கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?
கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்போம், நம்மில் பலரும் கோவிலுக்கு செல்லும்போது, வாசல் படியை தொட்டு கும்பிட்டு சென்றிருப்போம்…

கோவிலின் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். முன்னோர்கள் இதை ஏன் வழிபாடாக அறிவுறுத்தி இருக்கிறார்கள், அதன் அறிவியல் பூர்வமான நோக்கம் என்ன என்பதை பார்க்கலாம்…

ஒருவர், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது.

குனிவதால், அவரது உடம்பில் உள்ள சூரிய நாடியை இயங்க வைக்கிறது.

படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.

இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும்.

இதற்காகவேதான் நம் முன்னோர்கள், வழிபாடு முறைகளை நிர்ணயித்து உள்ளார்கள். ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்கவே, முன்னோர்களின் செயல்கள் அமைந்துள்ளது.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!