
62.மால்
63.மணிவண்ணன்
64.ஆலின் இலையாய்
65.கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்
66.குறைவொன்றுமில்லாத கோவிந்தன்
67.இறைவன்
68.பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்தவன்
69.கோவிந்தன்
70.வங்கக் கடல் கடைந்த மாதவன்
71.வங்கக் கடல் கடைந்த கேசவன்
72. ஈரிரண்டு மால் வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்