வாழ்க்கையில் நாம் செய்யவே கூடாத தவறுகள் என்று சில உள்ளது. அதை எல்லாம் எந்த சூழ்நிலையிலும், எந்த கோபத்திலும், எந்த அவசரத்திலும் செய்து விடவே கூடாது. அப்படிப்பட்ட சில தவறுகளை தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தவறுகளை எல்லாம் செய்துவிட்டு எத்தனை புண்ணிய கோவிலுக்கு ஏறி இறங்கினாலும், விமோசனம் கிடைக்காது. பாவமன்னிப்பு கிடைக்காது.
1. ஒருவரின் அன்புக்கு மதிப்பளிக்காமல் ஏங்க விடுவது. கண்டிப்பாக இதை செய்யக்கூடாது. அவர்களுக்கு அன்பு மீதே வாழ்கையில் பெரிய கேள்விக்குறி வந்துவிடும்.
2. பிறர் உழைப்பு ஊதியத்தை அபகரிப்பது (அ) பணத்ததை ஏமாற்றுவது. இது அவர்களின் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு சமம்.
3. பிறரின் வாழ்கைத்துணையை கவர்வது. இதில் மற்றொருவர் வாழ்க்கை சுக்குநூறாகிவிடும்
4. ரத்த உறவுகளை வீதியில் தவிக்கவிடுவது. கடவுளுக்கே நம் மீது இறக்கம் இல்லாமல் போய்விடும்.
5. பிறப்பால் ஒரு மனிதனை வகைப்படுத்துவது. இது பெரும் குற்றமாகும். மனிதனுக்கு அறிவு மற்றும் ஆன்மா என்ற மற்றொரு பகுதிகளும் உண்டு. அதில் அவர்களின் நிலை என்னவென்றே நமக்கு தெரிய பல வருடங்களாகும்.
6. பிறருக்கு நம்பிக்கை துரோகம் செய்வது
7. ஊரை ஏமாற்றி பிழைப்பவன், எந்த அதர்ம செயலுக்கும் துணிந்தவன், போன்றவர்களுடன் ஆழமான நட்பு கொள்வது தவறு. நம் வாழ்வில் அனைவருடனும் பழக வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் மேற் சொன்ன தீய மனிதர்களிடம் எத்தகைய உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது.
8. மறந்தும் கூட இவற்றை தொட்டுவிடக் கூடாது. சூதாட்டம் மற்றும் போதை பொருள்கள் மற்றுமொரு முக்கியமான அபாயம். என்று ஆன்மீக குரு கூறுவார்.
நமக்கு ஒரு பக்கம் கடவுள் பாதை. ஒரு பக்கம் அரக்க குணம் கொண்ட பாதை. சரியான பாதையை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.