மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 5

மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 5
பதிமூன்றாம் நாள் போர் சங்கு முழங்கியது. கௌரவ படைகளும் பாண்டவ படைகளும் அணிவகுத்து நின்றன. இன்றைய போரில் எத்தனை தம்பியர்களை இழக்க போகிறோம் என்ற கவலையுடன் இருந்தான் துரியோதனன். துரோணர் மீதும் கர்ணன் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்த போதிலும் அர்ஜுனனையும் கிருஷ்ணரையும் பார்க்கும் போது போர்க்களம் அவனுக்கு ஒரு மாயவலை போன்றே தோன்றியது.

அர்ஜுனனின் பாசத்திற்குரிய மகன் அபிமன்யு என்பதை துரோணர் அறிந்திருந்தார். அபிமன்யுவை கொன்றுவிட்டால் அர்ஜுனனின் போர் திறன் நிச்சயமாக பாதிக்கப்படும் என்று கணக்கிட்டார். அபிமன்யுவிர்க்கு ஆபத்து என்றால் அர்ஜுனன் வந்து அவனை காப்பாற்றிவிடுவான், எனவே அர்ஜுனனை திசை திருப்ப திட்டம் தீட்டினார். சம்சப்தர்கள் என்னும் ஏழு சகோதரர்களையும் எட்டாயிரம் வீரர்களையும் மூன்று யானை படைகளையும் அர்ஜுனன் மீது ஏவ திட்டம் தீட்டீனார்கள். அவர்களின் திட்டப்படி அவர்கள் மேற்கு திசையில் இருந்து அர்ஜுனனுக்கு சவால் விடுத்தனர். சவாலை ஏற்ற அர்ஜுனன் கிருஷ்ணரை மேற்கு நோக்கி ரதத்தை செலுத்த சொன்னான். நடக்க இருப்பதை அறிந்திருந்த கிருஷ்ணன் மௌனம் சாதித்தார். பின்பு அர்ஜுனனை நோக்கி வீரம் என்பது போர்களத்தில் கொன்று குவிப்பது மட்டும் அல்ல எத்துனை இழப்பு வந்தாலும் துவளாமல் இறுதி லட்சியத்தை அடைவது தான் உண்மையான வீரம் என்றார். அர்ஜூனக்கு ஒன்றும் புரியவில்லை. நிச்சயம் லட்சியத்தை அடைவேன் என்று கிருஷ்ணரிடம் வாக்களித்து போருக்கு தயாரானான். பின்பு மேற்கு நோக்கி பயணிதான்.

அர்ஜுனனை திசை திருப்பிய துரோணர் தன் வியூகத்தில் பாதி வென்றார். அடுத்த கணம் துரோணர் பத்மவியூகம் அமைத்தார். முகப்பில் அவர் இருந்து தலைமை தாங்கினார். துரியோதனன் பத்மவியூகத்தின் நடுவில் நின்றான். கர்ணன், துச்சாதனன், அஸ்வத்தாமன், துச்சாதனன், துஷ்ப்ரதர்ஷன், துஸ்ஸலன், அனுவிந்தன், உபசித்ரன், சித்ராக்ஷன் உட்பட 76 வீரர்களும் நூற்று கணக்கான காலாட்படை வீரர்களும் பத்மவியூகத்தின் சுவர்களாக நின்றனர்.

பத்மவியூகம் என்பது ஒர்புள்ளி தொடர் சுழல் போன்றதாகும். பத்மவியூகத்தை உடைத்து உள்ளே செல்வது கடினம். மீறி உள்ளே சென்று வெளியே வந்து விட்டால் வியூகத்தை வென்று விடலாம். உள்ளே செல்வதை விட வெளியே வருவது நூறு மடங்கு சிரமம். ஒவ்வொரு திருப்பத்திலும் இரண்டு அல்லது மூன்று மகாரதர்கள் இருப்பர். அவர்களுக்கு துணையாக அவர்களின் காலாட்படை வீரர்கள் இருப்பார்கள். வியூகத்தின் மத்திய புள்ளிக்கு சென்றுவிட்டால் எந்த திசையில் இருந்தும் யார் வேண்டுமென்றாலும் தாக்க கூடும். எப்பக்கத்தில் இருந்து அம்பு பாய்கிறது. யார் ஈட்டி எறிகிறார்கள். யார் போர்வாள் சுழற்றுவார்கள். கதாயுதம் எங்கிருந்து வரும் என்று எதையுமே யூகிக்க முடியாது. பத்மவியூகத்தை உடைக்க அசாத்திய ஆற்றல் வேண்டும்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!