மகாபாரதம் | 5 உத்தியோக பருவம் | பகுதி - 12

மகாபாரதம் | 5 உத்தியோக பருவம் | பகுதி - 12
அஸ்தினாபுரத்தின் சபா மண்டபத்தில் அனைவரும் துரியோதனனுக்கு புத்திமதி கூறினார்கள். அதற்கு துரியோதனன் இவ்வளவு நாட்கள் நிகழ்ந்த அனைத்திற்கும் நானே பொறுப்பாளி என்றும் குற்றம் முழுவதும் என்னைச் சார்ந்தது என்றும் நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி எண்ணுவதாக தென்படுகிறது. குரு வம்ச அரசாங்கத்துக்கு நான் ஒருவனே எல்லா விதத்திலும் அசைக்க முடியாத இளவரசன் ஆகின்றேன் எல்லோரும் ஒன்றுகூடி யுதிஷ்டிரனை இளவரசனாக்கியது பெரும் பிழையாகும். அதிர்ஷ்டவசத்தால் யுதிஷ்டிரன் பெற்ற ராஜ்யத்தையும் செல்வத்தையும் பகடை விளையாட்டில் பணயமாக வைத்து விளையாடி இழந்து விட்டான். யுதிஷ்டிரன் இழந்த ராஜ்யத்தை மனமுவந்து நாங்கள் அவனுக்கு திருப்பி கொடுத்து உதவினோம். மற்றுமொருமுறை அவன் அதை பணயமாக வைத்து இழந்தான். இது என்னுடைய குற்றமல்ல. இப்பொழுது பாண்டவர்கள் பாஞ்சால நாட்டு அரசர்களோடு சேர்ந்துகொண்டு குரு வம்சத்து அரசாங்கத்தின் மீது உள்நாட்டு கழகத்தை கிளப்பியிருக்கின்றார்கள். ஆயினும் தற்காப்பு நான் அவர்களைவிட மேம்பட்டவனாகவே இருக்கின்றேன்.

11 அக்ஷௌஹினி படைகள் என் வசம் இருக்கின்றன. பாண்டவர்களிடம் வெறும் 7 அக்ஷௌஹினி படைகளே இருக்கின்றன. யாராலும் வெல்ல முடியாத பீஷ்மர் துரோணர் கிருபர் அஸ்வத்தாமன் கர்ணன் ஆகிய மாபெரும் வீரர்கள் என் பக்கம் இருக்கின்றார்கள். யுத்தத்தில் நான் ஜெயிப்பது உறுதி. ஒருவேளை நான் தோல்வி அடைகின்றேன் என்றே வைத்துக்கொள்வோம் அவ்வாறு நிகழ்ந்தாலும் அதை நான் பொருட்படுத்த மாட்டேன். க்ஷத்திரியனான நான் வெற்றிக்கும் தோல்விக்கும் ஆயத்தமாக இருக்கின்றேன். என்னுடைய வழக்கு நீதிக்கு உட்பட்டது. ஆகையால் பயமுறுத்துதலுக்கு நான் அஞ்சுபவன் அல்ல. யார் நயந்து கேட்பதையும் நான் பொருட்படுத்த மாட்டேன். இந்த ராஜ்யம் முழுவதும் எனக்கு உரியது என்பதை நான் நன்கு அறிகிறேன். ஆகையால் ஒரு ஊசி முனை நிலம் கூட நான் பாண்டவர்களுக்கு கொடுக்கப் போவதில்லை என்று கூறிவிட்டு முதியோர்களை அவமானப்படுத்தும் வகையில் துரியோதனன் சபையிலிருந்து வெளியேறினான்.

கிருஷ்ணனை கைதியாக பிடித்து அடைத்து வைக்க துரியோதனன் தனது கூட்டாளிகளுடன் சதி ஆலோசனை செய்தான். இச்செய்தி சபையோரின் காதுக்கு எட்டியது. அவர்கள் பரபரப்பு மிக அடைந்தனர். கைது செய்ய வந்தவர்களுக்கு கிருஷ்ணன் தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டினான். அதை பார்த்த சதியாலோசனைக்காரர்கள் திக்குமுக்காடி விட்டார்கள். பார்க்கும் அனைவரும் கிருஷ்ணனாக காட்சி கொடுத்தனர். யாரைப்பிடித்து எங்கே கட்டி வைப்பது என்றே அவர்களுக்கு விளங்கவில்லை. கிருஷ்ணரின் இச்செயலால் ஒரு சிறு நலனும் வடிவெடுத்தது. திருதராஷ்டிரனுக்கு சிறிது நேரம் கண் பார்வைய கிடைத்தது. வந்த பார்வையைக் கொண்டு அவனுக்கு கிருஷ்ணனுடைய தெய்வீக ஆற்றல் ஓரளவு விளங்கியது. வேறு எதையும் பார்ப்பதற்கான கண்பார்வை தனக்கு வாய்க்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை பண்ணவில்லை. கிருஷ்ணரை பார்த்தை இன்பத்திலேயே அவர் லயித்திருந்தார்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!